Thursday, June 26, 2025
Sincostan டிகிரி - 2
Sincostan டிகிரி - 2
"இப்போ கோணம் என்றால் என்ன அது எப்படி உருவாகுது அதை எப்படி அளக்குறாங்க அப்படிங்கறது ஓரளவு புரிஞ்சிக்க முடியுது இல்லையா?"
"அதெல்லாம் ஓகே தான் சார் ஆனா இந்த sinθ cosθ..."
"பதறாதே அங்க தான் வரேன், இப்போ ஒரு முனையில் இருந்து இரண்டு கதிர்கள் போகுது அவற்றுக்கு இடையில கோணம் θ டிகிரி இருக்குன்னு வச்சுக்கோ"
"அதான் நேத்தே சொல்லிட்டீங்களே சார், அத வச்சு என்ன பண்றது?!"
"ஒரு கதிர் கிடை மட்டமா இருக்கு மற்றொரு கதிர் θ கோணத்துல நின்னுகிட்டு இருக்கு எந்த சப்போட்டும் இல்லாம!!"
"ஐயோ விழுந்துட போகுது சார்!!"
"அதனாலதான் என்ன சொல்றேன்னா செங்குத்தா ஒரு பில்லரை போட்டு நிறுத்து!!"
"அய்யோ சாரே இப்போ மனசிலாவுது சாரே இது செங்கோண முக்கோணம் அல்லே"
"ஆமா இது செங்கோண முக்கோணமே தான் இதுல மூணு பக்கங்கள் இருக்குமே அவை என்னன்னு சொல்லு"
"நாம எதை கோணோம்னு வச்சிருக்கோமோ அதற்கு எதிரில் இருக்கிறது எதிர்பக்கம் னு சொல்லுவோம் அதற்கு அடியில இருக்கிறது அடுத்துள்ள பக்கம் என்று சொல்லுவோம் மூணாவதா இருக்க அதிக நீளமுளள பக்கத்தை கர்ண பக்கம் அப்படின்னு சொல்லுவோம், ஆங்கிலத்தில் opposite side, adjacent side, hypotenuse ன்னும் சொல்லுவோம்!!"
"ஏ, அடிப் பொலியானு சூப்பரா சொன்னடா!!"
"அந்தப் பக்கத்தை ஷார்ட்டா o,a,h ன்னு கூப்பிடலாம் சார்"
"இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்கு கவனி, அஞ்சு சென்டிமீட்டர் பக்கத்துல ஒரு பில்லர் 50 சென்டிமீட்டர் பக்கத்துல ஒரு பில்லர் 50 கிலோமீட்டர் பக்கத்துல ஒரு பில்லர் 5 லட்சம் கிலோமீட்டரில் ஒரு பில்லர் ஆகாயத்துக்கு அடுத்த தெருவுல ஒரு பில்லர்னு போட்டு முடுக்கி வைப்போம்"
"ஆனா சார் எல்லா முக்கோணங்களிலும் கோணம் θ டிகிரி தானே சார்!!
"ஆமாம், அஞ்சு சென்டிமீட்டர் பக்கத்துல இருக்குற முக்கோணமாக இருந்தாலும் சரி ஆகாயத்துக்கு அடுத்த தெரு வரைக்கும் நீண்டு இருக்கிற முக்கோணமாக இருந்தாலும் கோணம் அதே θ டிகிரி தான்"
"ஆமாம் சார் ஆனா அந்த முக்கோணத்தோட பக்கங்களின் அளவுகள் மாறும் இல்லையா சார்"
"ஆமாம் (a,o,h), (a1,o1,h1),(a2,o2,h2).... என்று ஒவ்வொரு முக்கோணத்துக்கும் வெவ்வேற ட்ரிப்ளெட்ஸ் தான் அளவுகளா இருக்கும் "
"ஆனா எல்லாத்துக்கும் ஒரே கோணம் இருக்கே சார் இப்போ அவற்றுக்கு இடையில் ஏதேனும் ஒற்றுமை இருக்காதா?!"
"அதுதான் விஷயமே!!"
"சார் என்ன சொல்றீங்க!!
" முக்கோணத்தின் பக்க அளவுகளை ஒன்றோடு ஒன்று விகிதம் எடுத்தோம் என்றால் இதோ இந்த மாதிரி எண்கள் கிடைக்கும் (a/h, o/h, a/o)"
"விகிதம்னா பக்கங்கள ஒன்றிலிருந்து ஒன்று வகுத்து எழுத போறோம் அப்படி வகுக்கும்போது ஏதாவது ஒரு எண் கிடைக்கத்தானே சார் போகுது!!"
" நாம வரைந்த இருக்கிற ஐந்து சென்டிமீட்டர் முக்கோணமாக இருந்தாலும் அஞ்சு லட்சம் கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் முக்கோணமாக இருந்தாலும் மேலே சொல்லி இருக்கும் அதே மூன்று எண்கள் தான் பக்கங்களின் விகிதமாக அமையும்"
"அப்படியா சார், அப்போ (a1/h1,o1/h1,a1/o1), (a2/h2,o2/h2,a2/o2) ..... என்று எல்லாமே ஒரே செட் எண்களாகத் தான் வரப் போகுதா"
"ஒரே கோண அளவுல எவ்வளவு பெரிய சைஸ்ல முக்கோணங்கள் நீ வரைஞ்சாலும் அதன் பக்கங்களுக்கிடையிலான விகிதங்கள் மாறவே போறது இல்ல இங்க இருந்து தான் இந்த sinθ cosθ உண்டானது"
"அப்ப sinθ cosθ. என்பதெல்லாம் வானத்திலிருந்து குதிக்கல இந்த பக்கங்களுக்கு இடையே உள்ள விகிதங்கள் கொடுக்கிற எண் மதிப்பு தான் sinθ cosθ அப்படித்தானே சார்?!"
"ஆமாம், sinθ=o/h ,cosθ = a/h, tanθ =o/a"
"அந்த விகிதங்கள அப்படியே தலைகீழ திருப்பி போட்டா இன்னும் மூணு கிடைக்குமே"
"அடேய் நீ புத்திசாலி ஆயிட்ட டோய்"
"அதுக்கு ஏதாவது பெயர் இருக்கா சார்?!"
"சோறு வைக்கிறோமோ இல்லையா எல்லாத்துக்கும் பேரு வச்சிருப்போம் நாங்க"
" அப்படியா சார்?!"
" sin θ வ கவுத்து போட்டா h/o இதோட பேரு cosecθ, அது போல h/a= secθ அப்புறம் a/o = cotθ"
"அட ஆமாம் சார் நான் கூட இதெல்லாம் பார்த்து பயந்துட்டேன்"
"Sin30, cos60, tan45 போன்ற கோணங்களுக்கெல்லாம் மதிப்ப எண்களில் எழுதி இருக்காங்க இல்லையா இந்த மதிப்புகளுக்கு இன்னும் ஒரு பெரிய அட்டவணையே இருக்கும் அத பத்தி அடுத்த பகுதியில் சொல்கிறேன்"
"ஐயாம் வெயிட்டிங் சாரே!!"
Subscribe to:
Post Comments (Atom)
Sincostan - டிகிரி 3
Sincostan - டிகிரி 3 "சுற்றும் பூமி விட்டமும் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமு...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment