Thursday, September 9, 2010

மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை

மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம், செயற்பாடுகள், திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும், அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தந்தையின் மரபணுப் பட்டியலில் ஏதாவது ஓரிடத்தில் நோய் இருந்தால், அவரது மகனுக்கும் அந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. மரபணுப் பட்டியல் இருந்தால், மகனுக்கு முன்கூட்டியே மருந்து கொடுத்து அந்த நோயை தடுத்து விடமுடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரபணு பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, கொரியா, சீனா உட்பட 14 நாடுகள் தனித்தனியாக இப்பட்டியலைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளன.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்ஸிலைச் (சி.எஸ்.ஐ.ஆர்.) சேர்ந்த மரபணு விஞ்ஞானிகள், மரபணுப் பட்டியலைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

9 வார தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இத்தகவலை சி.எஸ்.ஐ.ஆர். தலைவர் சமீர் பிரம்மச்சாரி டில்லியில் தெரிவித்தார். இந்திய விஞ்ஞானிகளின் இச்சாதனைக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இச்சாதனை குறித்து நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவான் அறிவித்தார். விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். இச்சாதனை காரணமாக மரபணுப் பட்டியல் தயாரித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது

Wednesday, September 8, 2010

நாய்க் காய்ச்சல் (Dog flu)



உலகையே ஆட்டிப்படைத்து வரும் பன்றிக் காய்ச்சல் (Swine flu) பற்றிய பீதி அடங்குவதற்கு முதல் பன்றிகளில் இருந்து மனிதருக்கு தொற்றிய (H1N1) வைரஸுக்கள் போன்று நாய்களில் தொற்றைக் காண்பிக்கும் நாய்க் காய்ச்சல் (Dog flu) வைரஸுக்களின் (H3N8) தாக்கம் அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் நாய்களிடையே அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸுக்களின் தொற்று மனிதர்களிடையே அவதானிக்கப்படாத போதும் தொற்றுள்ள நாய்களில் இருந்து அவற்றுடன் நெருங்கி உறவாடும் மனிதருக்கு தொற்றக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த வைரஸின் தொற்றுக் கண்ட நாய்களில் காய்ச்சல்,பசியின்மை, சுவாசம் சம்பந்தப்பட்ட அல்லது சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கக் காணப்படும்.

இந்த வைரஸின் தொற்றுக்கண்டு இதுவரை ஒரு நாய் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Deadly Dog Flu Spreads

Jennifer Viegas, Discovery News

Aug. 18, 2009 -- Canine influenza, the potentially deadly H3N8 virus commonly known as dog flu, is spreading.

So far the virus has led to the death of one dog last week, closed down the kennel at Virginia's Fairfax County Animal Shelter, and, according to experts, is now affecting dogs in at least four other states: Colorado, New York, New Jersey, and Pennsylvania.

While the reason for the shelter outbreak, which killed a 15-year-old whippet owned by a clinical technician and sickened 26 dogs, remains unknown, it's possible that one or more infected dogs from Philadelphia or D.C. introduced the illness to Virginia.

I like to promise as follows you too try it!

Friday, September 3, 2010

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


• அனைத்து தொழில்களுக்கும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர் தொழிலே - யாரோ.


• இந்த சமூகத்தின் பொறுப்பு மிக்க, மிக முக்கிய அங்கத்தினர் ஆசிரியர்களே ஏனெனில் அவர்களின் கையில் தான் இந்த புவியின் எதிர்காலமே உள்ளது. - ஹெலன் ஹேல்டிகாட்.

• மீத்திறமுடைய மருத்துவரைப் போலவே மீத்திறமுடைய ஆசிரியர்களும் மிக அரிதாக வே உள்ளனர். ஆனால் மிக குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.- யாரோ

• ஆசிரியர்கள் எட்ட இயலாத சாதனைகளை குறைவான கருவிகளுடன் சாதிக்க வேண்டுமென எதிர்பார்க்கப் படுகிறார்கள்.அதிசயம் என்னவெனில் சில சமயங்களில் சாதித்தும் விடுகின்றனர்- யாரோ

• ஒரு ஆசிரியராக நான் உற்சாகமூட்டும் மேற்கோள்களையும் சொற்பொழிவுகளையும் மாணவர்களுக்கு உரைப்பதுண்டு. உண்மையிலேயே ஆசிரியர்களை உற்சாகமூட்டுவது அவர்களின் மாணவர்களின் முன்னேற்றமே -யாரோ

Monday, August 30, 2010

ஒரு தந்தையின் இழி செயல் - மகனது முன்னிலையில்

நேற்று பேருந்தில் ஒருவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் அனைவரும் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அப்போது ஒரு 9 வயது உள்ள பையன் கதறி அழுது கொண்டிருந்தான். பார்த்தால் அவன் அந்த நபரின் மகன். அப்பாவை அனைவரும் அடித்து விடுவார்களோ என பயந்து அழுது கொண்டிருந்தான். பிரச்சினை என்னவென்று அவனுக்கு புரியவில்லை. உடனடியாக அனைவரும் அவனை ஒன்று மில்லை அப்பா என தேற்ற ஆரம்பித்து விட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உட்பட. அந்த மனிதாபி மானத்தால் அந்த நபர் தப்பித்தார். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Friday, August 27, 2010

அடடே! -1


ஒரு செயின் பிராக்கெட் ஸ்டூல் ஆக முடியுமா? ஆகியிருக்கிறதே.  மேலே உள்ள படத்தை உற்று பாருங்கள். ஆம் நான் வழக்கமாக செல்லும் மெக்கானிக்கல் செட்டில் இருக்கும் துரை என்பவரின் எண்ணத்தில் உதித்த ஐடியா தான் இது. மூன்று இரும்பு ராட் மற்றும் செயின் பிராக்கெட் வட்டம் இவற்றை வெல்ட் செய்ததன் மூலம் வந்தது தான் இந்த ஸ்டூல். செயின் பிராக்கெட்டில் உள்ள பல் சக்கரத்தை கூட செயின் வைத்து பாதுகாப்பாக மூடியிருக்கிறார். பார்த்த உடனே எனக்கு தோன்றியது “அடடே!“
அடடேக்கள் தொடரும்....

Thursday, August 26, 2010

பால் எவ்வாறு பொங்குகிறது?

பாலில் கொழுப்பு மற்றும் நீர் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். பால் சூடேற்றப்படும் போது கொழுப்பு படலமாக பாலின் மேல் பகுதியில் படர்ந்து விடுகிறது. மேலும் சூடேற்றப்படும் போது பாலில் உள்ள நீர் ஆவியாகிறது. ஆவி மேல் நோக்கி இடம் பெயர முயலுகிறது. ஆனால் கொழுப்பு படலம் ஆவியை உள்ளேயே இருக்கச் செய்கிறது. மேலும் மேலும் பால் சூடேற்றப் படும் போது நீராவி முழு வேகத்துடன் கொழுப்பு படலத்தை மேலே தூக்கிய படி மேல் நோக்கி வருகிறது. எனவே பால் பொங்கி வழிகிறது

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...