Thursday, February 24, 2011

இஞ்சினியரிங் மோகம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆபத்தா?

அனைத்து பெற்றோர்களும் அதிக மதிப்பெண் அறுவடை செய்யும் தங்கள் பிள்ளைகளை

இஞ்சினியரிங் அல்லது மருத்துவம் படிக்க அனுப்பி விடுகிறார்கள். எனவே

அடிப்படை அறிவியல் பிரிவுகளில் சேரும் மாணவர்கள் சொற்ப மதிப்பெண் பெறும்

மாணவர்கள்தான்.

பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை

கிடைத்து விடுவதில்லை. நிறைய பேர் டிப்ளமோ சான்று பெற்றவர்களுக்கான

வேலை கிடைத்தாலும் போதும் என்று சொற்ப சம்பளத்தில் வேலை செய்து

வருகின்றனர்.

ஆனால் அடிப்படை அறிவியல் துறையானது நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு

வாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாகும். ஆராய்ச்சி அளவில் தற்போது

நிறைய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அறிவியல் ஆராய்ச்சிக்கு அரசு

ஊக்கம் அளித்து வருகிறது. ஆராய்ச்சி செய்யும் ஸ்காலர்களுக்கு அவர்கள்

வேலைக்கு சென்றாலும் சம்பளமாக கிடைக்காத பெரிய தொகையை அரசு

அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதாமாதம் வழங்கி வருகிறது. மேலும்

ஆராய்ச்சிக்கு பின்னரும் அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

எனவே நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல் கல்வி வாய்ப்புகளின்

குவியல் என்பதில் ஐயம் இல்லை.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...