Tuesday, January 18, 2011

சபரிமலைப் பயணம் தேவைதானா?


இன்றைய செய்தித்தாளில் முக்கிய செய்தியாக இடம் பெற்றுள்ளது சபரிமலைவிபத்து.
     உலகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும்!? இறைவனை சபரிமலையில் மட்டுமே காண இயலும் என்று கருதும் பக்தி போதை ஏறியோர் ஏறுவது சபரிமலை.
     விலைவாசியைவிட விறுவிறுவென்று ஏறுவது எது தெரியுமா? வருடா வருடம் சபரிமலை ஏறும் பக்தர் கூட்டம்தான்! விரைவில் திருப்பதி “வெங்கி“ தனது நம்பர் 1 இடத்தை ஐயப்பனிடம் இழக்கலாம். ஆனாலும் திருப்பதி செல்வது சொகுசாக அமையும் வண்ணம் அங்கு பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சபரிமலையில்? வருடாவருடம் நடக்கும் விபத்துகள் தான் இதற்கு பதில். இவ்வளவு துன்பத்தையும் மீறி லட்சக்கணக்கானோர் சபரிமலை செல்வது ஏன்? தன்னைத் தானே வருத்திக் கொள்வோருக்கே எனது உதவிகள் கிடைக்கும் என்று இறைவன் சேடிஸ்ட் போல் ஏதும் நிபந்தனை விதித்துள்ளாரா? இல்லை பின் ஏன்? படியுங்கள்.

1. ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நமது கஷ்டங்கள் தீர்ந்து விடாதா என்கிற பகுத்தறிவுக்கு புறம்பான எண்ணங்களுக்கு ஆட்படும் மக்கள் அங்கு செல்ல எண்ணுகின்றனர்.
2. இறைவனின் சிம்பத்தி யை பெற்று இறைவனை கைவசப்படுத்தி தாம் நினைத்த்தை சாதிக்கும் மக்கள் அங்கு போகின்றனர்.
3. சிலருக்கு “வின்னர்“ பட வடிவேல் கூறுவது போல் “கட்டம் சரியில்லாமல்அதற்கு நிவர்த்தி பரிகாரம் செய்ய ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்பட்டு செல்கின்றனர்.
4. “குருவி உட்கார பனங்காய் விழுந்த்து“ என்பது போல் தானே (சொந்த முயற்சியால்) விளையும் நன்மைகளை இறைவனின் கருணை என எண்ணி எப்போதோ செய்த வேண்டுதலுக்கு நேர்த்திக்கடன் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு செல்கின்றனர்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக தவறான வழிகளில் ஈட்டிய பொருளில் பாதியை காணிக்கை என்று கூறிக்கொண்டு இறைவனுக்கு கொடுத்து இறைவனையும் தனது திருட்டில் கூட்டாளியாக்குகின்றனர்.
மேற்காணும் பல வகைகளில் மக்கள் இம்மாதிரி இடங்களுக்கு செல்கின்றனர்.மொத்தத்தில் அனைவருமே தன்னம்பிக்கை என்னும் முதுகெலும்பற்ற ஜீவன்கள் தான்!

   மேலும் ஐயப்பனை சபரிமலையில் மட்டும்தான் காண இயலுமா? அவரை பிரதியெடுத்து வைத்துள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ளன. அங்கெல்லம் செல்வது மிகச்சுலபம் மட்டுமல்லாமல் வருமானம் தமிழ்நாட்டிற்கே கிடைக்கும். அதை விடுத்து லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு மட்டுமே சென்று பல்வேறு விதமான விபத்திற்கு ஆளாவது ஏன்? ஒவ்வொரு வருடமும் “சபரிமலை சென்ற பக்தர்கள் விபத்தில் பலிஎன்ற செய்திகள் வராமல் இல்லை.
   மகர ஜோதி தரிசனம்என்ற மக்களை முட்டாள்களாக்கும் மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றி லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி விபத்துகள் நடக்க காரணமாக இருக்கும் நிர்வாகத்தினை கேட்க யாரும் இல்லை. ஏனெனில் இங்கே 100க்கு 99 பேர் பகுத்தறிவு இல்லாத குருடர்கள்.

    எனவே யாரும் சபரிமலை செல்ல வேண்டாம்! தூணிலும் துரும்பிலும் இருப்பதாக கூறப்படும் இறைவன் குறைந்தபட்சம் தமிழக எல்லைக்குள் கூடவா இல்லை? அங்கே சென்று வருவாயை தமிழகத்திற்கு செலவிடுங்கள் உங்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.

Monday, January 10, 2011

ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி 08.01.2011

உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான கணித ஆசிரியர்களுக்கான

புத்தாக்கப் பயிற்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. ஆசிரியர்களிடம்

பொதுவாக இருக்கவேண்டிய Code of Conduct பற்றி பயிற்சி அளிக்கப் பட்டது.

நான் கருத்தாளர்களில் ஒருவராக சென்று பயிற்சி அளித்தேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 

100க்கு 100 மார்க் வாங்க எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது குறித்து பேசினேன். மேலும்

வினா எண் வாரியாக பொதுத்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை பட்டியலிட்டு அனைவருக்கும் வழங்கினேன்.

அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் வாங்கிக் கொண்டனர். எனது வியப்பு என்னவென்றால் நான் செய்தது

வெறும் வினா வகை பகுப்பாய்வு தான் அதனை யார் வேண்டுமானாலும் செய்ய இயலும். ஆனாலும்

இம்மாதிரியான வேலையை முன்னெடுத்து செய்ய அனைவரும் சுணக்கம் காட்டுகின்றனர்.

மேலும் ”கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு கணித செயல்பாடுகள் தெரிந்தாலே

ஒரு மாணவனை 100க்கு 100 மார்க் வாங்க வைத்துவிட முடியும். மாணவனின் முழு ஈடுபாடும்

ஆசிரியரின் முழு ஈடுபாடும் இருந்தால் கண்டிப்பாக அதனை சாத்தியப்படுத்த இயலும்“. என்ற எனது

கருத்தினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

Monday, January 3, 2011

அம்தேத்கர் திரைப்படம் வந்து விட்டதா?!

இந்த வார நீயா? நானா? வில் எதார்த்த படங்களையும் மிகை எதார்த்த படங்களையும் பற்றி பேசினார்கள்

அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று இயக்குநர் ராம் கூறியது,”தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக வரும்போது

பள்ளி மாணவர்களுக்கு சிறப்புக் காட்சி நடத்தி மாணவர்களை காணுமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை

விடப்படும், இந்த நடைமுறை “அம்பேத்கார்” படத்திற்கு செயல்படுத்தப்பட வில்லை“ என்பதை அந்த

மேடையில் பதிவு செய்தார். தலித் மக்களை காப்பாற்றுவதற்காகவே கட்சியை நடத்துவதாக கூறிக்கொள்ளும்

கட்சிகள் கூட இந்த விஷயத்தில் அரசை வற்புறுத்த வில்லை என்பதுதான் அந்த படத்திற்கு பரவலாக திரையரங்குகள்

ஒதுக்கப்பட வில்லை என்பதை விட சோகம்.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...