Tuesday, January 18, 2011

சபரிமலைப் பயணம் தேவைதானா?


இன்றைய செய்தித்தாளில் முக்கிய செய்தியாக இடம் பெற்றுள்ளது சபரிமலைவிபத்து.
     உலகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும்!? இறைவனை சபரிமலையில் மட்டுமே காண இயலும் என்று கருதும் பக்தி போதை ஏறியோர் ஏறுவது சபரிமலை.
     விலைவாசியைவிட விறுவிறுவென்று ஏறுவது எது தெரியுமா? வருடா வருடம் சபரிமலை ஏறும் பக்தர் கூட்டம்தான்! விரைவில் திருப்பதி “வெங்கி“ தனது நம்பர் 1 இடத்தை ஐயப்பனிடம் இழக்கலாம். ஆனாலும் திருப்பதி செல்வது சொகுசாக அமையும் வண்ணம் அங்கு பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சபரிமலையில்? வருடாவருடம் நடக்கும் விபத்துகள் தான் இதற்கு பதில். இவ்வளவு துன்பத்தையும் மீறி லட்சக்கணக்கானோர் சபரிமலை செல்வது ஏன்? தன்னைத் தானே வருத்திக் கொள்வோருக்கே எனது உதவிகள் கிடைக்கும் என்று இறைவன் சேடிஸ்ட் போல் ஏதும் நிபந்தனை விதித்துள்ளாரா? இல்லை பின் ஏன்? படியுங்கள்.

1. ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நமது கஷ்டங்கள் தீர்ந்து விடாதா என்கிற பகுத்தறிவுக்கு புறம்பான எண்ணங்களுக்கு ஆட்படும் மக்கள் அங்கு செல்ல எண்ணுகின்றனர்.
2. இறைவனின் சிம்பத்தி யை பெற்று இறைவனை கைவசப்படுத்தி தாம் நினைத்த்தை சாதிக்கும் மக்கள் அங்கு போகின்றனர்.
3. சிலருக்கு “வின்னர்“ பட வடிவேல் கூறுவது போல் “கட்டம் சரியில்லாமல்அதற்கு நிவர்த்தி பரிகாரம் செய்ய ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்பட்டு செல்கின்றனர்.
4. “குருவி உட்கார பனங்காய் விழுந்த்து“ என்பது போல் தானே (சொந்த முயற்சியால்) விளையும் நன்மைகளை இறைவனின் கருணை என எண்ணி எப்போதோ செய்த வேண்டுதலுக்கு நேர்த்திக்கடன் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு செல்கின்றனர்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக தவறான வழிகளில் ஈட்டிய பொருளில் பாதியை காணிக்கை என்று கூறிக்கொண்டு இறைவனுக்கு கொடுத்து இறைவனையும் தனது திருட்டில் கூட்டாளியாக்குகின்றனர்.
மேற்காணும் பல வகைகளில் மக்கள் இம்மாதிரி இடங்களுக்கு செல்கின்றனர்.மொத்தத்தில் அனைவருமே தன்னம்பிக்கை என்னும் முதுகெலும்பற்ற ஜீவன்கள் தான்!

   மேலும் ஐயப்பனை சபரிமலையில் மட்டும்தான் காண இயலுமா? அவரை பிரதியெடுத்து வைத்துள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ளன. அங்கெல்லம் செல்வது மிகச்சுலபம் மட்டுமல்லாமல் வருமானம் தமிழ்நாட்டிற்கே கிடைக்கும். அதை விடுத்து லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு மட்டுமே சென்று பல்வேறு விதமான விபத்திற்கு ஆளாவது ஏன்? ஒவ்வொரு வருடமும் “சபரிமலை சென்ற பக்தர்கள் விபத்தில் பலிஎன்ற செய்திகள் வராமல் இல்லை.
   மகர ஜோதி தரிசனம்என்ற மக்களை முட்டாள்களாக்கும் மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றி லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி விபத்துகள் நடக்க காரணமாக இருக்கும் நிர்வாகத்தினை கேட்க யாரும் இல்லை. ஏனெனில் இங்கே 100க்கு 99 பேர் பகுத்தறிவு இல்லாத குருடர்கள்.

    எனவே யாரும் சபரிமலை செல்ல வேண்டாம்! தூணிலும் துரும்பிலும் இருப்பதாக கூறப்படும் இறைவன் குறைந்தபட்சம் தமிழக எல்லைக்குள் கூடவா இல்லை? அங்கே சென்று வருவாயை தமிழகத்திற்கு செலவிடுங்கள் உங்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...