Tuesday, January 19, 2010
Quatations
– Walter windcell
கடனை லாவகமாக கையாள வழிகள்
கடனுக்கான மாத தவணை நீங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் சம்பளத்தில் 40 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
செலவுகளை கட்டாய செலவுகள் மற்றும் உல்லாச செலவுகள் என வகைபடுத்திக் கொள்ளுங்கள். முதலாவது செலவிற்கு கடன் வாங்கலாம் ஆனால் இரண்டாவது செலவின வகைக்கு கடன் வாங்குவதை தவிர்க்கலாம்
கடன் செலுத்துவதற்காக வைத்துள்ள பணத்தில் புதிய முதலீடு செய்து பெரிய இலாபம் ஈட்டி கடனை சரி செய்யலாம் என்று எண்ணாதீர்கள்
கடன் கட்ட இயலாத சூழலில் ஓடி ஒளிவதை விட கடன் கொடுத்த நிறுவனத்திடமே நிலவரத்தை சொல்லி கால நீட்டிப்பு கேட்கலாம்
வீட்டுக் கடன் போன்ற பெரிய கடன்களை காப்பீடு செய்துகொள்வது நல்லது
“Rather go to bed without dinner than to rise in dept”-Benjamin Franklin
மருத்துவ குறிப்பு
இம்முனொகுளோபுலின் E என்பது இரத்த வெள்ளையணுக்களில் சுரக்கும் எதிர் உயிரி ஆகும். அது பாக்டீரியா,வைரஸ் போன்றவைகளிடமிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. இம்முனோகுளோபுலின் E ஆனது உடலில் mast cell உடன் இணையும் போது “ஹிஸ்டமைன்“ என்ற இரசாயனம் சுரக்கிறது. இது சுவாசக்குழாயில் உள்ள இரத்த நாளங்களை வீங்கச் செய்து சளி போன்ற திரவத்தை வெளியேற்றுகிறது. இது மூச்சு குழாய் துவாரத்தை சிறிதாக்குவதால் மூச்சிறைப்பு ஏற்பட்டு சுவாசித்தல் சிரமமாகிறது.
நிவாரணம் 1
ஹிஸ்டமைன் மட்டுமே நாசல் அலர்ஜிக்கு காரணம் என்பதால் மருத்துவர்கள் ஆன்டி ஹிஸ்ட மைன் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். எ.கா., chlorophinaramine, citrizine, etc.
நிவாரணம் 2
corticosteroid ஹார்மோன் அட்ரினலில் சுரக்கிறது. இது உடலின் சுயபாதுகாப்பு உணர்வினை மட்டுபடுத்துகிறது. இதன் சுரப்பு அதிகரித்தால் உடல் சுய பாதுகாப்பு அமைப்பினை மறுத்து போகச் செய்து உடலை நோய் தொற்றுக்களுக்கு இலக்காகச் செய்துவிடும். குறைந்தாலோ உடல் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும்(hyper sensitivity) எனவே மருத்துவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளையும் அலர்ஜிக்கு பரிந்துரைக்கின்றனர்.
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...