Saturday, December 27, 2025

சிறை - பட விமர்சனம்

சிறை - தமிழ்ப்படம்
சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக் கொண்டிருந்தோமா!! என்றெல்லாம் சினிமாவின் போக்கு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவித்துவமாக அங்கலாய்த்து கொண்டிருந்தார்!! ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் படங்கள் சினிமாவின் போக்கை ஓரளவு நல்வழியில் நெறிப்படுத்தி செல்கின்றன. ஜெய்பீம் படத்தில் தமிழ் அவர்களைப் பார்த்து எவ்வளவு பெரிய கொடூரன் என்றெல்லாம் சபித்திருப்போம். ஆனால் அவர் தோற்றத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் மனிதர் பேரன்பும் பெருங்கருணையும் உள்ளவராக அல்லவா இருக்கிறார்!! ஏற்கனவே டாணாகாரன் படத்தில் பயிற்சி காவலர்களின் நிலை பற்றி பேசியவர் இந்த படத்தில் கைதிகளை கோர்ட்டுக்கு பத்திரமாக அழைத்துச் சென்று வரும் ஏ ஆர் போலீஸ் மற்றும் அவர்கள் அழைத்துச் செல்லும் கைதியின் பின்புலம் என்றெல்லாம் அழகான ஒரு கதையை படைத்துள்ளார். திரைக்கதையிலும் வசனத்திலும் கூட உதவி செய்துள்ளார். ஆனால் இயக்குனர் சுரேஷ் ராஜ்குமாரி. விக்ரம் பிரபு கெரியரில் மிகச் சிறந்த ஒரு படம் என்று கூறலாம். அவருக்கு இணையராக நடித்தவர் அவ்வளவு பிரபலம் இல்லாத ஒரு நடிகை போலத்தான் இருக்கிறார். மற்றும் ஒரு இளம் நடிகராக அக்சய குமார் ஒன்று ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார் ஒரு அறிமுக நடிகரிடமிருந்து இவ்வளவு ஒரு தேர்ந்த நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். அந்த இளம் நடிகருக்கு இணையாக நடித்திருந்த இளம் அழகாக நடித்திருந்தார். படத்தில் யாருக்கும் பெரிய மேக்கப் இல்லை புத்தம் புது ஆடைகள் எல்லாம் இல்லை. படத்தின் முதல் காட்சியே பட்டாசாக இருந்தது. அது போல இன்டெர்வெல் ப்ளாக்கும் லப்டப்பை எகிறச்செய்யும். வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை கோர்ட்டுக்கு விசாரணை கைதி அழைத்துச் செல்லப்படுகிறார் இந்த பயணத்தில் ஊடாக அவரது ஃப்ளாஷ் பேக் கதையும் சொல்லப்படுகிறது. துவக்கத்தில் கைதி தப்பிவிட போலீஸ் காரர்கள் மாட்டிக் கொள்வார்களோ என்று நினைக்கும் நாம் பிறகு கைதி சிறையில் இருந்து வெளியே வந்துவிடமாட்டானா என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள். "நம்மிடம் சிறிதளவு அதிகாரம் இருந்தால் கூட நம்மிடம் வந்து நிற்கும் எளிய மனிதர்களின் துயர் துடைக்க அந்த அதிகாரத்தை பயன்படுத்த தயங்க கூடாது" என்று கூறுவதோடு படம் முடிகிறது. நான் எப்போதும் எனது மனதில் ஆழமாக பதிய வைத்து இருப்பது இதைத்தான். ஆசிரியர் பணி என்பது வேலை அல்ல அது ஒரு பொறுப்பு. நம்மிடம் கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு பாடத்தையும் வாழ்வியல் அறங்களையும் போதிக்க வேண்டியது நமது கடமை. ஆகவே படத்தின் இறுதிக் காட்சி இதயத்தில் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டது. படத்தை அருணும் நானும் திருச்சி மாரிஸ் ராக் தியேட்டரில் பார்த்தோம். தியேட்டரின் நட்ட நடுவில் அமர்ந்து பார்த்தோம். டால்பி ஸ்டீரியோ எஃபெக்ட் அவ்வளவு அற்புதமாக இருந்தது. படத்தின் ஒளிப்பதிவு நாம் திரைக்குள் இருந்தவாறே நடப்பதை பார்க்கிறோமோ?! என்கிற மயக்க நிலையை தருவது போன்று மெஸ்மெரைசிங் ஆக உள்ளது. படத்தின் பின்னணி இசை பதட்டத்தை நம்முள் கடத்துகிறது. அவ்வளவு பெரிய அரங்கம் முழுதும் நிறைந்திருந்தது. வருட இறுதியில் வந்துள்ள சிறந்த படைப்பு அனைவரும் பாருங்கள். கதாநாயகியின் அக்கா ரோலில் வருபவர் இந்தப் படத்தில் வரும் இதே சூழலில் இதே கதாபாத்திரத்தில் ஏற்கனவே வேறு ஒரு பிரபலமடையாத ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை கூட நான் பார்த்திருந்ததால் எனக்கு தோன்றியது.

No comments:

Post a Comment

சிறை - பட விமர்சனம்

சிறை - தமிழ்ப்படம் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக்...