Thursday, April 7, 2011
Wednesday, April 6, 2011
Monday, April 4, 2011
ஆசிரியர்கள் என்னதான் செய்வது என்று சொல்லுங்களேன்!!
நண்பர் ஒருவர் மூலம் கேள்விபட்ட ஒரு சம்பவம் இது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது நடந்ததாக கூறினார்.
இந்த சம்பவம் மாவட்டக் கல்வி அதிகாரி ஒரு கூட்டத்தின் போது கூறியதாக நண்பர் கூறினார்.அது என்னவென்று தானே கேட்கிறீர்கள்
சொல்கிறேன்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, இயற்பியல் தேர்வு நாள். நாம் ஹீரோ பெயர் சரத்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
தேவையான அனைத்துபாடப் பகுதிகளையும் நிலைநிறுத்தி தேர்வுக்கு முழு தயார் நிலையில் தேர்வு அறை செல்கிறார். பாடப் பகுதியை
மனதில் நிலை நிறுத்தி என்று நினைத்து விடாதீர்கள். அவர் தனது பேண்ட்டின் உள்ளே காலைச் சுற்றி இரப்பர் பேண்ட் போட்டு அதனுள்
பாடப் பகுதி சார்ந்த துண்டுச் சீட்டுகளை அடுக்கடுக்காக வைத்திருந்தார். சற்றேறக் குறைய ஒரு காலுக்கு 20 வீதம். அவற்றிற்கான
இன்டெக்ஸ் எதுவும் இருந்ததா என தெரியவில்லை.
மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான பறக்கும் படை தேர்வு அறைக்குள் நுழைகிறது. நமது ஹீரோ பரபரப்படைகிறார்.
இதனை அதிகாரி கண்ணுற்றார். தன் அனுபவத்தின் வாயிலாக சம்மந்தப் பட்ட மாணவர் மேல் சந்தேகம் திரும்ப மாணவரிடத்தில்
வருகிறார். பேப்பரின் அடியில் ஒரு முழுதாள் அளவிலான பாடப்பகுதி இருந்தது.
”தம்பி சற்று எழுந்து என்னுடன் அலுவலகம் வரையில் வா!” என்று அதிகாரி கூறினார்.
”சார், இந்த ஒருமுறை மன்னித்து விடுங்கள் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்னை விட்டுவிடுங்கள்”, சரத்குமார்
”தம்பி உன்னை எதுவும் செய்யப் போவதில்லை சற்று அமைதியாக என்னுடன் வா, கண்டிப்பாக நீ தேர்வு எழுத அனுமதிக்கிறேன்
பயப்படாதே”, அதிகாரி.
”சார் இவனை அலுவலகத்திற்கு அழைத்து செல்லுங்கள்” என்று முதன்மைக் கண்காணிப்பாளரிடம் கூறிவிட்டு மாவட்டக்கல்வி
அதிகாரி மற்ற அறைகளை பார்வையிட தயாரானார்.
சிறிது நேரத்தில் ” ஐயோ ஓடிவிட்டான் புடிங்க, புடிங்க”, என்று முதன்மைக் கண்காணிப்பாளரின் கூச்சல் பள்ளி முழுவதும்
எதிரொளித்தது.
அனைவரும் அவர் நின்ற இடத்திற்கு ஓடினர், அது பள்ளியின் சுற்றுச் சுவர் ஓரம். கிட்டதட்ட அவர் உயரம் உள்ள சுவர்.
மாணவன் அதனை ஒரே ஜம்பில் தாண்டி கம்பி நீட்டியிருக்கிறான் என்பது தெளிவானது. அவர் அச்சுவரை ஏறவும் முடியாமல் செய்வதறியாது
திகைத்து நின்று கொண்டிருந்தார்.
உடனே பள்ளி வாயிலுக்க அனைவரும் விரைந்தனர். மாவட்டக் கல்வி அதிகாரி தன்னுடன் வந்த பறக்கும் படை உறுப்பினரை
மாணவனை பிடித்துவர அனுப்பினார். அவர் அங்கு பைக்கில் சென்று கொண்டிருந்தவரிடம் நிலைமையைக் கூறி அவனை பிடிக்கச் சென்றார்.
பள்ளி ஊரின் நடுவில் இருந்ததால் மாணவன் தெருவுக்குத் தெரு புகுந்து ஓடினான். மா.க.அதிகாரியும் தனது ஜீப்பில் தொடர்ந்தார். மேலும்
அங்கு வந்த அந்த மாணவனின் ஆசிரியரையும் உதவிக்கு அழைத்துக் கொண்டனர்.
அந்த சமயத்தில் அனைவரின் அதிர்ச்சியையும் மேலும் அதிக படுத்தும் விதமாக சரத்குமார் அங்கு மாடு கட்ட பயன் படுத்தப் பட்ட
கயிற்றையும் அவிழ்த்துக்கொண்டு ஓடினான். அனைவரும் பின் விளைவுகளை எண்ணி அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொடர்ந்து ஓடிய சரத்குமார் இறுதியாக ஒரு வீட்டினுள் பதுங்கினான். அனைத்து ஆசிரியர்களும் வீட்டிற்கு வெளியில் இருந்து
அவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அங்கு இருந்த அவனது ஆசிரியர் ”டேய் சரத்குமார், டீ.இ.ஓ விடம் நான் கூறுகிறேன்
தயவு செய்து வெளியே வா! கண்டிப்பாக நீ தேர்வு எழுதலாம்” என்று கூறினார்.
அதற்கு ”நான் உன்னை நம்ப மாட்டேன், நீ அப்படித்தான் கூறுவாய் வந்தால் மாட்டி விட்டுவிடுவாய்” என்று ஒருமையில் கூறினான்.
சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண்மணி ”சார் தான் இம்புட்டு சொல்லுறாறே நீ போயேண்டா” என்று கூறினார்.
அதற்கு” ஒனக்கு தெரியாதுக்கா அவன்களை பற்றி. நான் இப்போ தற்கொலை செய்து கொள்ளத்தான் போகிறேன். அவன்களை
கம்பி எண்ண வைத்தால் தான் அவன்களுக்கு புத்தி வரும்” என்று ஏக வசனத்தில் கூறினான்.
வெளியில் நின்ற அனைவரும் மிகுந்த பதட்டத்தில் இருந்தனர். சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் இதற்கு
முடிவு கட்டும் விதமாக பின்புறமாக சென்று அவனை பிடித்துக் கொண்டனர். அவனிடம் மாவட்டக் கல்வி அதிகாரி உள்ளிட்ட அனைவரும்
”நீ வந்து தேர்வு எழுதினால் போதும் சற்று உடனே வா, கிட்டதட்ட ஒருமணி நேரம் கடந்து விட்டது” என்றனர்.
”நான் எதுவும் படிக்கவில்லை புத்தகம் வைத்து தேர்வு எழுத அனுமதித்தால் தான் வருவேன்” என்று அடம் பிடிக்க
அதற்கும் சம்மதித்து அவனை தேர்வு கூடத்திற்கு ஒருவழியாக அழைத்து வந்தனர்.
அவனை ஆசுவாசப் படுத்துவதற்காக மா.க.அதிகாரி அவனுக்கு தண்ணீர் வழங்குமாறு கூறினார். அவன் தொடர்ந்து 6 டம்ளர்
தண்ணீர் குடித்தான்.
அவனை பிடித்து வந்து தேர்வு எழுத வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்த ஆசிரியர்கள் அனைவரும் 12 டம்ளர் தண்ணீர்
குடித்தனர். நிலைமை இப்படி இருக்க மாணவர்களை நாங்கள் எப்படித்தான் கண்டிப்பது. ஒரு வேளை அவன் இறந்திருந்தால் பத்திரிக்கைகள்
அனைத்தும் மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்களை கொடூரமானவர்களாக சித்தரித்து அசிங்கப் படுத்தியிருக்கும். இத்தனைக்கும்
துண்டுத்தாள் வைத்து தேர்வு எழுதிய அவனை பிடிப்பது மற்றும் விசாரிப்பதும் தேர்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டுத்தான்.
”ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்தது பழங்காலம்,
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயப்படுவது நவீனகாலம்”

Subscribe to:
Posts (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...