Saturday, February 28, 2026
தாய் கிழவி
தாய்க் கிழவி
ஊரே இவ எப்படா ஒழிந்து போவா என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ரவுடி பேபி கிழவி ராதிகா.
சொந்த மகன்களும் கிழவி எப்ப ஒழிவா சொத்த பிரிச்சுகிட்டு கடன்களை அடைத்து வாழ்க்கையை கொண்டாடலாம் என்று தவம் கிடக்கிறார்கள்.
சாக கிடக்கும் தருவாயில் அதே மகன்கள் கிழவியை காப்பாற்ற லட்சக்கணக்கு கடன் படுவதோடு கோயில் குளம் எல்லாம் ஏறி வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள் பாசத்தில் அல்ல நிர்ப்பந்தத்தில்.
நீண்ட நேரம் புகழ்ந்து கொண்டிருக்கும் பட்டாசு அதிரிபுதிரியாக வெடிக்கும் அல்லவா அது போல படத்தின் முடிச்சுகள் அவிழும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அறிமுக இயக்குனர் சிவகுமார் பலே கில்லாடி தான்.
படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனும் தான் ஏனென்றால் படத்தின் கதை நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இருக்கும் பட்சத்தில் செலவை படத்திற்கு செய்யாமல் ப்ரமோஷனுக்கு செய்து லாபம் அடைந்து விடலாம் என்கிற அருமையான பார்முலாவை பிடித்துள்ளார்!!
ராதிகா கிழவி கதாபாத்திரத்தை அசால்டாக அடித்து நொறுக்கி இருக்கிறார்.
இயக்குனர் கமல் அவர்களின் அதி தீவிர விசிறி போல. படத்தில் கமலை பற்றி போற்று போற்று என்று போற்றி இரண்டாவது பட வாய்ப்பை ராஜ்கமல் இடமிருந்து பெற்றுள்ளார்.
முனீஸ் காந்த் முதிர் கண்ணனாக நடித்துள்ளார்.
எதற்காக இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் உருக்கமாக சொல்லும் இடம் அனைவரையும் கலங்க செய்து விடுகிறது.
கோவில் அருகில் இருக்கும் ஒரு குடிகாரர் வாய்ப்பு கிடைத்ததும் சாமியார் ஆக முயற்சிப்பதும் தனக்குத்தானே "கங்காரு அடிகளார்" என்று பெயர் சூட்டிக் கொள்வதும் சரியான காமெடி
அண்ணன்களிடம் படித்தவன் என்கிற கெத்து காண்பிக்க பால சரவணன் மருத்துவர் பேசும் ஆங்கிலத்தை அவரது முக பாவத்தை வைத்து புரிந்து கொண்டதாக மொழியாக்கம் செய்யும் இடம் சரியான கிச்சுகிச்சு.
பால சரவணன் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்.
கமலின் தீவிர ரசிகராக ரேடியோ செட் காரராக வரும் சிங்கம் புலி சிரிப்பு புலி.
பொருளாதார சுயசார்பு நிலையே பெண்களுக்கு சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பெற்று தரும் என்கிற மையச்சரடை வைத்து அழகான படத்தை நமக்கு தந்துள்ளார் அறிமுகம் இயக்குனர்
Subscribe to:
Comments (Atom)
தாய் கிழவி
தாய்க் கிழவி ஊரே இவ எப்படா ஒழிந்து போவா என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ரவுடி பேபி கிழவி ராதிகா. சொந்த மகன்களும் கிழவி எப்ப ஒழிவா சொத...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...