Friday, June 26, 2026

Balan malayalam movie

பாலன் - மலையாளம்
ஒரு வேலையாக சென்னை வந்திருந்தேன் ஒரு மாலைப் பொழுதில் தியேட்டர்ஸ் நியர் மீ என்று கூகுளில் தேடினேன். பார்த்தால் பொடனிக்கு பின்னாலேயே 2 கிலோ மீட்டரில் சத்தியம் தியேட்டர் இருக்கிறது. 2005ல் திருமணமான பிறகு நானும் அகிலாவும் முதன் முதலில் படம் பார்த்த தியேட்டர் இதுதான். சந்திரமுகி படம் பார்த்தோம். வீட்டில் இருந்து வடை பலகாரங்கள் எல்லாம் ஒரு கவரில் போட்டு கொடுத்து அனுப்பி இருந்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் வாசலிலேயே பறிமுதல் செய்து கொண்டு வெறும் கையோடு தான் எங்களை உள்ளே அனுப்பினார்கள். "அடப்பாவிகளா வட போச்சே" என்னுடன் இருந்த நண்பரை அழைத்தேன் அவரும் ஆர்வமாக ஒப்புக் கொண்டார். 6.50 க்கு தொடங்கும் படத்துக்கு தங்கியிருந்த இடத்திலிருந்து 6.40 க்கு கிளம்பினோம். சரியாக படம் தொடங்கிய உடனே உள்ளே போய்விட்டோம். "மஞ்சும்மேல் பாய்ஸ்" என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனரின் அடுத்த படைப்பு இது. ஆதிசேஷன் என்கிற குட்டிப்பையன் தான் படத் தலைப்புக்கான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தான் . ஃபர்ஸானா என்பவர் தான் கதாநாயகி. குட்டிப்பையன் அம்மா. ஃபர்ஸானா இந்த படத்தில் தான் ஏற்று இருக்கும் கதாபாத்திரத்திற்கான உடல் மொழியை அனேகமாக ஸ்ட்ரா படத்தில் ஹென்ஸன் அவர்களிடமிருந்து எடுத்திருப்பார் போல தெரிகிறது. அந்த அழகான குட்டிப் பையன் கண்களில் இருக்கும் பரிதாபகரமான அப்பாவித்தனம் தான் பார்ப்பவர்களை பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. படம் தொடங்கும் போது அம்மாவும் பிள்ளையும் பேருந்தில் ஏறுகிறார்கள் ஒரு பெயரை அவர்களுக்கு வைத்துக் கொண்டு புதிய கதை ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் சில நாட்களே தங்கி கொண்டு பிறகு புறப்பட்டு விடுகிறார்கள். எதற்காக இந்த ஓட்டம் ?! குட்டிப் பையனின் படிப்பு என்னாவது?! என்று நமக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. பேருந்தில் ஏறிய உடனேயே அந்த பையன் 'அடுத்தது எனக்கு என்ன பெயர் மா என்ன கதை' என்று ஆர்வத்தோடு கேட்டு தெரிந்து கொள்கிறான். பிறகு தனியாக இருக்கும் ஒரு பணக்காரப் பாட்டி வீட்டில் ஹோம்நர்சிங் வேலை இருப்பதை அறிந்து போய் சேருகிறார்கள். பார்ப்பதற்கு முதலில் மிகவும் முரட்டு பாட்டி போல தெரிந்த அவர் பிறகு இவர்கள் மீது பேரன்பு கொண்டு இவர்களை அந்த வீட்டிலேயே இருக்கச் சொல்லி வற்புறுத்துகிறார். அந்த பாட்டி வற்புறுத்தி கேட்பதால் தனது கொடூரமான முன்கதையை கூறுகிறாள். பாட்டி வீட்டில் இருக்கும் கதாநாயகி தனது பையனை பள்ளியில் சேர்க்கிறாள். ஆனால் வீட்டின் பின்புறமாக நெடுந்தலைவு நடந்து சென்று போய் வேறு ஒரு இடத்தில் இருந்து பள்ளி வேனில் ஏற்றுகிறாள். திரும்ப வரும்போது அங்கிருந்தே அழைத்து வருகிறாள். "நான் வருவதற்கு எவ்வளவு தாமதம் ஆனாலும் நீ காத்திருக்க வேண்டும் நான் நிச்சயமாக வருவேன்" என்று ஒரு தருணத்தில் அவனிடம் அழுத்தமாக கூறுகிறாள். இதற்கிடையில் கதாநாயகியை ஒரு பாலியல் தொழிலாளி மிரட்டி தொழில் செய்ய வற்புறுத்துகிறாள். அவளுடன் ஏற்கனவே பழக்கமானவள் போல தெரிகிறது. பையன் பள்ளியில் இருந்து வந்து அந்த இடத்தில் இறங்கி நடுக்காட்டில் காத்திருக்கிறான். வீட்டில் அந்த பாலியல் தொழிலாளி இடத்தை கண்டறிந்து வந்து மிரட்டியபடி இருக்கிறாள். அதே நேரத்தில் வீட்டிற்கு தெரிந்தவர்கள் வந்து கொண்டிருப்பதாக அழைப்பு வருகிறது. அப்போது ஒரு சம்பவம் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. அந்த இடத்தில் படத்தின் இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு இன்னும் பரபரப்பாக செல்கிறது. படத்தின் பிற் பாதியில் தான் டொவினோ தாமஸ் வருகிறார். படத்தில் பாலகனாக வரும் பாலனும் அதே கதாபாத்திரத்திற்கு பதின்ம வயது பையனாக நடித்திருந்த பையனும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். அருமையான படம் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சீட்டின் நுனியிலேயேதான் உட்கார்ந்து பார்க்க வேண்டும். அவ்வளவு விறுவிறுப்பு ஆனால் சற்று மெதுவாக செல்லும் ஸ்லோ பர்னிங் வகை.

No comments:

Post a Comment

அணு உலை தயார்நிலை!!

“அப்பா, அணு உலையில் முதல் வெடிப்பை எப்படி துவங்கி வைப்பார்கள்?” “முதல்ல ஒண்ணு தெரிஞ்சிக்கோ, அணு உலைக்குள் பெரிதாக வெடித்து சிதறும் வேலை எத...