Monday, July 11, 2011


சிசிஆர்டி(Center for Cultural Resources and Training) ஹைதராபாத்தில் ஒரு மாதம்

            சிசிஆர்டி யின் மூலம் வழங்கப்படும் ஒரியன்டேஷன் கோர்ஸில் ஒருமாத பயிற்சிக்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து  செல்லவேண்டியவர்கள் மறுத்ததால் அந்த வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டது. நானும் எனது நண்பர் செல்வராஜ் அவர்களும் சென்று வந்தோம்
     நமது கலை பண்பாடு சம்மந்தமாக நிறைய வகுப்புகள் நடத்தப் பட்டன. ஆனால் இந்தியர்களின் ஒட்டு மொத்த பண்பாடு என்பது குறித்து பேசியவர்கள் அனைவருமே வேதத்தையே துணைக்கு அழைத்தனர். இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களின் பண்பாடு மத கோட்பாடு குறித்து ஒருவரும் பேசவில்லை. இஸ்லாமியர்கள் நடத்திய படையெடுப்புகளால் நமது பண்பாடு ஓரளவிற்கு பாதிப்புக்குள்ளானது என்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட ஆரியர்களின் ஊடுருவலால் இந்தியா வெங்கும் பரவியிருந்த திராவிட உயர் பண்பாடு முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்பதும் சரியே.
     இந்திய பொது பண்பாடு பாரம்பரியம் என்று எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியா மாதிரியான மிகப்பெரிய புவியியல் அமைப்பு கொண்ட நாட்டை ஒரு குறிப்பிட்ட பண்பாடு மற்றும் பாரம்பரியத்துக்குள் அடைப்பது கடினம். அப்படி அடைத்தால் நமது பண்பாட்டு வளம் மிக வறியதாக கருதப்படும். எனவே மாநில வாரியான மொழிவாரியான மற்றும் இன வாரியான வேறுபட்ட பண்பாட்டினை வரவேற்று அங்கீகரித்து வளர்ப்பதே சிசிஆர்டி போன்ற அமைப்புகளின் தலையாய கடமையாக இருக்கவேண்டும். அதை விடுத்து இந்தியாவெங்கும் நிறைந்து இருக்கும் ஒரே பண்பாடு எது என்பது போன்ற வினாக்களை தொடுத்து அதற்கு விடையாக இந்துத்துவ கோட்பாடுகளை இந்திய பண்பாடு என்று திணிக்க முயலக் கூடாது. இவ்வாறான வகுப்புகள் நடைபெற்றதால் தான் பயிற்சிக்கு வந்திருந்த காஷ்மீர் மற்றும் நாகாலாந்து ஆசிரியர்கள் தங்களை இந்தியாவிலிருந்து அந்நியப்பட்டவர்களாக உணர்ந்தனர். ஏனெனில் இந்தியர்களின் பொது கலாச்சாரம் என்று கூறப்பட்ட அனைத்தும் மதரீதியிலான விஷயங்கள்தான். இந்திய கலை பண்பாட்டு மேம்பாடு என்கிற போர்வையில் நடத்தப்பட்ட அனைத்து வகுப்புகளுமே இந்துத்துவ பிரச்சார கூட்டங்கள் போலவே அமைந்தன.
     பயிற்சியில் பாராட்டத்தக்க ஒரு அம்சம் என்னவெனில் டாக்டர் புருஷோத்தம் ரெட்டி அவர்களின் 3 மணி நேர சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு வகுப்புதான். மிகவும் அருமையாக இருந்தது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...