Wednesday, November 28, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம் – 3

Today's topic CamScanner
இந்த அப்ளிகேஷன் வேண்டுவோர் இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்


அப்ளிகேஷன் அறிவோம் – 3
எப்போதுமே டாக்குமெண்ட்ஸை போட்டோ எடுத்தே எல்லோருக்கும் வாட்சப் அல்லது மெயிலில் அனுப்பி பழக்கப்பட்டு இருக்கும் நண்பர்களுக்காகத் தான் இந்த பதிவு.
CAM SCANNER  என்கிற அப்ளிகேஷன் பற்றித் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
CS  என்கிற எழுத்துக்களையே லோகோவாகப் பெற்றிருக்கும் ஒரு எளிய ஆனால் பயனுள்ள அப்ளிகேஷன் தான் இது.
இப்போ ஸ்காலர்ஷிப் அப்லோட், TNPSC ஆன்லைன் விண்ணப்பம் , ஜாதிச் சான்று விண்ணப்பம் என பலதரப்பட்ட வேலைகளுக்கு ஸ்கேனர் இல்லாமல் கடன் வாங்கியோ அல்லது கடைகளில் காசுகொடுத்தோ இந்த வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.
இந்த கேம் ஸ்கேன்னர் அப்ளிகேஷன் டாக்குமெண்ட் ஸ்கேனிங்க்கு மிகவும் பயனுள்ளது. உங்களுக்குக ஃபோட்டோஷாப் பயன்படுத்திய பழக்கம் இருந்தால் மேனுவலாக உங்கள் ஸ்கேனிங்கை மேம்படுத்தி “டச் அப்“ செய்யலாம். இல்லையெனில் அதிலேயே இருக்கும் ஆட்டோ மோடை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெகு கச்சிதமாக தேவையற்றதை வெட்டியெறிந்து கோணங்களை சீர் செய்து அட்டகாசமாக தருகிறது.
படத்தை நீங்கள் Jpg file or PDF file ஆக சேமிக்கவோ அல்லது பகிறவோ செய்யலாம்.
ஏன் உங்கள் பழைய முக்கியமான சான்றிதழ்களையெல்லாம் ஸ்கேன் செய்து Google drive ல் அப்லோட் செய்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் எடுத்து கையாளலாம்.
அப்புறம் இன்னொரு ஐடியா உங்க கல்யாண ஆல்பம் அல்லது இன்ன பிற முக்கிய நிகழ்வுகளின் போட்டோக்களை ஸ்கேன் செய்து ஒரே PDF file ஆக சேமித்து மின் புத்தகம் போல் வைத்துக் கொள்ளலாம் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து மகிழலாம்.
இதில் ஒரு கோப்பின் கீழ் எத்தனை ஸ்கேன் செய்தாலும் அது ஒரே கோப்பாகத் தான் சேமிக்கப்படும். அதில் நாள் நேரம் போன்றவை தனித்தனியே கோட் செய்யப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் ஒற்றை கோப்பு போலவே கையாளலாம்.
நீங்கள் ஏற்கனவே கேமரா வாயிலாக போட்டோ எடுத்த டாக்குமெண்ட் களையும் இங்கே import from gallery  தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ள இயலும்.
உங்களிடம் pdf file ஆக உள்ள கோப்புகளைக் கூட JPG format க்கு மாற்றி தரவிறக்கி மேம்படுத்திய படங்களாக மாற்றிக் கொள்ள இயலும்.
security and backup  என்கிற பட்டனை செட்டிங்ஸ் ல் சென்று அழுத்தி அதிமுக்கிய ரகசிய கோப்புகளுக்கு பாஸ்வேர்ட் செட் செய்து கொள்ளலாம்.
அலுவலகப் பயன்பாட்டிற்கென மொபைல் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன் இதுவாகும்.
இது சார்ந்த உங்கள் விமர்சனங்களை மறக்காமல் கமெண்ட் பாக்ஸ் ல் பதிவிடுங்கள்.


Monday, November 26, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம்-2


மொபைல் போனில் word documents, excel sheets and pdf documents படிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு அல்லவா? அதற்கென பரவலாக பயன்படுத்தப் படும் ஒரு அப்ளிகேஷன் பற்றித் தான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப்  போகிறோம்.
WPS OFFICE இதுதான் அனேகமாக நாம் அனைவரும் பயன்படுத்தும் office file க்கான அப்ளிகேஷன் என நினைக்கிறேன்.
முதலில் word document க்கு வருவோம். நாம் மெயிலில் உள்ள டாக்குமெண்டை அழுத்தியவுடனேயே WPSக்கு வந்துவிடுவோம். டாக்குமெண்டை படித்துவிடுவோம் வேலை முடிந்தது. ஆனால் இதில் என்ன என்ன features இருக்கிறது என தெரிந்து கொள்வோமா?
*Mobile view இந்த option ஐ அழுத்தினால் எழுத்துக்கள் நன்கு பெரிதாக தெளிவாக தெரியும். ஒரு மைனஸ் என்னவென்றால் அலைன்மெண்ட் மாறிப் போய்விடும். நிறைய வச வச என்று எழுதப்பட்டிருக்கும் டாக்குமெண்டை கண்களை உறுத்தாமல் படிக்க mobile view தான் சிறந்தது.
Tools உள்ளே சென்றால் EXPORT PDF என்று இருக்கும். இந்த ஆப்ஷனை அழுத்தினால் உங்கள் வேர்ட் ஃபைலை பிடிஎஃப் டாக்குமெண்டாக மாற்றிக் கொள்ள இயலும்.   
அதன் கீழே ஷேரிங் ஆப்ஷன் இருக்கும். அதை அழுத்தி அந்த ஃபைலை Whatsapp, Email or even blue tooth வழியாக கூட பகிரலாம்.
அடுத்ததாக View option உள்ளே நுழைந்தால் ஒரு விண்டோவில் கோடும் அருகே  go to என்றும் இருக்கும். அதாவது பெரிய (நூற்றுக் கணக்கான பக்கங்கள் உள்ள ஃபைல்) டாக்குமெண்ட் களில் குறிப்பிட்ட பக்கத்திற்கு scroll செய்து செல்ல இயலும்.
Find என்று ஒரு லென்ஸ் தெரியும் இந்த ஆப்ஷனைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வார்த்தை அந்த டாக்குமெண்டில் உள்ளதா என்று தேடிப் பார்க்க இயலும்.
Use volume button to flip இந்த ஆப்ஷனை எனேபில் செய்தால் டாக்குமெண்டில் மேலே கீழே நகர Volume button பயன்படுத்த இயலும்.
Night mode ல் வைத்துக் கொண்டோமானால் எழுத்துக்கள் வெள்ளையாகவும் பின்னணி கருப்பாகவும் தெரியும்.
இன்னுமொரு கூடுதல் தகவல் நாம் டாக்குமெண்டை படமாக கூட ஷேர் செய்யலாம். அதற்கென picture sharing என்கிற ஆப்ஷன் உள்ளது. (வாட்சப்ல் பகிரும் போது அப்படியே படித்துக் கொள்ள இது தான் வசதி. office அப்ளிகேஷன் இல்லாதவர்கள் படிக்க இதுபோல் அனுப்பிக் கொள்ளலாம்.)
EXCEL SHEETS ல் என்னதான் ஆப்ஷன்கள் இருந்தாலும் அதை கணினி அல்லது மடிக்கணினியில் கையாலுவது தான் எளிது என்பது எனது கருத்து. இதில் goto, find and filtering like ascending and descending வழங்கப்பட்டுள்ளது.
இவையல்லாமல் இன்னும் பல வசதிகள் தந்துள்ளார்கள். அவையாவும் பயன் படுத்த நாம் Premium பயனர் ஆக இருக்க வேண்டும். அதற்கு பணம் கட்ட வேண்டும்.
ஒருவேளை இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இல்லை என்றால் இங்கே க்ளிக் செய்யவும்

Wednesday, November 21, 2018

விடைத்தாள் திருத்தும் முகாம் சில நினைவலைகள்


2002ல் வேலைகிடைத்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் அரியலூர் முகாமுக்கு முதன் முதலில் சென்றேன். பேப்பர் திருத்தும் பணி ஒன்றும் அவ்வளவு சிரமமான வேலை அல்ல. அப்போதெல்லாம் வழங்கப் படும் விடைத்தாள் கட்டுகளை திருத்தி அந்த கட்டுக்குறிய மதிப்பெண் பட்டியலை பிழையின்றி தயார் செய்து வழங்க வேண்டும். சிறு பிழை இருந்தாலும் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து போடவேண்டும். அது தான் சிம்ம சொப்பனம். இதற்காகவே வயதான ஆசிரியர்கள் என்னைப் போன்ற இளைஞர்களைவடை பஜ்ஜிஎல்லாம் போட்டு வளர்ப்பார்கள்.
அப்படியும் ஒரு முறை சீஃப் , “தம்பி நம்பர் எல்லாம் ஒரே சைஸ்ல எழுதுப்பாஎன்றார். நானும் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை கண்ணில் விட்டுக் கொண்டு கண்ணும் கருத்துமாக எழுதினேன். மறுபடியும் சீஃப், ”என்னப்பா ரொம்ப பொடியா எழுதியிருக்க கம்ப்யுட்டர்ல டைப் பண்றவங்களுக்கு தெரிய வேணாமா? மேலும் நேராவே இல்லையே இவ்வளவு கோணலா இருக்குஎன்று கடிந்து கொண்டார் நானோ பொங்கி வந்த எரிச்சலை பற்களை கடித்து அடக்கிக் கொண்டேன்.
ஒரு வழியாக அன்று மதிப்பெண் பட்டியலை போட்டு முடித்து விட்டேன். அடுத்தநாள் மறுபடியும் ஒரு பிரச்சனை. “தம்பி எட்டுல இருக்கிற ரெண்டு ரவுண்டும் சம அளவில் இல்லப்பா, கொஞ்சம் பாத்து சரியா போடுஎன்றார் லைசன்ஸ் வாங்க போட்டப்ப கூட எனக்கு எட்டு போடுவது அவ்வளவு சிரமமாக இல்லை. அவர் அப்படி ஒரு வார்த்தை சொன்னதுக்கு அப்புறம் எட்டு போடும் போதெல்லாம் எனக்கு ஏற்பட்ட கை நடுக்கம் இன்றளவிலும் நின்ற பாடில்லை. இந்த சம்பவம் நடந்த அன்று மதியம் இன்னும் பெரிய சோதனையாக எனக்கு வந்த பேப்பர் கட்டில் தேர்வு எண்கள் 880ல் ஆரம்பித்து 900 ல் முடியும் வகையில் இருந்தது. ஒரு ஐந்து மதிப்பெண் பட்டியல்களை வீணடித்து விட்டு ஆறாவது முறையாக போய் கேட்ட போது சீஃப் என்னை பார்த்த பார்வை இருக்கே ஒரு பச்சை வாழை மரம் இருந்தால் கூட பக்குன்னு பத்தி எரிஞ்சிருக்கும் அப்படி ஒரு நெருப்பு பார்வை. இதுக்கு மேலகஜினி முகமதுமுயற்சி எல்லாம் சரிபட்டு வராது என்று வாடகைக்கு ஆள் அமர்த்தி வேலையை கனகச்சிதமாக முடித்தேன்.
அந்த காலகட்டத்தில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர் எவரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு எண் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததையும் பல மதிப்பெண் பட்டியல்களை தவறாக எழுதி வீணடித்த கதைகளையும் கூறுவார்கள். இப்போ அப்படி இல்லை. ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னாசிஸ்டம் மாறிடிச்சு”.
விடைத்தாள் திருத்தும் முகாம்களில் அடுத்த குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்கேண்டீன்”. வடை, பஜ்ஜி, போண்டா, டீ, காபி என வைத்துக் கொண்டு மாலை வரை வியாபாரம் செய்வார்கள். விடைத்தாள் திருத்திய காசை எல்லாம் வடை சாப்பிட்டே ஒழித்துக் கட்டிய வெகு சிலரில் நான் முதல் இடத்தில் இருந்தேன் என்று பெருமையோடு நினைவு கூர்கிறேன்.
கேண்டீனில் தனியாக போய் சப்பிட கூச்சப் படுவோர் உண்டல்லவா? அந்த மாதிரி இருக்கும் நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் கம்பெனிக்காக மிகுந்த நம்பிக்கையோடு அனுகுவது என்னைத்தான். இந்த மாதிரி காரியங்களுக்கெல்லாம் நான் கிஞ்சிற்றும் மறுப்பு கூறியது கிடையாது.
நண்பர்களோடு வந்து நல்ல பார்ட்னர்ஷிப் ஃபார்ம் பண்ணி சும்மா அடித்து நொறுக்குவதால் என்னை கேண்டீன் காரர் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் பார்ப்பார். என்னைவிட மற்றொரு வயதான ஆசிரியரை இன்னும் மரியாதையோடும் அன்போடும் பார்த்துக் கொண்டு இருந்தார். காரணம் அவர் சிங்கிள் மேனாக வந்து எங்கள் பார்ட்னர்ஷிப்பையே முறியடிக்கும் வகையில் அடித்து நொறுக்குவார். நான்கு பேப்பருக்கு ஒரு முறை கேண்டீன் வருவார். 20 பேப்பருக்கு ஐந்து முறை வருவார். ஐந்து முறையும் இரண்டு வடை அல்லது பஜ்ஜியை எடுத்து இரண்டே அமுக்கில் உள்ளே தள்ளி தண்ணி விட்டு முடித்து விடுவார். நல்ல சத்தமான ஒரு ஏப்பத்திற்கு அப்புறமாக தேனீர் குடித்து திவ்யமாக முடித்துவிட்டு இடத்தை காலி செய்வார்.
அடுத்து விடைத்தாள் திருத்தும் போது நடக்கும் மற்றொரு சுவாரசியமான விஷயம் மாணவர்கள் மனமுருகி கடைசிப் பக்கத்தில் எழுதும் கோரிக்கை கெஞ்சல்கள் மற்றும் தற்கொலை மிரட்டல்கள்.
ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் பள்ளி நாட்களை வீணடிக்கும் போது வராத பயம் ஒன்றும் தயார் செய்யாமல் தேர்வறைக்குள் வந்து அமர்ந்த உடன் வந்து விடும். மற்ற மாணவர்கள் கஷ்டப் பட்டு உழைத்து எட்டும் தேர்ச்சியை இலகுவாக ஒரு கெஞ்சல் கடிதம் மூலமாக எட்டிவிட எண்ணுவார்கள்.
ஒரு கடிதம் இப்படித்தான் ஆரம்பித்தது, “சார் நான் எல்லா பாடங்களும் நன்றாக படிப்பேன், கணக்குப் பாடம் மட்டும்தான் வராது என்னை எப்படியாவது பாஸ் போட்டு விடுங்கள்அநேகமாக எல்லா பாடங்களிலும் அந்த பாடம் தான் வராது என்று எழுதியிருப்பான் அந்தப் பயல்.
மற்றொரு முறை ஒரு கடிதம்,“அய்யா எனக்கு அப்பா கிடையாது. அம்மா கூலி வேலை. எங்கள் பள்ளியில் ஆசிரியர் கிடையாது. எனவே என்னை எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்கள். ஃபெயிலானால் தற்கொலை செய்து கொள்வேன். என் உயிரே உங்கள் கையில் தான் உள்ளது” என்கிற ரீதியில் போனது. மதிப்பெண்ணோ 14 தான். எங்களுடன் இருந்த கருணை உள்ளம் கொண்ட ஆசிரியப் பெருமக்களோ மதிப்பெண் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டவே தொடங்கிவிட்டனர். உள்ளபடியே அந்த நிலையில் இருப்பவன் இந்த மாதிரியெல்லாம் மிரட்டல் விடமாட்டான். இயன்றவரை கடினமாக படித்து வந்திருப்பான். இவன் மதிப்பெண்ணுக்காக மோசடியாக கடிதம் புனைந்திருக்கிறான் என்று கூறி “கல்நெஞ்சக்காரன்” பட்டம் வாங்கிக் கொண்டேன்.
விடைத்தாள் திருத்துவது என்பது மிகவும் சுவாரசியமான அனுபவம் தான்.

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...