Sunday, March 5, 2023

அயனிமம் - பருப்பொருட்களின் நான்காம் நிலை

 திட திரவ வாயு நிலைகளுக்கு.     அடுத்ததாக உள்ள பருப்பொருட்களின் நான்காம் நிலை எது?!!

 



பருப்பொருட்கள் திட,திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளன என்பது ஆறாங்கிளாஸ் பையனுக்கு கூட தெரியும். ஆனால் பருப்பொருட்களின் நான்காவது நிலை ஒன்று உள்ளது என்பது அறிவியல் புலத்தில் ஆழமாக மூழ்கி முத்தெடுத்தவர்களுக்கே தெரியும். ஆமாம், அந்த நாளாவது நிலை தான் பிளாஸ்மா ஸ்டேட் என்பதாகும்.


     திடப் பொருட்களை சூடாக்கினால் உருகி திரவமாகும், அதையே மேலும் சூடாக்கினால் வாயுவாகும் என்பதை நாம் கற்றறிந்து இருக்கிறோம். தற்போது வாயு நிலையை மீயுயர் வெப்ப நிலைக்கு சூடாக்கினால் (மீயுயர் வெப்ப நிலை என்றால் சூரியனின் மைய வெப்ப நிலையை விட அதிகம்) அது பிளாஸ்மா நிலையை அடையும்.


அது என்ன பிளாஸ்மா நிலை அங்கே என்ன நடக்குமாம்?


     திடப்பொருட்களில் மூலக்கூறுகளுக்கு இடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். அதை வெப்ப படுத்தும் போது அந்த நெருக்கம் சற்றே நெகிழும். அவ்வாறு நெகிழ்ந்து மூலக்கூறுகளுக்கு இடையே இடைவெளி அதிகமாகும் போது திரவமாகிறது. அதையே இன்னும் சூடாக்கினால் மூலக்கூறுகளுக்கு இடையேயான இடைவெளி இன்னும் அதிகமாகும்.


     பிளாஸ்மா என்கிற நிலையில் அணு அளவிலேயே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆமாம் பிளாஸ்மா நிலையில் அணுவில் இருக்கும் எலக்ட்ரான்கள் தனியாக கழன்று கொள்ளும். அதாவது இந்த நிலையில் அணுக்களில் உள்ள எலக்ட்ரான்கள் உட்கருவின் மையக் கவர்ச்சியில் இருந்து பிரிந்து மிதக்கின்றன. (Plasma is nothing but the Soup of Positvely charged particles (Ions) and Negatively charged Particles(Electrons)). உட்கருவில் இருக்கும் புரோட்டான்கள் தனியாக இருக்கும். அதாகப்பட்டது அணுவில் உள்ள புரோட்டான்கள் நேர்மின் அயனிகளாகவும் எலக்ட்ரான்கள் எதிர்மின் அயனிகளாகவும் மிதந்து கொண்டு இருக்கும். அதனால் தான் பிளாஸ்மாவை “அயனிமம்“ என்று தமிழ் படுத்தியுள்ளனர்


ஆய்வுக்கூடத்தில் பிளாஸ்மா உண்டாக்க முடியுமா?


ஆய்வகங்களில் இந்த பிளாஸ்மா ஸ்டேட்டை உருவாக்க படாத பாடு படுகிறோம். பிளாஸ்மா ஸ்டேட் என்றால் என்ன என்பதே உலகில் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 90 விழுக்காடு பருப்பொருட்கள் பிளாஸ்மா ஸ்டேட்டில் தான் உள்ளன என்பதே ஆச்சரியமான விந்தை. நமது சூரியனே பிளாஸ்மா நிலையில் உள்ள வாயுக்கோளம் தானே.


     செயற்கையாக பிளாஸ்மா ஸ்டேட்டை உருவாக்கும் வேலையை நாம் அறியாமலேயே நிறைய இடங்களில் செய்கிறோம்.


     அதிவெப்ப நிலையை உருவாக்கும் தீப்பொறி வழியாக சூடான வாயு கடந்து செல்லும் போது அந்த வாயு பிளாஸ்மா நிலையை அடைகிறது.


வேற எங்கெல்லாம் பிளாஸ்மா இருக்குமாம்?


     இயற்கையில் நாம் காணும் மின்னல் வெட்டு இதற்கு மிகச் சிறந்த உதாரணம். மேக உரசலில் உண்டாகும் அதிக அளவிலான மின்சாரத்தை எர்த் செய்ய வேண்டும். ஆனால் காற்று மின்சாரத்தை கடத்தாது. ஆகவே காற்றினை அயனியாக்கி மின்கடத்தல் நடைபெறுகிறது. மரமோ மனிதனோ அல்லது வேறு ஏதாவது மின்கடத்தும் பொருட்கள் இந்த மின்னலின் பாதையில் குறுக்காக வரும் போது அதற்கு காற்றினை அயனியாக்கும் வேலை மிச்சம். ஆமாம், மரம் வழியாகவோ மனிதன் வழியாகவோ மீதி தொலைவை கடந்து எர்த்தில் இறங்கிவிடுகிறது. அதையெல்லாம் கண்கொண்டு பார்க்க அந்த மனிதன் உயிரோடு இருக்க இயலாது என்பது கெடுவாய்ப்பு.


செயற்கையில் வெல்டிங் ஸ்பார்க்கும் பிளாஸ்மா நிலையை உருவாக்குகிறது.


 


     இந்த பிளாஸ்மா நிலை பற்றி தனிப் படிப்பே உள்ளது. ஆமாம் பிளாஸ்மா பிசிக்ஸ் என்கிற தனிப்பிரிவே உள்ளது. பிளாஸ்மா நிலை பற்றிய ஆய்வுகள் நமக்கு நிறைய பயனுள்ள விஷயங்களையும் தந்துள்ளது.


      முக்கியமாக அணுக்கரு இணைவு வினை  நடக்க ஊடகமாக பிளாஸ்மா ஸ்டேட் உள்ளது. 


     கணினி சிப் உருவாக்கம், ராக்கெட் உந்து விசை, சுற்றுச் சூழல் தூய்மை, உயிரி நச்சுக்களை அழிக்க, புண்களை ஆற்றுவதற்கு மற்றும் பல மருந்துகள் தயாரிப்பில் கூட இதன் பயன் இருப்பதாக கூறுகிறார்கள்.


பாத்தீங்களா பயாலஜி லயும் பிளாஸ்மா உள்ளது ஃபிசிக்ஸ் லயும் பிளாஸ்மா உள்ளது!!

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...