Friday, July 19, 2013

கடவுளுக்கு கடிதம்


ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அந்த ஆண்டு அங்கு கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து போனது. அந்த ஏழை விவசாயி வீட்டில் இருந்த உணவு பொருட்கள் தீர்ந்து போயிற்று. குழந்தைகளின் பசியை காண பொறுக்காத விவசாயி உதவி கேட்டு எல்லோரிடமும் கை ஏந்தினான். ஆனால் வறட்சி காரணமாக யாரும் உதவி செய்யக் கூடிய மனநிலையில் இல்லை.
உடனே அவன் கடவுளிடம் உதவி கேட்டுவிடலாம் என தீர்மானித்தான். எப்படி கேட்பது என்று யோசித்தான். சரி கடவுளுக்கு கடிதம் எழுதிவிடலாம் என தீர்மானித்து தனது நிலையை உருக்கமான ஒரு கடிதமாக வடித்து எடுத்தான். ஒரு 800 டாலர்கள் பணம் வேண்டி எழுதியிருந்தான். ஒரு வருடத்தை சமாளிக்க அந்த பணம் போதும் என ண்ணினான். ரி எந்த விலாசத்திற்கு அனுப்புவது என்று யோசனை செய்தபோது கடவுள் கண்டிப்பாக சொர்க்கத்தில் தான் இருப்பார் என்று தீர்மானித்து கடவுள், சொர்க்கம் என விலாசம் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டான்.
அஞ்சலகத்தில் கடிதம் பிரிக்கும் பிரிவில் உள்ளோர் ஒரு விசித்திரமான விலாசத்திற்கு கடிதம் வந்துள்ளதால் ஏற்பட்ட சிக்கலை எண்ணி குழம்பி போயிருந்தனர். சொர்க்கம் என வந்துள்ளதே இதை எங்கு சேர்ப்பது என தெரியாது விழித்தனர். கடவுளுக்கு அப்படி என்ன தான் கடிதம் எழுதப்பட்டுள்ளது என ஆர்வமிகுதியால் பிரித்து படித்தே விட்டனர். அந்த ஏழைவிவசாயி யின் நிலையையும் அவன் கடவுளிடம் கேட்டால் கிடைக்கும் என்று நினைத்த வெகுளிதனத்தையும் எண்ணி மனவேதனையுற்றனர். உடனே அவர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை வசூல் செய்து அவனுக்கு 400 டாலர்கள் கடவுள் என்ற சுய விலாசம் எழுதி அனுப்பி வைத்தனர்.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் கடவுள் விலாசத்திற்கு கடிதம் வந்திருந்தது. எல்லோரும் அதிர்ந்தனர். பிரித்து படித்தனர் அதில் இவ்வாறு இருந்தது.
”“கடவுளே உனது உதவிக்கு மிக்க நன்றி. பக்தர்களின் உதவிக்கு செவிமடுப்பாய் என எனக்கு நன்கு தெரியும். பக்தர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றுபவன் நீ. இருந்தாலும் இனி எனக்கு உதவி கோரி கடிதம் அனுப்பினால் தயவு செய்து நீ நேரடியாக எனக்கு வந்து கொடுத்து விடு. நான் 800 டாலர்கள் கேட்டிருந்தேன். கண்டிப்பாக நீயும் 800 டாலர்கள் தான் அனுப்பியிருப்பாய் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால் அஞ்சல் துறையில் இருப்பவர்கள் யாவும் திருடர்களாய் இருக்கிறார்கள். நீ அனுப்பிய 800 டாலரில் 400 டாலர்களை எடுத்துக்கொண்டு மீதி 400 டாலர்களை மட்டும் தான் எனக்கு கொடுத்தார்கள்”.“ கடிதம் படித்து அனைவரும் அதிர்ந்து போய் மயங்கினர்.

Thursday, July 11, 2013

சாதி வெறி இப்போது படித்தவர்கள் மத்தியில் மிக அதிகம்


ஒரு அலுவலகத்தில் புதிதாக ஒருவர் வேலைக்கு வந்தவுடன் அவர் என்ன சாதி என அறிவதில் பெரும்பாலானோர் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அவர் நம்ம சாதியாக இருக்க வேண்டுமே என்ற பதட்டம் மேலிட புலண் விசாரணையில் இறங்கிவிடுகின்றனர். கீழே உள்ள எடுத்துக்காட்டை படியுங்களேன். (இது ஒரு தலைமையாசிரியருக்கும் ஒரு ஆசிரியருக்கும் நடந்த உரையாடல்)
உங்க ஊர் சார்? (முதல் தூண்டில்)
நான் ---- ஊர் சார்“.
அப்படியா, அங்கே ----- வை தெரியுமா?(அவர் எனக்கு மாமாதான் என்று சொல்லிவிட்டால் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார் ஆனால்...)
நான் --- ஊர்தான் சார் ஆனால் சின்னவயதிலிருந்து வெளியுரில் படித்ததால் எனக்கு ஊரில் நிறய பேர தெரியாது சார், இன்னும் என்ன வெளியுர் காரன்னுதான் கொள்ள பேர் நினச்சிட்டு இருக்காங்க“ (பயபுள்ள இந்த பால்ல சிக்கலயே.. எடு அடுத்த பால)
அப்படியா, நம்ம வீடு எங்க தம்பி இருக்கு?( இப்ப தெரு பேர வச்சி கண்டுபிடிச்சிடுவோமில்ல)
இப்போ நாங்க --- டவுனில் இருக்கோம் சார்( சற்றே எரிச்சலடைகிறார்)
சரி உங்க சொந்த ஊரில் உள்ள உங்க பழைய வீடு எங்க இருக்கு தம்பி (இப்போ பிடிச்சோமில்ல)
அதுவாசார் ---(சாதி பெயர்) தெருவில் இருக்கு சார்“(இப்போ தான் நிம்மதி அடைகிறார் இருந்தாலும் சற்றே சுதாரித்து)
அடடே நான் அதெல்லாம் பாக்கிறதில்லப்பா நீ (கவனிக்க “நீங்கள்“ , நீ“ ஆகிவிட்டதை) நம்ம ஊரு பையன் கிறதால வீடு எங்க இருக்குனு கேட்டேன்“.


First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...