ஒரு
ஊரில் ஒரு
ஏழை விவசாயி
வாழ்ந்து
வந்தான். அந்த
ஆண்டு அங்கு
கடும் வறட்சி
ஏற்பட்டு
விவசாயம்
பொய்த்து
போனது. அந்த
ஏழை விவசாயி
வீட்டில்
இருந்த உணவு
பொருட்கள்
தீர்ந்து
போயிற்று. குழந்தைகளின்
பசியை காண
பொறுக்காத
விவசாயி உதவி
கேட்டு
எல்லோரிடமும்
கை ஏந்தினான்.
ஆனால்
வறட்சி காரணமாக
யாரும் உதவி
செய்யக் கூடிய
மனநிலையில்
இல்லை.
உடனே
அவன் கடவுளிடம்
உதவி கேட்டுவிடலாம்
என தீர்மானித்தான்.
எப்படி
கேட்பது என்று
யோசித்தான். சரி
கடவுளுக்கு
கடிதம்
எழுதிவிடலாம்
என தீர்மானித்து
தனது நிலையை
உருக்கமான
ஒரு கடிதமாக
வடித்து
எடுத்தான். ஒரு
800 டாலர்கள்
பணம் வேண்டி
எழுதியிருந்தான்.
ஒரு
வருடத்தை
சமாளிக்க அந்த
பணம் போதும்
என எண்ணினான்.
சரி
எந்த விலாசத்திற்கு
அனுப்புவது
என்று யோசனை
செய்தபோது
கடவுள் கண்டிப்பாக
சொர்க்கத்தில்
தான் இருப்பார்
என்று தீர்மானித்து
”கடவுள்”,
”சொர்க்கம்”
என விலாசம்
எழுதி அஞ்சல்
பெட்டியில்
போட்டான்.
அஞ்சலகத்தில்
கடிதம் பிரிக்கும்
பிரிவில்
உள்ளோர் ஒரு
விசித்திரமான
விலாசத்திற்கு
கடிதம்
வந்துள்ளதால்
ஏற்பட்ட சிக்கலை
எண்ணி குழம்பி
போயிருந்தனர். சொர்க்கம்
என வந்துள்ளதே
இதை எங்கு
சேர்ப்பது
என தெரியாது
விழித்தனர். கடவுளுக்கு
அப்படி என்ன
தான் கடிதம்
எழுதப்பட்டுள்ளது
என ஆர்வமிகுதியால்
பிரித்து
படித்தே
விட்டனர். அந்த
ஏழைவிவசாயி
யின் நிலையையும்
அவன் கடவுளிடம்
கேட்டால்
கிடைக்கும்
என்று நினைத்த
வெகுளிதனத்தையும்
எண்ணி
மனவேதனையுற்றனர்.
உடனே
அவர்கள்
தங்கள்
சம்பளத்தில்
ஒரு பகுதியை
வசூல்
செய்து
அவனுக்கு
400 டாலர்கள்
கடவுள்
என்ற சுய
விலாசம்
எழுதி
அனுப்பி
வைத்தனர்.
ஒரு
வாரம் கழித்து மறுபடியும்
கடவுள் விலாசத்திற்கு கடிதம்
வந்திருந்தது.
எல்லோரும்
அதிர்ந்தனர்.
பிரித்து
படித்தனர் அதில் இவ்வாறு
இருந்தது.
”“கடவுளே
உனது உதவிக்கு மிக்க நன்றி.
பக்தர்களின்
உதவிக்கு செவிமடுப்பாய் என
எனக்கு நன்கு தெரியும்.
பக்தர்களின்
கோரிக்கையை முழுவதும்
நிறைவேற்றுபவன் நீ.
இருந்தாலும்
இனி எனக்கு உதவி கோரி கடிதம்
அனுப்பினால் தயவு செய்து நீ
நேரடியாக எனக்கு வந்து கொடுத்து
விடு. நான்
800 டாலர்கள்
கேட்டிருந்தேன்.
கண்டிப்பாக
நீயும் 800 டாலர்கள்
தான் அனுப்பியிருப்பாய்
என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.
ஆனால் அஞ்சல்
துறையில் இருப்பவர்கள் யாவும்
திருடர்களாய் இருக்கிறார்கள்.
நீ அனுப்பிய
800 டாலரில்
400 டாலர்களை
எடுத்துக்கொண்டு மீதி 400
டாலர்களை
மட்டும் தான் எனக்கு
கொடுத்தார்கள்”.“
கடிதம்
படித்து அனைவரும் அதிர்ந்து
போய் மயங்கினர்.
super brother
ReplyDelete