Thursday, July 11, 2013

சாதி வெறி இப்போது படித்தவர்கள் மத்தியில் மிக அதிகம்


ஒரு அலுவலகத்தில் புதிதாக ஒருவர் வேலைக்கு வந்தவுடன் அவர் என்ன சாதி என அறிவதில் பெரும்பாலானோர் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அவர் நம்ம சாதியாக இருக்க வேண்டுமே என்ற பதட்டம் மேலிட புலண் விசாரணையில் இறங்கிவிடுகின்றனர். கீழே உள்ள எடுத்துக்காட்டை படியுங்களேன். (இது ஒரு தலைமையாசிரியருக்கும் ஒரு ஆசிரியருக்கும் நடந்த உரையாடல்)
உங்க ஊர் சார்? (முதல் தூண்டில்)
நான் ---- ஊர் சார்“.
அப்படியா, அங்கே ----- வை தெரியுமா?(அவர் எனக்கு மாமாதான் என்று சொல்லிவிட்டால் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார் ஆனால்...)
நான் --- ஊர்தான் சார் ஆனால் சின்னவயதிலிருந்து வெளியுரில் படித்ததால் எனக்கு ஊரில் நிறய பேர தெரியாது சார், இன்னும் என்ன வெளியுர் காரன்னுதான் கொள்ள பேர் நினச்சிட்டு இருக்காங்க“ (பயபுள்ள இந்த பால்ல சிக்கலயே.. எடு அடுத்த பால)
அப்படியா, நம்ம வீடு எங்க தம்பி இருக்கு?( இப்ப தெரு பேர வச்சி கண்டுபிடிச்சிடுவோமில்ல)
இப்போ நாங்க --- டவுனில் இருக்கோம் சார்( சற்றே எரிச்சலடைகிறார்)
சரி உங்க சொந்த ஊரில் உள்ள உங்க பழைய வீடு எங்க இருக்கு தம்பி (இப்போ பிடிச்சோமில்ல)
அதுவாசார் ---(சாதி பெயர்) தெருவில் இருக்கு சார்“(இப்போ தான் நிம்மதி அடைகிறார் இருந்தாலும் சற்றே சுதாரித்து)
அடடே நான் அதெல்லாம் பாக்கிறதில்லப்பா நீ (கவனிக்க “நீங்கள்“ , நீ“ ஆகிவிட்டதை) நம்ம ஊரு பையன் கிறதால வீடு எங்க இருக்குனு கேட்டேன்“.


2 comments:

  1. இந்தக் கொடுமையான சாதியம் ஒழிய வேண்டுமானால், அனைத்துப் பிரிவினரும் தங்களுக்குள் உள்ள சாதியத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றார்.இந்தக் கொடுமையான சாதியம் ஒழிய வேண்டுமானால், அனைத்துப் பிரிவினரும் தங்களுக்குள் உள்ள சாதியத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றார்.டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்.

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...