Friday, August 16, 2013

டி.இ.டி பரீட்சையில் தேர்ச்சி பெற்றாலும் வேலை கிடைக்காது!

உண்மைதான் பி.எட். படித்த பட்டதாரிகளுக்கு டி.இ.டி பரிட்சையில் தேர்ச்சி பெற்றாலும் வேலை கிடைக்காது.
 1. டி.இ.டி பரீட்சையில் நீங்கள் 135 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால் உங்களுக்கு 60 மதிப்பெண்கள் நிறை மதிப்பெண்ணாக வழங்கப்படும். குறையும் ஒவ்வொரு 15 மதிப்பெண்களுக்கும் 6 நிறை மதிப்பெண்களை இழப்பீர்கள். வெறும் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோர்களுக்கு வெறும் 36 மதிப்பெண்களே நிறை மதிப்பெண்களாக கிடைக்கும்.

 2. நீங்கள் பள்ளி காலத்திலிருந்தே நன்றாக படிப்பவராக இருந்து 10,12,பட்டம்,மற்றும் பி.எட் இவைஅனைத்திலும் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் மீதமுள்ள 40 நிறை மதிப்பெண்களையும் பெற்று விடலாம். ஆனால் யாரும் அவ்வாறு இருக்கமாட்டார்கள். நான்கு நிலைகளிலும் நீங்கள் வெறும் தேர்ச்சியை மட்டும் பெற்றிருந்தால் ”போங்க சார்! வேறு ஏதாவது வேலை இருந்தால் தேடுங்கள்”. உங்களுக்கு 40 க்கு வெறும் 16 மதிப்பெண்கள் தான் கிடைக்கும்.

3. இவ்வாறாக டி.இ.டி 60 மற்றும் உங்கள் பள்ளி தொடங்கி பட்டம் உள்ளிட்ட படிப்பு சார்ந்த மதிப்பெண்களுக்கு 40 என 100 மதிப்பெண்ணுக்கு தரப் பட்டியல் தயார் செய்யப்பட்டு காலியிடங்களுக்கு ஏற்றவாறு இன சுழற்சி அடிப்படையில் பணி வழங்கப்படும்.

  அப்படியென்றால் பள்ளி கல்லுரி காலங்களில் அதிகப்படியான மதிப்பெண்கள் பெறாதவர்கள் வேலைக்கு செல்லவே இயலாத நிலை உள்ளது என்பது தான் இப்போதைய நடைமுறையில் உள்ள கசப்பான உண்மை. இப்போதுள்ள டி.இ.டி தேர்வில் தேர்ச்சி பெறுவதே சிறப்பான விஷயம். ஏனெனில் வினாத்தாள் அவ்வளவு கடினம்.

  தேர்ச்சி பெற்றோருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கலாம். இல்லையென்றால் ஆசிரியர் தகுதி மற்றும் பணிக்கான தேர்வு என்று மாற்றி பழைய டி.ஆர்.பி தேர்வையே பெயர் மாற்றி நடத்தி பணி வழங்கலாம்.

  என் போன்ற பள்ளி கல்லுரி காலங்களில் மிகச்சிறப்பான மதிப்பெண் பெறாதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்காமல் போவது நியாயமா?

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...