Thursday, April 22, 2010
சோலார் பேனல்கள் எவ்வாறு மின்சாரம் தயார் செய்கின்றன என தெரியுமா?
ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது என்ற அடிப்படை பௌதிக தத்துவமும் ஐன்ஸ்டீனின் ஒளி மின் விளைவு விதியையும் ஒரு புள்ளியில் இணைக்கும் போது தான் சோலார் பேனல்கள் உருவெடுத்தது.
சோலார் பேனல்களில் பெரும்பாலும் சிலிகான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
100 நானோ மீட்டருக்கும் குறைவான அலைநீளமுள்ள சூரிய ஒளி அலைகள் இதன் தளத்தில் படும்போது அதனிடத்தில் உள்ள ஒரு எலக்ட்ரான் கிளர்வுறுகிறது. அது வெப்பத்தை உமிழந்து செயலிழந்து விழும்போது சிலகுறிப்பிட்ட ஜங்க்ஷனில் விழச்செய்யப்படுகின்றன. அப்போது அவை மீண்டும் கிளர்வுறுகின்றன அல்லது உறிஞ்சப்படுகின்றன. இவ்வாறாக எலக்ட்ரான்கள் துண்டப்பட்டு தொடர்ச்சியாக ஒரு திசையில் கிளர்வுற்று நகரச்செய்யப்படுகின்றன. இவ்வாறாக மின்சாரம் சுற்றுகளில் விடப்பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது.(எலக்ட்ரான்களின் ஓட்டம் தானே மின்சாரம்!)
சிலிகான்கள் குறைகடத்திகள் ஆதலால் அதில் கொஞ்சம் மாசு தனிமங்கள் சேர்க்கப்பட்டு பெர்க் மாதிரியான வேஃபர் வடிவில் சோலார் பேனல்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவை இல்லாவிட்டால் செயற்கை கோள்களை நீண்டகாலம் செயலாற்ற வைக்க இயலாமல் போயிருக்கும்.
Monday, April 19, 2010
அங்காடித் தெரு எனது பார்வையில்
வலி நிறைந்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் நிஜம் நன்கு உறைக்குமாறு உலகுக்கு உறைத்த வசந்தபாலனுக்கு நன்றி.
உழைப்பு சுரண்டல் உலகமயமாக்களுக்கு பிறகு மிகவும் அதிகமாகி உள்ளது. நான் ஆசிரியராக முதலில் பெற்ற சம்பளம் ரூ.900 மட்டுமே. அப்போது அரசு ஆசிரியர்களின் சம்பளம் ஏறத்தாழ ரூ.12000.அந்த சம்பளத்தையுமே பள்ளி தாளாளர் 25 நாட்கள் தாமதமாக தருவார்.
படத்தில் என்னை பாதித்த வசனம் கை கால்கள் கூட இல்லாமல் மனிதர்கள் உள்ளார்கள் ஆனால் அனைவருக்கும் வாயும் வயிறும் உள்ளது என்பது தான்.
சாப்பிட்டதை செரிக்க ஓடிக்கொண்டிருக்கும் மேல்வர்க்கத்தினர் இப்படத்தின் மூலம் செரிப்பதற்கு சாப்பாடு தேடி ஓடும் மக்களின் வலிகளை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
இப்படம் எனக்கு ஒரு வைரமுத்து கவிதையை நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாபகப்படுத்தி கண்களை குளமாக்கி விட்டது. அக்கவிதை ”ஏண்டியம்மா குத்த வெச்ச?” என்பதாகும்.
மொத்தத்தில் படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக அழவைக்கும் என்பதில் ஐயமில்லை.
பின்குறிப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து கொடுத்துள்ளன என்பதை அறியமுடியுமா?

Tuesday, April 13, 2010
Some Quotes I really enjoyed
Genius without education is like silver in the mine
- Benjamin Franklin
Socrates was a Greek philosopher who went around giving people good advice. They poisoned him - Anonymous
When the waitress asked if I wanted my pizza cut into four or eight slices, I said, "four. I don't think I can eat eight" -yogi berra

Friday, April 9, 2010
எல்லா நாளும் நல்ல நாளே
அஞ்சுவது அஞ்சாமை பேதமை-அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
“பழங்கால மனிதன் தனது அறியாமைக்கும் பயத்துக்கும், காரணமும் உதவியும் தேட முயலும் போது அவன் இல்லாத கடவுளை உருவாக்கிக் கொள்கிறான்“ என எழுதினார் ராகுல சங்கிருத்தியாயன்.
“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(தமிழ் நாட்டில் கொஞ்சம் அதிகம்)
இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.
வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.
ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட?
மிக அருமையான கட்டுரை விகடன் இணைப்பில் வெளியகியுள்ளது. நம் அனைவரும் இதனை அறிந்து நல்ல செயல்களை செய்ய காலம் தாழ்த்தலாகாது.
-நன்றி ஆனந்த விகடன்
பையா வில் கார்த்திக்
பையா படத்தில் பருத்தி வீரன் கார்த்திக் முற்றிலும் வேற்று மனிதனாக காட்சியளிக்கிறார். அதன் பெருமை படத்தின் காஸ்ட்யும் டிசைனரையே சாரும். சண்டைக்காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் மிக அருமையாக நடித்துள்ளார். அவருடைய அண்ணன் போல் டான்ஸ் காட்சிகளில் சுமார்தான்(இன்னும் பயிற்சி வேண்டுமோ?).
தமன்னா வழக்கம்போல் மிக அழகாக காட்டப்பட்டிருக்கிறார். கதை அவரை மையப்படுத்தி நகர்வதால் அவருக்கு நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்புகளில் அருமையாக ஸ்கோர் செய்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு மிக அற்புதம். கோடையில் ஒரு மழைக்காலம் என சொல்லும் அளவிற்கு கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு.
Tuesday, April 6, 2010
கட்டாயக் கல்விச் சட்டத்தினால் ஆகும் பயன் யாதோ?
இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தினால் என்ன பயன் கிட்டமுடியும்?
அனைவருமே இப்போது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றார்கள்.
இருப்பினும் பள்ளி இடைநிறுத்த வீதம் உயரக்காரணம் நமது பாடத்திட்டம்
மாணவர்களைக் கவர வில்லை என்பதே ஆகும்.
பாடத்திட்டத்தை மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் அமைத்தாலே போதும்
மாணவர்கள் பெரும்பாலோர் பள்ளிக்கு வந்திடுவர்

Subscribe to:
Posts (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...