வலி நிறைந்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் நிஜம் நன்கு உறைக்குமாறு உலகுக்கு உறைத்த வசந்தபாலனுக்கு நன்றி.
உழைப்பு சுரண்டல் உலகமயமாக்களுக்கு பிறகு மிகவும் அதிகமாகி உள்ளது. நான் ஆசிரியராக முதலில் பெற்ற சம்பளம் ரூ.900 மட்டுமே. அப்போது அரசு ஆசிரியர்களின் சம்பளம் ஏறத்தாழ ரூ.12000.அந்த சம்பளத்தையுமே பள்ளி தாளாளர் 25 நாட்கள் தாமதமாக தருவார்.
படத்தில் என்னை பாதித்த வசனம் கை கால்கள் கூட இல்லாமல் மனிதர்கள் உள்ளார்கள் ஆனால் அனைவருக்கும் வாயும் வயிறும் உள்ளது என்பது தான்.
சாப்பிட்டதை செரிக்க ஓடிக்கொண்டிருக்கும் மேல்வர்க்கத்தினர் இப்படத்தின் மூலம் செரிப்பதற்கு சாப்பாடு தேடி ஓடும் மக்களின் வலிகளை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
இப்படம் எனக்கு ஒரு வைரமுத்து கவிதையை நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாபகப்படுத்தி கண்களை குளமாக்கி விட்டது. அக்கவிதை ”ஏண்டியம்மா குத்த வெச்ச?” என்பதாகும்.
மொத்தத்தில் படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக அழவைக்கும் என்பதில் ஐயமில்லை.
பின்குறிப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து கொடுத்துள்ளன என்பதை அறியமுடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
சிறை - பட விமர்சனம்
சிறை - தமிழ்ப்படம் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக்...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...

No comments:
Post a Comment