Friday, April 9, 2010

எல்லா நாளும் நல்ல நாளே


அஞ்சுவது அஞ்சாமை பேதமை-அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

“பழங்கால மனிதன் தனது அறியாமைக்கும் பயத்துக்கும், காரணமும் உதவியும் தேட முயலும் போது அவன் இல்லாத கடவுளை உருவாக்கிக் கொள்கிறான்“ என எழுதினார் ராகுல சங்கிருத்தியாயன்.
“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(தமிழ் நாட்டில் கொஞ்சம் அதிகம்)

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட?

மிக அருமையான கட்டுரை விகடன் இணைப்பில் வெளியகியுள்ளது. நம் அனைவரும் இதனை அறிந்து நல்ல செயல்களை செய்ய காலம் தாழ்த்தலாகாது.


-நன்றி ஆனந்த விகடன்

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...