Monday, August 29, 2016

கோபல்லபுரம் நாவல்

இந்த முறை நுாலகத்தில் எடுத்த புத்தகங்களில் ஒன்று கி.இராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமம். மிகவும் அருமையான நாவல். கதை என்னவோ மிகச் சிறியது தான் ஆனால் அதில் பொதிந்துள்ள பிண்ணனித் தகவல்கள் ஒரு களஞ்சியம்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால் அதில் கூறப்பட்டிருக்கும் பல செய்திகள் நான் அனுபவித்த அல்லது அறிந்தவை.

கிராமத்து மனிதர் அத்தனை பேருக்கும் பட்டப் பெயர் சூட்டியதோடு அல்லாமல் அவற்றின் காரணத்தை சுவைபட கூறவே சில அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளார்.

“முதல் மரியாதை““ படத்தில் திருடனின் கால் கட்டை விரலை கடித்தபடி இறந்துவிடும் பெண். “பாகுபலி“ படத்தில் வெள்ளம் புரண்டோடும் ஆற்றில் பெண் குழந்தையை தலைக்கு மேல் வைத்துக் கொண்டிருப்பது போன்றவை இந்த நாவலில் இடம் பெற்றுள்ள காட்சிகள்.

மாற்றாந்தாய் பசுவுடன் தாயை இழந்த பசுங்கன்றை பழக்க விடும் வித்தை மிக அருமையாக விவரிக்கப் பட்டுள்ளது. அடுத்தது ஆட்டுக்கு வலி இல்லாமல் காயடிக்கும் முறையை கூறியுள்ளார்.

முற்றிலும் நகரத்திலேயே வளர்ந்த பிள்ளைகளுக்கு இந்த கதை வியப்பை தரலாம். நிறைய மூடநம்பிக்கை களை  கதை மாந்தர்கள் பின்பற்றி வந்தாலும் “அக்கையா“ என்ற பாத்திரத்தின் மூலமாக அவற்றையெல்லாம் “பகடி“ செய்யவும் தவறவில்லை.

ஆர்வமுள்ள நண்பர்கள் கண்டிப்பாக படியுங்கள். உங்களுக்கு நல்லதொரு வாசிப்பு அனுபவம் கிட்டும்.

2 comments:

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...