Sunday, November 13, 2016

துயரமான செய்தி

பள்ளியில் காலைநேர கூட்டத்தை தலைமையேற்று நெறிபடுத்த உயர் வகுப்பு மாணவர்களை அழைத்தால் பின்னங்கால் பிடறியில் பட ஓடுகிறார்கள். இம்மாதிரி தருணங்களில் கீழ் வகுப்பு மாணவர்கள் குரல் உடையா  பிஞ்சு மழலையில் நெறிபடுத்த வருவார்கள்.

அவர்களில் ஒருவன் "நேர் நில், இயல் நில் " என்று நிலம் அதிர பூமியை உதைத்து கம்பீரமாய் கூறுவான். குரலும் கனீரென்று இருக்கும்.

இந்த வாரம் மறுபடியும் மாணவர்களை துரத்தி பிடித்தோம். காரணம் அந்த கம்பீர மாணவன் தற்கொலை செய்து கொண்டானாம்.

அனைத்து ஆசிரியகளும் துடித்து போனோம். அவனது வகுப்பு ஆசிரியர்கள் 'அவன் நன்கு படிப்பவன் ஆயிற்றே' என கண்ணீர் மல்க கூறினர்.

மாணவர்களின் மன உறுதியை வளர்க்க வேண்டிய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆசிரியர்கள் தன்னெழுச்சியுடன் தன்னிச்சையாக இதனை போதிக்க வேண்டும்.

ஆசிரியர் மட்டுமல்லாமல் பெற்றோரும் 'நாங்கள் எப்போதும் உனக்காக உன்னுடன் உள்ளோம்' என்ற நம்பிக்கையை வளர்க்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்.
உணர்வுசார் நுண்ணறிவு
குறித்த விழிப்புணர்வின் அவசியம் இம்மாதிரி நிகழ்வுகளின் போது உணரமுடிகிறது.

1 comment:

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...