Monday, August 14, 2023

NEET க்கு அப்புறம் NEXT பராக் பராக்

 



1. தகுதி டா திறமடா மெரிட்டு டா நீட்டுடா... 


நீட் தேர்வு தகுதி திறமை என்று ஒரு கேசத்தையும் வளர்க்கல. மருத்துவ கல்லூரி இடங்களின் எண்ணிக்கை குறைவாய் இருக்கு தகுதியான மாணவர் எண்ணிக்கை அதிகம். அதனால உயர்நிலை கட் ஆப் உள்ளவங்க மட்டுமே மெடிக்கல் சீட் வாங்க முடிந்தது.


 அனைத்து பிரிவு மாணவர்களுமே நூற்று தொண்ணூறு க்கு மேல் கட் ஆப் எடுத்திருந்தால் மட்டுமே இடம் கிடைத்தது.


 ஆக ஏற்கனவே படித்தவன் எல்லாம் திறமை இல்லாதவன் இல்ல.


 நீ படிக்க போற ஸ்கூல்ல அவன் ஏற்கனவே ஹெட் மாஸ்டர் டா டுபுக்கு!!


ஆச்சுவலா ஆசைப்படுற எல்லாரையும் படிக்க வைக்க வழிவகை செய்யணும் ஆனா இதயத்தில் இடம் இருக்கிற அளவுக்கு காலேஜ்ல இடமில்லை அதனால் தான் +2 மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் என்கிற ஒரு அளவுகோல்.


2. பிரதர் கோவப்படாதீங்க நீட் புத்தி கூர்மைய சோதிக்குது இல்லையா?!


ஒரு புடலங்காயவும் சோதிக்கல ஏழைகளை மிக கவனமா ஃபில்டர் பண்ணுது ஏற்கனவே பிளஸ் 2 பரிச்சை எல்லா கூர்மையும் சோதிச்சு தானே அனுப்பியது?!


3. கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற ஏழை பசங்க நீட்டு வந்த பின்னர் தானே டாக்டராக முடியுது?


இதெல்லாம் எவனாவது துக்ளக் படிச்சவன் கிட்ட போய் சொல்லு.


 கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற ஏழை பசங்க டாக்டராக காரணம் 7.5 சத இட ஒதுக்கீடு.


 இதை பழைய பிளஸ் 2 மதிப்பெண் முறையிலேயே அமல்படுத்தி இருக்கணும்.


 நீட்டை ஏழை பங்காளன் என்று ஏமாற்ற செய்த ஜோடனை அது.


 இப்போ அதுக்கும் ஆப்பு வந்தாச்சு 7.5% ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு வந்தவன் பெரும்பாலும் ரிப்பீட்டர்ஸ்.


 அதாவது ஒரு வருடம்/ ரெண்டு வருடம் கோச்சிங் சென்டருக்கு போய் அவங்களால முடிஞ்ச அளவுக்கு மொய் எழுதியவர்கள். அதாவது தனியார் கோச்சிங் போக முடிந்த அரசு பள்ளி மாணவர்கள்!!


மத்தவங்க இனிமே அந்த ரூட்லயும்(7.5%) போக முடியாது ஆக நீட் ஏழைகளுக்கு முற்றிலும் எதிரானது தான்


4. பாருங்க பாஸ் எல்லாத்தையும் குற்றம் சொல்லாதீங்க நீட் வந்த பின்ன தனியார் கல்லூரிகள் சம்பாதிக்க முடியல தெரியுமா?!


அப்படி யார் சொன்னாங்க பாஸ்?!

 400 எடுத்த புள்ளயோட கனவு பொசங்கி அதனால செத்துப் போயிட்டான்.


 ஆனால் 160 எடுத்த அவனோட பணக்கார நண்பன் வருஷம் 25 லட்சம் கட்டி டாக்டருக்கு படிக்கிறான்.


 அவனே சொல்றான் I don't deserve this னு. அந்தப் பையன் நீட் பரிட்சையில் வாங்கிய 160 என்பது 35 விழுக்காடு கூட இல்லையே!!


 அப்புறம் எங்க போச்சு இவங்க மெரிட்டு தகுதி எல்லாம்!!


 உங்க ஏழைப் பங்காளன் வேஷமும் உங்க மெரிட் கோஷமும் இந்த ஒரு பாயிண்ட்லயே பல் இலிக்குதே  பாஸ்!!


5. ஏம்பா நீங்க எல்லாரும் நீட்டே தான் எதிர்ப்பீர்களா இந்த ஐஐடி ஜேஇஇ ய எல்லாம் எதிர்க்க மாட்டீங்களா?


என்னோட  இன்ஜினியரிங் அல்லது பி டெக் கனவு ஐஐடில போனா அண்ணா யுனிவர்சிட்டி இருக்கு ஆனா டாக்டர் கனவுக்கு மொத்தமால்ல ஆப்பு வச்சிட்டீங்க


6. அப்படின்னா இன்ஜினியரிங்க்கும் ஒரு நீட் மாதிரி தேர்வு வச்சா?


வையேன், வச்சு தான் பாரேன்!! அத்தனை தனியார் இன்ஜினியரிங் காலேஜ் ஓனரும் பால்டாயில் குடிச்சிடுவான் நீ கொலை கேஸில் உள்ள போயிடுவ ஜாக்கிரதை!!


ஏற்கனவே +2 மேத்ஸ் குரூப் படிக்கிற மாணவர் எண்ணிக்கையை காட்டிலும் தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகம், அதனால எமிஸ் டேட்டா பேஸ்ல இருக்கிற பசங்க நம்பரை உருவி போன் போட்டு "வாங்கய்யா வந்து சேருங்கையான்னு"  கொலையா கொல்றாய்ங்க.


 பல கல்லூரிகள் சேர்க்கப்பட்ட எஸ்சி எஸ்டி மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி உதவித்தொகையை கொண்டு தான் உயிர் வாழுது.

 ஆனால் நீட்டால எங்க பிள்ளைங்க பலரோட உயிர் போகுது!!


7. என்னய்யா நீ தேவையில்லாம பழி போடுற படிச்சா டாக்டருக்கே தான் படிக்கணுமா வேற படிப்பு படிக்க வேண்டியது தானே?


வாடி பார்த்தசாரதி,  அப்போ காசு இல்லாதவங்க படிக்காதீங்கன்னு சொல்ல வரீங்க அதானே?


பையன் வரான் படிக்கிறான் பிளஸ் டூ மதிப்பெண் எடுக்கிறான் டாக்டர் ஆகிறான் எவ்வளவு சிம்பிளா இருக்கு?!


ஆனா உங்க சிஸ்டம்ல பையன் வரான் 10, 11& 12 என்று 3 வருஷமா பாட புத்தகத்தை கூட படிக்காமல் நீட் ஃபவுண்டேஷன், லிண்டல் & ரூஃப் ன்னு படிக்கிறான் நீட் பாஸ் ஆகுறான் ஆனா கவர்ன்மென்ட் காலேஜ் கிடைக்கல, மறுபடியும் கோச்சிங் போறான் நீட் எழுதுறான் சீட் கிடைக்கல மறுபடியும்  கோச்சிங் போறான் நீட் எழுதுறான் சீட் கிடைக்கல ரிப்பீட்டு முடியல தலைவரே!!


துடிப்பான இந்த இளமை பருவத்தில் அவன தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறீங்களே நீங்க நல்லா இருப்பீங்களா?!


 பிரைவேட் கோச்சிங் தனியார் பள்ளிகளோடு இணைந்த கோச்சிங்னு அவன சுத்த விட்டு சுத்த விட்டு பணம் கறக்குறீங்க!!


பிரைவேட் கோச்சிங் எங்க மிடில் கிளாஸ் சொத்தை அப்படியே வழிச்சு சுரண்டி கொழுக்க இந்த நீட் உதவி செய்யுதே ஒழிய வேற எந்த கூந்தலையும் பிளக் பண்ணல.


ஆஹா இது கொள்ளை லாபம் கொட்டும் கொழுத்த மார்க்கெட்டா இருக்கேன்னு தானே இப்போ NEXT ம் கொண்டு வரீங்க?!


ஏண்டா,  டாக்டர் ஆகணும்னு நினைச்சது ஒரு குத்தமாடா அரணா கயிறு உட்பட எல்லாத்தையும் உருவுறீங்களேடா!!


8. அப்படின்னா திறமையான டாக்டர்கள் உங்களுக்கு வேணாம் அப்படித்தானே?


இதை மட்டும் இப்ப டாக்டரா இருக்கவங்க கேட்டா உன்ன டவுசர அவுத்து ஓட விட்டு ஒதைப்பாங்க.


ஆமா பேசாம நீட்ல எம்பிபிஎஸ் சிலபஸ் வச்சுட்டா அவன் வரும்போதே டாக்டரா உள்ள வருவான்ல!!


பணத்தால வாய்ப்புகளை தட்டி பறிக்காதீங்க!

 பசங்களோட இளமை பருவத்தை பொசுக்காதிங்க!!


 வாய்ப்புகளை பரவலா எல்லோருக்கும் கொடுத்தா அவன் படிச்சு தன்னோட திறமையை வளர்த்துக்குவான்.


 வாய்ப்பே கொடுக்காமல் கதவடைச்சிட்டா அவன் எப்படி திறமையை வளர்த்துகிறது?!! 


சொல்லுங்க நியாயமாரே!! 

1 comment:

  1. கொள்ளைக்காரர்களையும் கொலைகாரர்களையும் பற்றிச் சொல்ல என்ன இருக்கு?

    திருந்துவார்களா? எப்போது?

    உறைக்கும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...