Monday, June 30, 2025
Sincostan - டிகிரி 3
Sincostan - டிகிரி 3
"சுற்றும் பூமி விட்டமும் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும்"
"என்னப்பா இது சம்மந்தா சமந்தம் இல்லாம உளறுற?!"
"டேய் அது உயிரோடு உயிராக என்கிற படத்திற்கு வைரமுத்து எழுதிய பாட்டு டா"
"அதுக்கும் trigonometry க்கும் என்னப்பா சம்பந்தம்?!"
"வைரமுத்து அவ்வப்போது பாடல்களில் அறிவியலை மிக்ஸ் பண்ணுவார்டா!!"
"இங்க என்னத்த மிக்ஸ் பண்ணாருன்னு சொல்லுங்க?!"
" சூரியன் பூமி தூரத்தை கண்டுபிடிக்க ட்ரிக்னாமெட்ரி ரொம்ப முக்கியம்பா, அது மட்டும் இல்ல ஒரு ராக்கெட் ஏவும்போதும் அது வளிமண்டலத்தை விட்டு வெளியே செல்லும்போதும் எந்த கோணத்தில் செலுத்தப்பட வேண்டும் எவ்வளவு வேகத்தில் செலுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் பல விஷயங்களை trigonometry தான் முடிவு செய்கிறது!!"
"விண்வெளித் துறை விமான பயணங்கள் கப்பல் பயணங்கள் போருக்காகவோ அல்லது அறிவியல் முன்னேற்றத்துக்காக ராக்கெட் களின் பாதைகள் என்று பல விஷயங்களில் இந்த ட்ரிக்னாமெட்ரி விதிகள் முதன்மை கூறுகளாக உள்ளன"
"Sin θ cos θ வுக்கும் இதற்கும் என்னப்பா தொடர்பு இருக்கு?!"
"அன்றைக்கு Sin θ என்னன்னு சொன்னேன்?!"
" Sin θ= o/h
அதாவது (opposite side/hypotenuse) செங்கோண முக்கோணத்தின் எதிர்பக்கத்துக்கும் கர்ண பக்கத்திற்கும் இடையே உள்ள விகிதம்"
"ஆக நீ இப்போ சொன்ன சிஸ்டம் மூன்று கூறுகளை உள்ளடக்கிய ஒரு சமன்பாடு இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் மற்ற இரண்டை கொண்டு மூன்றாவது கண்டுபிடித்து விடலாம் அல்லவா?!"
"அட ஆமாம்பா!!"
"இந்த உயரம் தூரம் கணக்குகளை எடுத்துக் கொண்டால் கோணம் இருந்தால் tanθ மதிப்பைக் கொண்டு உயரத்தை வைத்து தூரத்தையோ அல்லது தூரத்தை வைத்து உயரத்தையோ நாம கண்டுபிடிச்சிடலாம்"
"ஆமாம் அப்பா இப்பதான் தெளிவா தெரியுது!!"
"இன்னும் புரியிற மாதிரி சொல்றேன் பாரு, தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தோட உயரத்தை நீ கண்டுபிடிக்கணும் அப்படின்னா கோபுரத்தோட உச்சிக்கு ஏறி இன்ச் டேப் வச்சுலாம் அளக்க வேண்டிய அவசியம் இல்லை, கோபுரத்திலிருந்து ஒரு 100 மீட்டர் தொலைவுக்கு போய் நின்று கொண்டு அதன் உச்சியின் ஏற்ற கோணத்தை அளந்தா போதும் உன்கிட்ட இருக்கிற tanθ வையும் 100 மீட்டர் அப்படிங்கிற தொலைவையும் கொண்டு உயரத்தை துல்லியமா சொல்லிடலாம்"
"அதுவே உனக்கு அந்த கோபுரத்தோட உயரம் தெளிவா தெரியும் ஆனால் எங்கேயோ தொலைவில் நீ மாட்டிக்கிட்டு நிக்கிற உன் கண்ணுக்கு கோபுரம் தெரியுது அப்படின்னா அங்கிருந்து கோபுர உச்சியோட கோணத்தையும் உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச கோபுரத்தோட உயரத்தையும் வச்சு கோவில்ல இருந்து நீ எவ்வளவு தூரத்தில் இருக்க அப்படிங்கறது கணக்கிட்டு விடலாம்!!"
"அட ஆமாப்பா இதுவே நான் ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்களேன் நாம லைட் ஹவுஸ் ஒரு தடவ போனோம் இல்ல அதுல உச்சியில் இருந்து கப்பல் தொலைவில வந்துட்டு இருக்கிறது எந்த கோணத்தில் பார்க்கிறோமோ அதையும் லைட் ஹவுஸ் ஓட உயரத்தையும் வச்சு கப்பல் எவ்வளவு தொலைவில் வருகிறது அப்படிங்கறத கண்டுபிடிச்சிடலாம் அதுவே இரண்டு வெவ்வேற நேர இடைவெளியில பார்த்தோம்னா அது வர வேகத்தையும் கண்டு பிடிச்சிடலாம்"
"அவ்வளவு தான் தெளிவா புரிஞ்சிக்கிட்ட"
"அப்பா ஆனா இந்த sin30, tan45,cosec60 போன்ற மதிப்புகள் இருக்கிற அட்டவணையை எப்படிப்பா உருவாக்கினார்கள்?!"
"Sin30=1/2 30° உள்ள ஒரு பத்து செங்கோண முக்கோணங்களை வரைந்து அதுல எதிர்ப்பக்கத்துக்கும் கர்ண பக்கத்துக்கும் உள்ள விகிதத்தை அளந்து பார் எதிர்ப்பக்கம் கர்ணத்தில் பாதியாக இருக்கும்"
" tan 45° =1 அப்படின்னா செங்கோண முக்கோணத்தில் எதிர்பக்கமும் அடுத்துள்ள பக்கமும் சமமா இருக்குமா?!"
"நிச்சயமா நீ வேணும்னா வரைஞ்சு செக் பண்ணி பாரு"
"இங்க பாரு அட்டவணை மதிப்புகள் எதுவுமே வானத்திலிருந்து எல்லாம் குதிக்கல இந்த 30 45 60 90 போன்ற அட்டவணை மதிப்புகள் எல்லாம் சில முக்கோண விதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டுபிடித்திருப்பாங்க, உனக்கு ஒரு வேளை சைன் 49 டிகிரி மதிப்பு வேணும்னா 49 டிகிரில ஒரு முக்கோணத்தை வரைந்து எதிர் பக்கத்துக்கும் கர்ண பக்கத்துக்கும் உள்ள விகிதத்தை கண்டுபிடி நிச்சயமா அதுதான் அட்டவணை மதிப்பு.
அதனால அட்டவணை மதிப்பை பார்த்து எல்லாம் மிரளக் கூடாது எந்த மதிப்பா இருந்தாலும் நாம ஈஸியா உருவாக்கி செக் பண்ணிக்கலாம் அதுக்கு நமக்கு தன்னம்பிக்கையும் கணித விதிகள் மேல அசைக்க முடியாத புரிதலும் இருந்தா போதும்"
"அதெல்லாம் சரிதான் பா ஆனா இப்படி வந்து தொக்கா மாட்டிக்கிட்டீங்களே!!"
"என்ன பிரச்சனை என்ன மாட்டிக்கிட்டேன் ?! சொல்லு கேட்போம்"
"இந்த முக்கோணவியல் மதிப்பு களுக்காக நாம டீல் பண்றது எல்லாமே செங்கோண முக்கோணங்கள். முக்கோணத்தோட மூன்று கோணங்களைக் கூட்டினால் 180 டிகிரி"
"செங்கோண முக்கோணம் அப்படிங்கறதால நிச்சயமா ஒரு கோணம் 90 டிகிரி. மத்த இரண்டு கோணங்களையும் கூட்டினால் 90 டிகிரி வரணும் ஆக நிச்சயமா இரண்டுமே குறுங்கோணங்கள் தான் அப்படி இருக்கும் போது எப்படி நீங்க அசால்டா sin 90° cos 90° tan 90° இதோட மதிப்பு எலலாம் அட்டவணையில் போட்டு வச்சிருக்கீங்க?!
"அது கூட பரவாயில்லைப்பா, ஈவிரக்கமே இல்லாம ஜீரோ டிகிரி மதிப்பெல்லாம் கூட போட்டு வச்சிருக்கீங்களே?!"
"அது ரொம்ப சிம்பிளான மேட்டர் தான் மாட்டிக்கிட்டேன்னு நினைக்காத அதைப்பற்றி அடுத்த பகுதியில விலாவாரியா பேசு வோம்"
Subscribe to:
Post Comments (Atom)
Sincostan - டிகிரி 3
Sincostan - டிகிரி 3 "சுற்றும் பூமி விட்டமும் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமு...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
Vera Vera level ayya
ReplyDelete