Friday, July 19, 2013

கடவுளுக்கு கடிதம்


ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அந்த ஆண்டு அங்கு கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து போனது. அந்த ஏழை விவசாயி வீட்டில் இருந்த உணவு பொருட்கள் தீர்ந்து போயிற்று. குழந்தைகளின் பசியை காண பொறுக்காத விவசாயி உதவி கேட்டு எல்லோரிடமும் கை ஏந்தினான். ஆனால் வறட்சி காரணமாக யாரும் உதவி செய்யக் கூடிய மனநிலையில் இல்லை.
உடனே அவன் கடவுளிடம் உதவி கேட்டுவிடலாம் என தீர்மானித்தான். எப்படி கேட்பது என்று யோசித்தான். சரி கடவுளுக்கு கடிதம் எழுதிவிடலாம் என தீர்மானித்து தனது நிலையை உருக்கமான ஒரு கடிதமாக வடித்து எடுத்தான். ஒரு 800 டாலர்கள் பணம் வேண்டி எழுதியிருந்தான். ஒரு வருடத்தை சமாளிக்க அந்த பணம் போதும் என எண்ணினான். சரி எந்த விலாசத்திற்கு அனுப்புவது என்று யோசனை செய்தபோது கடவுள் கண்டிப்பாக சொர்க்கத்தில் தான் இருப்பார் என்று தீர்மானித்து ”கடவுள்”, ”சொர்க்கம்” என விலாசம் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டான்.
அஞ்சலகத்தில் கடிதம் பிரிக்கும் பிரிவில் உள்ளோர் ஒரு விசித்திரமான விலாசத்திற்கு கடிதம் வந்துள்ளதால் ஏற்பட்ட சிக்கலை எண்ணி குழம்பி போயிருந்தனர். சொர்க்கம் என வந்துள்ளதே இதை எங்கு சேர்ப்பது என தெரியாது விழித்தனர். கடவுளுக்கு அப்படி என்ன தான் கடிதம் எழுதப்பட்டுள்ளது என ஆர்வமிகுதியால் பிரித்து படித்தே விட்டனர். அந்த ஏழைவிவசாயி யின் நிலையையும் அவன் கடவுளிடம் கேட்டால் கிடைக்கும் என்று நினைத்த வெகுளிதனத்தையும் எண்ணி மனவேதனையுற்றனர். உடனே அவர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை வசூல் செய்து அவனுக்கு 400 டாலர்கள் கடவுள் என்ற சுய விலாசம் எழுதி அனுப்பி வைத்தனர்.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் கடவுள் விலாசத்திற்கு கடிதம் வந்திருந்தது. எல்லோரும் அதிர்ந்தனர். பிரித்து படித்தனர் அதில் இவ்வாறு இருந்தது.
”“கடவுளே உனது உதவிக்கு மிக்க நன்றி. பக்தர்களின் உதவிக்கு செவிமடுப்பாய் என எனக்கு நன்கு தெரியும். பக்தர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றுபவன் நீ. இருந்தாலும் இனி எனக்கு உதவி கோரி கடிதம் அனுப்பினால் தயவு செய்து நீ நேரடியாக எனக்கு வந்து கொடுத்து விடு. நான் 800 டாலர்கள் கேட்டிருந்தேன். கண்டிப்பாக நீயும் 800 டாலர்கள் தான் அனுப்பியிருப்பாய் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால் அஞ்சல் துறையில் இருப்பவர்கள் யாவும் திருடர்களாய் இருக்கிறார்கள். நீ அனுப்பிய 800 டாலரில் 400 டாலர்களை எடுத்துக்கொண்டு மீதி 400 டாலர்களை மட்டும் தான் எனக்கு கொடுத்தார்கள்”.“ கடிதம் படித்து அனைவரும் அதிர்ந்து போய் மயங்கினர்.

Thursday, July 11, 2013

சாதி வெறி இப்போது படித்தவர்கள் மத்தியில் மிக அதிகம்


ஒரு அலுவலகத்தில் புதிதாக ஒருவர் வேலைக்கு வந்தவுடன் அவர் என்ன சாதி என அறிவதில் பெரும்பாலானோர் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அவர் நம்ம சாதியாக இருக்க வேண்டுமே என்ற பதட்டம் மேலிட புலண் விசாரணையில் இறங்கிவிடுகின்றனர். கீழே உள்ள எடுத்துக்காட்டை படியுங்களேன். (இது ஒரு தலைமையாசிரியருக்கும் ஒரு ஆசிரியருக்கும் நடந்த உரையாடல்)
“உங்க ஊர் சார்? (முதல் தூண்டில்)
“நான் ---- ஊர் சார்“.
“அப்படியா, அங்கே ----- வை தெரியுமா?“(அவர் எனக்கு மாமாதான் என்று சொல்லிவிட்டால் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார் ஆனால்...)
“ நான் --- ஊர்தான் சார் ஆனால் சின்னவயதிலிருந்து வெளியுரில் படித்ததால் எனக்கு ஊரில் நிறய பேர தெரியாது சார், இன்னும் என்ன வெளியுர் காரன்னுதான் கொள்ள பேர் நினச்சிட்டு இருக்காங்க“ (பயபுள்ள இந்த பால்ல சிக்கலயே.. எடு அடுத்த பால)
“அப்படியா, நம்ம வீடு எங்க தம்பி இருக்கு?“( இப்ப தெரு பேர வச்சி கண்டுபிடிச்சிடுவோமில்ல)
“இப்போ நாங்க --- டவுனில் இருக்கோம் சார்“( சற்றே எரிச்சலடைகிறார்)
“சரி உங்க சொந்த ஊரில் உள்ள உங்க பழைய வீடு எங்க இருக்கு தம்பி” (இப்போ பிடிச்சோமில்ல)
”அதுவாசார் ---(சாதி பெயர்) தெருவில் இருக்கு சார்“(இப்போ தான் நிம்மதி அடைகிறார் இருந்தாலும் சற்றே சுதாரித்து)
“அடடே நான் அதெல்லாம் பாக்கிறதில்லப்பா நீ (கவனிக்க “நீங்கள்“ , “நீ“ ஆகிவிட்டதை) நம்ம ஊரு பையன் கிறதால வீடு எங்க இருக்குனு கேட்டேன்“.


Saturday, June 29, 2013

Geothermal Electricity Production

Most power plants need steam to generate electricity. The steam rotates a turbine that activates a generator, which produces electricity. Many power plants still use fossil fuels to boil water for steam. Geothermal power plants, however, use steam produced from reservoirs of hot water found a couple of miles or more below the Earth's surface. There are three types of geothermal power plants: dry steam, flash steam, and binary cycle.
Dry steam power plants draw from underground resources of steam. The steam is piped directly from underground wells to the power plant, where it is directed into a turbine/generator unit. There are only two known underground resources of steam in the United States: The Geysers in northern California and Yellowstone National Park in Wyoming, where there's a well-known geyser called Old Faithful. Since Yellowstone is protected from development, the only dry steam plants in the country are at The Geysers.
Flash steam power plants are the most common. They use geothermal reservoirs of water with temperatures greater than 360°F (182°C). This very hot water flows up through wells in the ground under its own pressure. As it flows upward, the pressure decreases and some of the hot water boils into steam. The steam is then separated from the water and used to power a turbine/generator. Any leftover water and condensed steam are injected back into the reservoir, making this a sustainable resource.
Binary cycle power plants operate on water at lower temperatures of about 225°-360°F (107°-182°C). These plants use the heat from the hot water to boil a working fluid, usually an organic compound with a low boiling point. The working fluid is vaporized in a heat exchanger and used to turn a turbine. The water is then injected back into the ground to be reheated. The water and the working fluid are kept separated during the whole process, so there are little or no air emissions.
Small-scale geothermal power plants (under 5 megawatts) have the potential for widespread application in rural areas, possibly even as distributed energy resources. Distributed energy resources refer to a variety of small, modular power-generating technologies that can be combined to improve the operation of the electricity delivery system.
In the United States, most geothermal reservoirs are located in the western states, Alaska, and Hawaii.

Saturday, September 29, 2012

ஐயோ,வேண்டாமே, ஹீலியம் பலூன்

இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால் ஹீலியம் வாயு நிரபப்பட்ட பலூன்களை வாங்கி ஆங்காங்கு கட்டி விடுகிறார்கள். சென்னை உட்பட பெரிய நகரங்களில் இவ்வகை பலூன்களை விற்பதற்கென ஏஜன்சிகள் உள்ளன். இவை பார்ட்டி பலூன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள்
மேலை நாடுகளில் கேட்கவே வேண்டாம். விதவிதமான ஹீலியம் பலூன்கள்.விலங்குகள் உருவத்தில் பெரிய பெரிய பலூன்கள், உலோகப் பூச்சு கொண்ட பல வித வர்ணம் தீட்டப்பட்ட பலூன்களும் உண்டு.

ஹீலியம் என்பது  ஒரு வகை வாயு. அது தீப்பிடிக்காதது. அந்த வாயு நிரப்பப்பட்ட பலூனின் நூலை விட்டால் அது  உயரே போய்விடும். ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது. ஆகவே தான் ஹீலியம் பலூனும் ஹைட்ரஜன் பலூனைப் போலவே  நூலை விட்டால் மேலே போய் விடும்.ஆகவே பார்ட்டிகளில் ஹீலியம் பலூன்களைக் கொத்து கொத்தாகக் கட்டி வைப்பார்கள்.
உலோகப் பூச்சு கொண்ட விலங்கு வடைவிலான பலூன்கள்
ஹீலியம் என்ற வாயு  உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலஸ் ஜான்சன்  என்ற வானவியல் விஞ்ஞானி பூரண சூரிய கிரகணத்தை ஆராய்வதற்காக சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்திருந்தார். ஆந்திர மானிலத்தில் குண்டூரில்  1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி
அவர் சூரிய ஒளியின் நிறமாலையை ஆராய்ந்த போது மஞ்சள் நிற வரியைக் கண்டார்.

 பின்னர் அதே ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி  நார்மன் லாக்கியர் இந்த விஷயத்தை மேலும் ஆராய்ந்து அதுவரை அறியப்படாத தனிமத்தை (Element)  அது காட்டுகிறது என்றார். இந்த இருவரும் ஹீலியத்தைக் கண்டுபிடித்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஜூலஸ் ஜான்சன்
அந்த தனிமத்துக்கு ஹீலியம் என்று பெயர் வைக்கப்பட்டது. கிரேக்க மொழியில் ஹீலியம் என்றால் சூரியன். முதலில் சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பிறகே பூமியில்  கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் உண்டென்றால் அது ஹீலியம் ஆகும்.

உலகில் மிக நீண்ட காலமாக  ஹீலியம் உற்பத்தியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திவகிற்து. அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில்  காணப்படும் எரிவாயுப் படிவுகளிலிருந்து ஹீலியம் எடுக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளில் பல நூறு கோடி லீட்டர் அளவுக்கு ஹீலியம் வாயுவை சேமித்து வைத்து வந்தது.

 இந்த சேமிப்புகளில் கணிசமான பகுதியை காலி செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்தத்தைத் தொடர்ந்தே ஹீலியம் நிறைய அளவில் மார்க்கெட்டுக்கு வந்தது. அதன் முக்கிய விளைவுகளில் ஒன்றுதான் ஹீலியம் பலூன்கள். எதுவும் தாராள்மாக, எளிதில் கிடைக்கிறது என்றால் அப்பொருள் அர்த்தமில்லாமல் வீணடிக்கப்படும். ஹீலியம் வாயு விஷயத்தில் இது பொருந்தும்.

ஹீலியம் வாயு இயற்கை வளங்களில் ஒன்று. ஆனால் இது ஒன்றும் எல்லா இடங்களிலும் கிடைப்பது அல்ல. அண்மைக்காலமாக அல்ஜீரியாவிலும் ரஷியாவிலும் கிடைக்கிறது. ஹீலியம் வற்றாமல் கிடைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் உலகில் பல நிபுணர்களும் ஹீலியத்தை வீணடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஹீலியம் பற்றிய விசேஷ ஆராய்ச்சிக்காக 1996 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ரிச்சர்ட்சன் கூறுகையில்.  ஹீலியம் பலூன்கள் மூலம் ஹீலியம் வீணடிக்கப்படுவதைக் கண்டித்துள்ளார்.

பார்ட்டி பலூன்கள் மூலம் ஹீலியம் வீணாக்கப்படுவதை பிரிட்டனில் உள்ள ரூதர்போர்ட் ஆப்பிள்டன் ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி ஓலெக் கிரிசெக் கண்டித்துள்ளார். மற்றும் பல நிபுணர்களும் ஹீலியம் பார்ட்டி பலூன் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 MRI ஸ்கேன் எடுக்கின்ற பெரிய கருவிகளில் காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பயன்படுத்தப்ப்டுகிறது.அண்மையில் ஹிக்ஸ் போசான் துகளைக் கண்டுபிடித்த CERN ஆராய்ச்சிக்கூடத்தின் சுமார் 1600 காந்தங்களைக் கடுமையாகக் குளிர்விக்க ஹீலியம் பய்ன்படுத்தப்படுகிறது.மற்றும் பல ஆராய்ச்சிக்கூடங்களுக்கு ஹீலியம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
இன்று ஹீலியத்தை வீணாக்கினால் எதிர்கால்த்தில் ஹீலியம் கிடைப்பது திண்டாட்டமாகி விடலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றிலும் ஆங்காங்கு கட்டப்பட்ட ஹீலியம் பலூன்களின் நடுவே மது மயக்கத்தில் உரத்த குரலில் கூச்சலிட்டபடி பார்ட்டியைக் கொண்டாடுவோரின் காதில் இதெல்லாம் விழுமா?

Share SubscribeThanks to Ramakrishnan Dhinamani

Wednesday, July 4, 2012

 Do you want to get lot of interesting Science facts in tamil. Try the following link. Here the noteARIVIYAL PURAMd award winning science article writer (formerly a regular columnist in Dinamani kathir) Mr.N.Ramadurai gives you down to earth simple explanation for big science concepts. Really a reader can enjoy.

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...