Saturday, April 27, 2024
ஆவேஷம் -மலையாளப்படம்
நான் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் மேல்நிலை வகுப்புகள் 1992-1994 ல் படித்தேன்.
அருமையான ஆதிதிராவிடர் நல விடுதியில் இரண்டு ஆண்டுகள் வாசம். என்னை "லால்குடி டேஸ்" என்கிற நூல் எழுதுமளவுக்கு பாதித்த அனுபவங்கள். (அமேசான் கிண்டிலில் உள்ளது வாசியுங்கள்)
11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையில் இரண்டு கோஷ்டிகள், அவர்களுக்குள் எப்போதும் ஒரு பகை புகைந்து கொண்டே இருந்தது.
ஆண்டு இறுதித் தேர்வு முடியும் தருவாயில் அது சண்டையாக வெடித்தது. வலு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட மாணவர்கள் லோக்கல் ரவுடிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுவாக இருந்ததாக கருதப்பட்ட மாணவர்களை சாலைகளிலேயே நைய புடைத்து விட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம். அந்த காலகட்டத்தில் மீடியா வீடியோக்கள் இது மாதிரியான செட் அப் பரவலாக இல்லாத காரணத்தினால் அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்த ஒரு அண்ணனுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது அந்த அளவுக்கு இரத்தக் கலரியான ஒரு சண்டை.
ஆவேசம் படத்தின் கதை சற்றேறக்குறைய இது போன்றது தான்.
கேரளாவில் இருந்து மூன்று மாணவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள்.
வழக்கம் போல சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்கிறார்கள்.
கல்லூரிக்கு வெளியே லேசாக ஆதிக்கம் செலுத்த முனையும் போது இந்த கேரள மாணவர்கள் "சீனியர் ஜூனியர் எல்லாம் காலேஜ்ல தான் வெளியில் எல்லாம் கம்முனு போங்க" என்று எதிர்த்து பேசி விடுகிறார்கள்.
அதனால் இரவு நேரத்தில் கும்பலாக வந்து இவர்களை கடத்திக் கொண்டு போய் நான்கு நாட்கள் நன்கு வைத்து செய்கிறார்கள்.
அதனால் ஆவேசமடைந்த அந்த கேரள பையன்கள் எப்படியாவது இங்கே உள்ளூரில் உள்ள ஒரு ரவுடி உடன் சினேகம் கொண்டு சீனியர்களை பழிவாங்கி விட வேண்டும் என்று வெறிகொண்டு தேடுகிறார்கள்.
அப்படி சிக்குபவர் தான் நம்ம ஃபகத் ஃபாசில். அவரது துணைகொண்டு சீனியர்களை அடித்தார்களா ?
திரும்ப ஃபகத் ஃபாசில் இடம் இருந்து விலகி தங்களது படிப்பை தொடர்ந்தார்களா இல்லை புலிவாலை பிடித்த கதை ஆனதா? என்கிற விஷயத்தை சிரிக்க சிரிக்க சொல்லும் படம் தான் இது.
அவ்வளவு நகைச்சுவை. ஒரு பெரிய ரவுடிக்கான எந்த ஒரு புறத்தோற்றமும் இல்லாத ஃபகத் ஃபாசில் கழுத்து நிறைய செயின் கை நிறைய மோதிரம் மற்றும் மீசை உடல் மொழி இவற்றை வைத்து தெறிக்க விட்டிருப்பார்.
அவ்வளவு அசுரத்தனமான ஒரு நடிப்பு. அவருடன் இருக்கும் சக ரவுடிகளுக்கும் மிக அருமையான சண்டைக் காட்சிகளை அமைத்து இருப்பார்கள்.
ஏனோ தெரியவில்லை அவர்களுடன் இருக்கும் அனைத்து ரவுடிகளும் Y=-x^2 என்கிற parabola வடிவ மீசையே வைத்துள்ளார்கள்.
படத்தில் ஒரு அம்மா கதாப்பாத்திரம் தவிர வேறு பெண் கதாப்பாத்திரமே இல்லை. கல்லூரியில் கும்பலோடு கும்பலாக சில பெண்கள் வருகிறார்கள் அவ்வளவுதான்.
ஃபகத் ஃபாசிலின் குடும்ப தயாரிப்பு.
நன்றாகவே கல்லா கட்டுகிறது.
தொடர்ந்து மலையாள படங்கள் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமா என்பது தெரியவில்லை.
ஏனெனில் போதுமான பல நல்ல படங்கள் தமிழில் வராத காரணத்தினால் அந்த வெற்றிடத்தை கச்சிதமாக மலையாளப் படங்கள் நிரப்புகின்றன என்று சொல்லலாம்.
மஞ்சு மேல் பாய்ஸ் படத்துக்கு பிறகு இந்த படத்துக்கும் நான் பார்த்த தியேட்டரில் இருக்கைகள் அநேகமாக நிரம்பி இருந்தன.
பக்கா தியேட்டரிக்கல் மெட்டீரியல் நிச்சயமாக தியேட்டரில் குழந்தைகளோடு பார்த்து இந்த கோடை விடுமுறையை கொண்டாடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
Movie story + your 11th std event sonnathukku thanks Sir. Meessaikki your maths formula Super. Try y= - messai ungalukku mallarukka parkkalam Sir. Tamilil good movie varathathu really bad Sir.
ReplyDelete