Thursday, April 11, 2024
ரோமியோ - விமர்சனம்
நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத்தினால் அந்த படம் மெகா ஹிட் அடித்ததோடு இன்றி கௌதம் குறிப்பிடத்தக்க ஸ்டைலிஷ் இயக்குனர் ஆனார்.
இன்று பார்த்த படம் விஜய் ஆண்டனி நடித்த "ரோமியோ".
அருணும் அகிலாவும் ஒரு திருமண சடங்கிற்காக சென்னை சென்றிருந்தார்கள். லீவு நாள் வேறு. ஆகவே இந்த சுதந்திரப் பொன்னாளை அவசியம் கொண்டாடியே தீர வேண்டும். என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையில் கடைத்தெருவை கடந்தபோது ரோமியோ பட ரிலீஸ் போஸ்டர் கண்ணில் பட்டது. முதலிரவு அறையில் புதுமாப்பிள்ளை கையில் பால் செம்பு, பெண்ணோ ஒரு தேர்ந்த BAR TENDER ன் நேர்த்தியோடு சரக்கை குவலையில் குடைசாய்த்துக் கொண்டு இருந்தாள்.
ஆகா, ஏதோ சம்பவம் இருக்கு என்று எண்ணி டிக்கெட் புக் பண்ணினேன்.*
(ஆனா, போஸ்டரில் இருந்த அந்த காட்சி படத்தில் இல்லை என்று படம் முடிந்தபோது ஆதங்கத்தோடு இரண்டு பேர் பேசிக்கொண்டு சென்றனர்) தியேட்டர் போன பிறகு தான் புரிந்தது அவ்ளோ அவசரமாக ஆன்லைனில் புக் பண்ணி இருக்க வேண்டாம் என்று. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை.
சரி படத்திற்கு வருவோம்.
நமது கலாச்சாரத்தில் பெற்றோர் தங்கள் பாசத்துக்குறிய குழந்தைகளுக்கு நடத்தும் ஆகச்சிறந்த வன்முறையான சூதாட்டம் என்பது ARRANGED MARRIAGE தான். (எனக்கெல்லாம் எனது விருப்பம் தான்)
ஒவ்வொரு பையனுக்கும் பெண்ணுக்கும் பெற்றோரிடம் ஒரு முகமும் பர்சனலாக வேறுமுகமும் உண்டு.
இது தெரியாமல் மடத்தனமாக "என் பையன் கழுதையை கட்டிக் கொள்ள சொன்னாலும் கட்டிக் கொள்வான்" என்று பெருமை பீத்தக் கலையம் வேறு!!
நமது சமூக சூழலில் திருமணம் மிகவும் புனிதமாகவும், வாழ்க்கையின் அதிமுக்கிய படிநிலையாகவும் பார்க்கப் படுகிறது.
எனவே தான் திருமண பந்தம் ஒவ்வாத சூழலிலும் வாழ்நாள் முழுவதும் சகித்துப் போக நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
பொருந்தாத திருமண உறவை முறித்து வெளியேறி ஆசுவாசம் அடைவோரை பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயத்தையும் அவர்கள் குறித்த தவறான முன் அனுமானத்தையும் சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது.
இந்தப் படத்தின் கதைகூட மௌனராகம் படம் போன்றதுததான்.
ரேவதிக்கு கார்த்திக் என்பதற்கு பதிலாக அவளது லட்சியம். நாயகிக்கு சற்றும் நாயகன் மீது விருப்பம் இல்லை. ஆனாலும் அவளது லட்சியத்தை அடைய உதவுகிறான். இதன் காரணமாக நாயகி மனது மாறி இணைந்தார்களா என்பதுதான் கதை!!
சுவாரசியமான தெளிவான திரைக்கதை. வசனங்களும் சிறப்பு.
"சார், ஹீரோவை பார்த்து நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று ஹீரோயின் கேக்குறா சார், அதுக்கு ஹீரோ ஓங்கி அறையுறான் சார்?"
"அறைஞ்சா?!, அறைஞ்சா ஆம்பளை ஆயிடுவானா?!, சார் என்ன சார் சீன் வைக்கிறீங்க கொஞ்சம் நல்லதா வைங்க சார். இத மாத்திடுங்க"
கதையை நகைச்சுவையாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். எல்லோர் கேரக்டர்களிலும் காமடி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் மொத்த நகைச்சுவையும் விஜய் ஆண்டனியால் காலி ஆகிவிடுகிறது. பாவம் அவருக்கு சுத்தமாக காமடி வரவில்லை.
விஜய் ஆண்டனி இடத்தில் கார்த்தி இருந்தால் பிரித்து மேய்ந்திருப்பார்.
ஆனால் படம் தொய்வில்லாமல் நன்றாகவே செல்கிறது. நிச்சயமாக பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment