Thursday, December 9, 2010

படித்ததில் பிடித்தது- கவிதைகள்.


நம்புங்கள்

முச்சந்தியில் விளக்கேற்றுங்கள்
தாலி பாக்கியம் தங்க
மஞ்சள், பச்சையில்
புடவை உடுத்துங்கள்.

அண்ணாமலை தீபம் அணைந்ததாம்
அடுக்கடுக்காக இனி
துன்பங்கள்தான் என்கிறார்கள்

மூத்த பிள்ளைக்கு ஆகாதாமே?
மறக்காமல் வேப்ப மரத்தில்
மஞ்சள் கயிறு கட்டுங்கள்

வீட்டுக்கு வீடு மரம் நடுங்கள்
புவியே பிழைக்காதென்றால்
புரளியாய்க்கூட
நம்புகிறார்களில்லை!



கருத்து
இந்த உலகத்திலேயே சிறந்த இசையாக ஒவ்வொருவருக்கும் தோன்றுவது, அவரவர்களின் பெயர் ஒலிக்கும் ஓசைதான். வஞ்சனை இல்லாமல் எப்போது எல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ஒருவரை பெயர் சொல்லி அழையுங்கள்.
     சபையோர் முன் ஒருவரை பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது என்றால், தனிமையில் கண்டியுங்கள்.

காட்சி
காட்சி ஆரம்பித்தது
கதை நாயகி குளித்துக்கொண்டிருந்தாள்
வில்லன் அதை
விஷமத்தனமாகப்
பார்த்துக்கொண்டிருந்தான்
உன் அக்கா தங்கச்சிய
இப்படிப் பாப்பியாடா..
வசனம் பேசி
சண்டையிட்டான் கதை நாயகன்
நாயகனுக்கு நன்றி சொல்லிவிட்டு
குளிக்க ஆரம்பித்தாள் நாயகி
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்!
-நன்றி ஆனந்த விகடன்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...