Tuesday, December 21, 2010

நானோ டெக்னாலஜி

டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது டாக்ரேட் ஆராய்ச்சிக் கட்டுரை-ஐ அளிக்கும் போது ஒரு சர்க்கரை மூலக்கூறின் கூட்டணுவின் பரிமாணத்தை சுமார் ஒரு நானோமீட்டர் என்று அறிவித்தார், முதன் முதலாக நானோமீட்டர் என்னும் அளவு உலகுக்கு அறிமுகமானது. நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியன் பகுதி. ஒரு நானோமீட்டர் என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை பக்கத்தில் வைத்தால் கிடைக்கும் நீளம்." நானோ" உலகின் விதிகள், குவாண்டம் இயற்பியல் விதிகள். இவைகளை விளக்க புதிய முறைகள், கருவிகள் வேண்டும். அவைகளை சரியாக அறியும் போது வெளிப்படும் சாத்தியங்கள் மனிதனை கடவுளுக்கு அருகில் கொண்டுசெல்கின்றன. சுமார் நூறு நானோ மீட்டரில் இருந்து நானோ டெக்னாலஜி ஆரம்பிக்கிறது. படிப்படியாக அளவு குறைந்துகொண்டேபோய் ஒரு தனிப்பட்ட எலெக்ட்ரானை நம் விருப்பத்தை போல நடத்துவதுதான் இந்த இயலின் குறிக்கோள். ஆராய்ச்சி முறைகள் சில, " இது சாத்தியமே" என்கிற நம்பிக்கையை தருகின்றன. நானோ டெக்னாலஜின் ஆதார சாகசம் அணு அளவில் பொருள்களை நம் விருப்பதை போல மாற்றுவது. ஒரு பொருளின் அணுகட்டத்தை மாற்றினால் அந்தப் பொருளின் இயற்கை பண்புகள் மாறிவிடும் என்பதே இதன் அடிப்படை. உதாரணமாக, அடுபுக்கரியின் அணுகட்டமைப்பை சற்று மாற்றினால் அது வைரமாகிறது. இயற்கையில் இயல்பாக நடக்கும் இயற்கை வினைகளை ஒரு ஆராய்ச்சிசாலையில் மனிதன் செய்ய முடியும் என்று நம்பிக்கை தருகிறது இந்த டெக்னாலஜி. டெக்ஸ்லெர், மூலக்கூறு கம்ப்யூட்டர்களை வடிவமைபத்ற்கான யோசனை இயற்கையில் ப்ரோடீன் தயாரிப்பை கவனித்தால் கிடைக்கும் என்று சொல்கிறார். மேலும் ஒரு மரபணு அதற்குள்ளேயே அதன் இறுதி வடிவத்தின் செய்தியை வைத்திருப்பதை போல ஒரு கம்ப்யூட்டர் தான் இறுதியில் இந்தப் வேலை செய்யும் சாதனமாகப் போகிறோம் என்கிற அறிவை அதற்குள்ளே வைத்துவிட முடியும் என்கிறார். நூறு நானோ மீட்டரைவிட நுட்பமாக பொருள்களை தயாரிக்கும் திறமைதான் நானோ டெக்னாலஜி. இந்தத் திறமையை இரண்டு விதமாக அணுகுகிறார்கள், ஒன்று, "டாப் டவுன் " மற்றொன்று "பாட்டம் அப் ". அதாவது படிப்படியாக அளவை மாற்றிக்கொண்டே போய் "நானோ" அளவை எட்டுவது. இன்றைய தினத்தின் மைக்ரோ டெக்னாலஜி முறைகள் இந்த "டாப் டவுன்" வகையைச் சார்ந்தவை.மூலக்கூறுகள் என்னும் கூட்டணுவை ஒரு ச்விட்சாக மாற்றலாம் என்கிற யோசனை சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. இது சமிபத்தில் தான் நடைமுறையில் சில வேதியியல் பொறியியல் வளர்ச்சிகளினால் சாத்தியமாகி இருக்கிறது. மூலக்கூறுகள் என்னும் கூட்டணுக்கள் சில சேர்ந்து கொண்டு oxidation reduction என்னும் வேதியியல் மாற்றம் பெறும் போது ஒரு ச்விட்சாக இயங்குகிறது என்று UCLA பல்கலைகழகத்திலும், ஹியூலிட் பக்கர்டு நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். நானோ டெக்னாலஜியின் பொருள்கள் வாயு அல்லது திரவ வடிவில் இல்லாமல் அதே சமயம் திடப்பொருள்கள் போல திடமாக இல்லாமல் குறிப்பிட்ட வரிசையில் மாறக்கூடிய திடப்பொருள்கள். நானோ டெக்னாலஜியின் தயாரிப்பு முறையில், அணு அளவில் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு பொருளை அணு அணுவாக, சீராக உற்பத்தி செய்ய முடியும் என்பது சாத்தியம் எனில் கழிவுப் பொருள்கள் இருக்காது. தொழிற்சாலைகளில் விஷ வாயுக்களை காற்றில் கலக்காமல் செயல்படுத்தலாம். விரயமான செயல்கள் இல்லாததால் ஆற்றல் அதிகரிக்கும்.
இன்றைய இந்தத் தொழில்நுட்பம் ஓர் அபரிவிதமான வளர்ச்சியை மனித வாழ்வில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...