Thursday, December 9, 2010

தமிழ் நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் SSLC தேர்விற்கு கணிதப் பாடத்தில் தயாராவது எப்படி?

 மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை 1 முதல் 42 வரை உள்ள அனைத்துக் கணக்குகளையும் குறிப்பிட்ட வரையறைக்குள் பொருத்தி விடலாம். ஏதேனும் 3 பழைய வினாத்தாள்களை வினா வாரியாக ஒப்பிட்டால் இதனை நீங்களே உணர முடியும்.
 இரண்டு மதிப்பெண் கணக்குக்ளைப் பொறுத்தவரை 7 கணக்குகள் மிக எளிது என்ற வகையில் வருகின்றன. அவற்றுடன் இன்னும் 3 கணக்குகளை சேர்த்து பயிற்சி செய்தால் கண்டிப்பாக 20 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்
 20 ஐந்து மதிப்பெண் கணக்குகளிலிருந்து ஏதேனும் 9 கணக்குகளை செய்தால் மட்டும் போதும் என்ற வகையில் வினாத்தாள் வடிவம் உள்ளது. எனவே 5 மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை உங்களுக்கு சுலபமான 9 கணக்குகளை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தால் 45 மதிப்பெண்கள் நிச்சயம்.
 செய்முறை வடிவியலைப் பொறுத்தவரை வட்ட நாற்கரம் மற்றும் இரட்டைத்தொடுகோடுகள் கணக்குகளை பயிற்சி செய்தால் 10 மதிப்பெண்ணை உறுதி செய்து விடலாம்.
 வரைபடம் பகுதியில் நேர்மாறல் எதிர்மாறல் வரைபடம் வரைவதும் சரி கணக்கீடு செய்வதும் சரி மிகச்சுலபம் அதனை பயிற்சி செய்தாலே எந்த சிரமமும் இல்லாமல் 10 மதிப்பெண் பெற்று விடலாம்.
 1 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டுமே வரும் என்பதால் பழைய வினாத்தாட்களைக் கொண்டு தயார் செய்தால் 15 மதிப்பெண் வாங்கிவிடலாம். நண்பர்களிடையே போட்டி வைத்துக் கொண்டு 1 மதிப்பெண் வினாத்தாள் தயார் செய்து தேர்வு வைத்துக் கொள்ளலாம்
இது தொடர்பாக அட்டவணைப் படுத்தப்பட்ட எதிர்பார்க்கப்படும் வினா வகைகள் தேவைப்படின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...