Tuesday, December 4, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம்-5 வாட்சாப்-1




“என்னய்யா நினைச்சு கிட்டு இருக்கீரு நீரு, எங்களுக்கு என்ன வாட்சாப் தெரியாதா. காலையில் எந்திரிச்சி வாய் கொப்பளிக்கறது கூட வாட்சாப் பாத்த பின்னாடிதான். எங்க கிட்டயே வாட்சாப் பத்தி சொல்லப் போறீரோ!!” என்று நீங்கள் கோபப்படக்கூடும். இருந்தாலும் வாட்சாப் ல் உள்ள அனைத்து வசதிகளும் நமது பயன்பாட்டில் உள்ளதா? அனேகமாக இல்லை. நாம பாட்டுக்கு மெசேஜ் பாக்குறது பார்வேர்ட் செய்யறது என்றுதான் இருக்கிறோம். புதிதாக மெசேஜ் டைப் பண்ணக் கூட சிலருக்கு தயக்கம். சரி அது என்ன என்ன புது வசதிகள் என்று பார்ப்போம்.

கணினியில் வாட்சாப் பார்க்கலாம் தெரியுமா?

ஆமாம் வாட்சாப் மொபைலில் மட்டுமே பார்த்து பழகியிருப்போம். ஆனால் கணினியிலும் பார்க்கலாம். செய்திகளை டைப் செய்து அனுப்பலாம் பகிரலாம். எல்லாமே செய்யலாம்.
முதலில் கூகுள் க்ரோமிலோ அல்லது வேறு ஏதாவது இணைய உளாவியிலோ (தமிழ்ல(?!) பிரௌசர் ன்னும் சொல்லலாம்) web.whatsapp.com என்ற முகவரிக்கு சென்றால் QR code உடன் ஒரு பக்கம் ஓப்பன் ஆகும். அதில் உங்கள் வாட்சப் இணைப்பை இணைக்க வாட்சப் ஐ திறந்து வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொட்டால் மூன்றாவதாக whatsap web இருக்கும். அதை தொட்டால் QR Scanner (camera) திறக்கும். அதை வைத்து கணினி திரையில் தெரியும் QR code ஐ ஸ்கேன் செய்தால் வாட்சாப் கணினியோடு இணைந்து விடும். அதற்கான தகவல் உங்கள் மொபைலில் தெரியும். நீங்க எப்போ வேண்டுமானாலும் மொபைலில் இருந்தே லாக் அவுட் செய்து வெளியேற இயலும். கணினியில் இணைந்த பின்பு நீங்க மொபைலில் என்னவெல்லாம் செய்தீர்களோ அதையெல்லாம் கணினியில் இருந்தே செய்ய இயலும்.

வாட்சாப் செய்தி ஒளிபரப்பு


நீங்க குரூப்ல எதாவது சொன்னாக்கா (அதுவும் பேமிலி குரூப்பிலோ அல்லது கல்லூரி நண்பர்கள் குரூப்பிலோ) கொஞ்சம் கேப் கெடைச்சாலும் கலாய்ச்சு தள்ளிடுவாங்க. அப்புறம் வாதம் எதிர் வாதம் என வீணாக கால விரயம். அதுவே ஒரே நேரத்தில ஒரு குரூப் ஆஃப் மக்களுக்கு செய்திகளை சொல்லிவிட்டு பின்னங்கால் பிடரியில் பட சிட்டா பறந்து போக வழி இருக்கா. இருக்கு. அது தான் வாட்சாப் செய்தி ஒளிபரப்பு.(Broad cast)
இதுக்கு முதல்ல வாட்சாப் குரூப் ஆரம்பிக்கிற மாதிரியே ஆள்புடிக்கணும். செய்தியின் தன்மையை பொறுத்து யார்யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டியிருக்குமோ அவர்களை எல்லாம் ஒரு பட்டியில் அடைக்க வேண்டும். அப்புறம் உள்ளே போய் வலது மேல் மூலையில் உள்ள 3 புள்ளிகளை தொட்டால் broad cast list info என்று இருக்கும். அதில் போய் குரூப்புக்கு பெயர் சூட்டு விழா நடத்தி விட வேண்டியது தான். நாள பின்ன எந்த குரூப்புக்கு எந்த சேதிய ஒளி ஒலி பரப்ப வேணும்னு தெரியவேணாமா?
அப்புறம் அந்த பட்டிக்குள்ள போய் எதுனா சொன்னிங்கண்ணா போதும் ஒன்லி அவுட் கோயிங்தான் நோ இன்கமிங்.
அலுவல் ரீதியாக செய்திகளை பகிர்வதற்கு இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இயலும். சேட்டுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.
அதில் சேதி பொது வெளியில் பகிரங்கமாக இருக்கும். ஒவ்வொருவரின் பதிலும் கூட ரகசியத் தன்மை இன்றி பொதுவில் தான் இருக்கும்.
Broadcast ல் செய்தியை சொன்னது நீங்கதான் என்று தெரியும். ஒவ்வொருவரும் கூறும் பதிலும் உங்களுக்கு தனித் தனியே வரும். அந்த லிஸ்ட் இருப்பதோ அல்லது அதன் உறுப்பினர்களோ பெறுநர்களுக்கு தெரியாது.
ஐந்து வரிகள் சேர்ந்தாற்போல் இருந்தாலே நமக்கு கண்ண கட்டும். இத்தனை வரிகளை வாசிப்பது சலிப்படையவே செய்யும். அதனால் வாட்சாப் பற்றி மேலும் சில வசதிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...