Friday, December 14, 2018

மொபைல் அப்ளிகேஷன்ஸ் அறிவோம் -6 வாட்சாப் -2


மொபைல் அப்ளிகேஷன்ஸ் அறிவோம் -6 வாட்சாப் -2
போன பகுதியில் கணினியில் வாட்சப் பார்ப்பது குறித்தும்  Broadcasting குறித்தும் பார்த்தோம்.



வாட்சப் குரூப் களில் தகவல் மழை பொழிந்த வண்ணம் இருப்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். பல குட்மார்னிங், குட்நைட் போன்ற பயனற்ற செய்திகளுக்கு நடுவே எப்போதாவது அத்தி பூத்தாற்போல சில நல்ல தகவல்கள் இடம் பெறும் அல்லவா? அதை பிறகு பார்க்கலாம் என்றால் ஒரே நாளில் குப்பைகள் வந்து மூடிவிடும். பிறகு தேடியெடுத்து படிப்பது என்பது ஆகாத காரியம். முதல் முறை படிக்கும் போதே ஷேரிங்குக்கு அழுத்துவது போல அழுத்தினால் மேலே ஷேரிங் ஆப்ஷனின் இடது புறம் ஒரு ஸ்டார் தோன்றும். அதை அழுத்தினோம் என்றால் அந்த தகவல் ஸ்டார்ட் மெசேஜ் (starred message) ஸ்டோரில் சேர்ந்து விடும். சேட் விண்டோவின் ஆப்ஷனை(வலது மேல் மூலை மூன்று புள்ளி ஞாபகம் உள்ளதா?)
அழுத்தினால் நான்காவதாக ஸ்டார்ட் மெசேஜ் ஸ்டோர் இருக்கும் அங்கே போனால் அத்தனை ஸ்டார்ட் மெசேஜையும் பார்க்கலாம். நேரம் நாள் தேதி அனுப்பிய நபர் அல்லது குரூப் என்று சகல அடையாளங்களோடும் பார்க்க இயலும்.

இப்போதெல்லாம் வாட்சப் ல் STATUS போடுவது சகஜம் ஆகிவிட்டது. ஓட்டலில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் உணவு பதார்த்தங்களை எல்லாம் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் போட்டார். இந்த மாதிரி உள்ளவர்களின் மொபைல் ஃபோன் புக்கில் எத்தனை நம்பர் உள்ளதோ அத்தனை பேருக்கும்  அவர்களின் அனைத்து அன்றாட நடவடிக்கைகளும் தெரியும். இது எவ்வளவு ஆபத்தானது என்று பலருக்கு தெரிவதில்லை.
இதற்கும் ஒரு தீர்வு உண்டு. வாட்சப் ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று ஆப்ஷனை அழுத்தினால் STATUS PRIVACY என்ற ஒன்று வரும்.  அதில் my contacts என்பது Default   ஆக இருக்கும் . அதாவது உங்கள் போன் புக்கில் உள்ள அனைவரும் பார்க்கலாம். அடுத்ததாக இருப்பது my contacts except . இது போன்புக்கில் உள்ள சிலரை தவிர்த்து என்று பொருள். இங்கே சில நபர்களின் பெயர்களை சேர்த்தால் உங்கள் நிலைத்தகவல் அவர்களுக்கு தெரியாது. அடுத்தது only shar with சிலருக்கு மட்டும் பிரத்தியேகமாக தெரியும் வண்ணம் நமது நிலைத்தகவலை வைக்க இயலும். இங்கே யாருக்கெல்லாம் இது தெரியவேண்டும் என்ற அமைக்க இயலும்.

அடுத்து ஒரு முக்கிய குறிப்பு Settings உள்ளே சென்று  Data and Storage Usage என்கிற பகுதியின் உள்ளே media Auto download  என்ற அமைப்புக்குள் சென்று எல்லாவற்றையும் disable செய்து வைத்துக் கொள்ளுங்கள் (in wifi mode too) இல்லையென்றால் உங்கள் நம்பருக்கு வரும் அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் தானாகவே டவுன்லோட் ஆகி இடத்தை அடைப்பதோடு அல்லாமல் டேட்டாவும் வீணாகிவிடும்.
வாட்சப் குறித்து ஓரளவு அனைத்து புதிய தகவல்கள் பற்றியும் கூறிவிட்டேன் அதனால் அடுத்த பகுதியில் வேறு ஒரு அப்ளிகேஷன் பற்றி பார்ப்போம்.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...