Tuesday, March 23, 2010

HEALTH CARE BILL PASSED IN USA

Health care Bill enables some of the downtrodden population of USA to get health insurance facility within their reach. Some of the tricks of the insurance companies like ‘conditions apply’ are found and appropriately sorted out.
          It is common in India that people won’t insure their health. Whenever health problem arises they go to hospital and fix it. If huge sum of money needed patient’s friends and relatives come forward with helping hand. But in USA it is too costly to afford for poor people to spend on their health. They are very much in need of health insurances to save their very life from health hazards.
          Nowadays some state governments like Tamil Nadu concerns about their people’s health. The government itself pays the health insurance premium for the people so they can pursue life saving costly treatments in famous hospitals. During Emergency the government enables the patients to reach the hospitals as soon as possible at free of cost thanks to 108 Emergency Ambulance.
Here I have small doubt:
                                      Government says govt. hospitals have all the sophisticated machineries and well educated world class doctors at free of cost. Then where is the need for the people to go to private hospitals to save their lives. Is government paving a channel for transferring government’s money to private hospitals and insurance companies?

Friday, March 12, 2010

Is IPL Necessary?

The worst ever format of cricket is IPL T20. It is our national shame that we cannot nurture our national game properly but encourage the laziest game cricket. Why don't we use the surplus revenue of cricket to develop other games. We are having nearly 50 crores of young population but could not fetch as many medals in the Olympics. Even anybody comes with bronze medal we give them a heroes welcome. Cannot we make the Olympic winning players?  It is my opinion that we should use the revenue acquired from cricket to other ill fated games.

Monday, March 8, 2010

”பெண்கள் இடஒதுக்கீடு மசோதா..“ வரட்டுமே பெண்கள் நாடாள!



பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் படைக்க வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!!
 ஆம்! பெண்கள் சட்டங்கள் செய்யப் போகிறார்கள். நான் படித்த கிராமத்து பள்ளியில் பெண்களின் எண்ணிக்கை நான் படித்தபோது இருந்தது மிக மிக சொற்ப எண்ணிக்கை தான். பெண்குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் பள்ளியை விட்டு நிறுத்தி விடும் வழக்கம் பெற்றோரிடம் இருந்த்து. பெண்ணை வளர்த்து வயது வந்தவுடன் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதை மட்டுமே தங்களது கடமையாக பெற்றோர் கருதினர். ஆண்பிள்ளை படிப்பிலே அவ்வளவு சுகமில்லாமல் இருப்பினும் நிலத்தை விற்றாவது படிக்க வைத்தனர். ஆனால் பெண்பிள்ளையோ அளப்பறிய திறமை வாய்ந்தவளாக இருந்தாலும் அவளுக்கு படிப்பு மறுக்கப்பட்டது.
     ஆனால் இப்போது பெண்களின் எண்ணிக்கை பெரும்பாலான கிராமத்து பள்ளிகளில் ஆண்களின் எண்ணிக்கையை விஞ்சி உள்ளது. பெற்றோர் மத்தியிலும் பெண்களை படிக்க வைக்கும் ஆர்வம் பெருகி உள்ளது. நான் பணியாற்றும் பள்ளியில் 2002 ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் ஆண்கள் 70 பேர் பெண்கள் 50 பேர் சென்ற ஆண்டு ஆண்கள் 86 பெண்கள் 86 இவ்வாண்டு ஆண்கள் 94 பெண்கள் 100 பேர்.  இவ்வெண்ணிக்கை உயர முக்கிய காரணம் எங்களது பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் இருப்போர் வெளி ஊர்களில் பெண்பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. தற்போது வீட்டுக்கு அருகாமையில் பள்ளி இருப்பதால் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
     மகளிர் சுயஉதவிக்குழுவை எடுத்துக்கொள்வோமானால் அவர்களின் தலைமைப் பண்பு பொறுப்புணர்வு கடைமையுணர்ச்சி ஆகியவற்றை கண்கூடாக காணமுடிகிறது. வங்கி மேலாளர்கள் அக்குழுக்களுக்கு கடன் வழங்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த ஒரு சான்று போதாதா பெண்கள் பொது வாழ்வில் நன்கு ஒளி வீசுவார்கள் என்பதை அறிய. ஒரு அரசியல் கட்சி பொறுப்பு களை பகிர்ந்தளிக்கையில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. திறமையான பெண்கள் நம்மிடம் இருந்தும் அவர்களுக்கு உரிய இடத்தை நாம் அளிக்க தவறுவதால் அவர்களின் திறமையை அறிய முடிவதில்லை. இம்மசோதாவை பொறுத்தவரை ஆண்களே கொடுக்கும் இடத்தில் இருப்பதே இம்மசோதா ஏன் தேவை என்பதற்கு உரிய பதில் ஆகும். பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தால் இம்மசோதாவிற்கு அவசியமே இல்லாமல் போயிருக்கும்.
     Better Late Than Never”  என்ற கூற்றிற்கு இணங்க இப்போதாவது பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை இயற்றி பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டு காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்குவோமாக.

Friday, March 5, 2010

நித்தியானந்தாக்களை கண்டு அதிர்ந்து அழுகிறீர்களா? வேண்டியதில்லை

அவர் செய்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு என்ன?
ஒரு ஆன்மீக வாதியான நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருப்பது வெட்க கேடு என்பது தானே, சற்றே என் கருத்துக்கு செவி சாயுங்கள்.
ஒரு இந்து மத ஆன்மீக வாதியின் தகுதி அல்லது அடையாளமாக நாம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயங்கள்
  1.   காம உணர்வை குழிதோண்டி ஆழப்புதைத்த சந்நியாசியாக இருக்கவேண்டும் (சாத்தியமில்லாத போதும்)
  2. எதிர்காலம் பற்றி ஆரூடம் சொல்லத்தெரிய வேண்டும்

இரண்டாவதில் தவறினாலும் அது பெரும் குற்றமாகாது. ஆனால் முதலாவது பெரிய குற்றம். ஆனால் உண்மை என்ன?
     எந்த ஒரு உயிரினத்திற்கும் (அமீபா முதல் மனிதன் வரை) உள்ள முக்கிய அத்தியாவசிய நோக்கம் சந்ததி உருவாக்குவதே ஆகும். அதற்குரிய ஒரே வழி எதிர் பால் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதனை இனவிருத்தியில் முடிப்பது. அதன் பொருட்டே மலர்கள் கவர்ச்சிகரமான வண்ணத்தை கொண்டிருக்கின்றன என்கிறது விஞ்ஞானம். அதன் பொருட்டு நாகரிகம் அடைந்த நாம் பல்வேறு உபாயங்களை கையாள்கிறோம் என்பது நாமனைவரும் அறிந்த்தே. ஆக சந்ததி உருவாக்க வேண்டிய கடமை என்ற செய்தியே அனைத்து உயிரினங்களும் தங்களது ஜீன்களில் கோடிக்கணக்காண ஆண்டுகள் சுமந்து திரியும் செய்தியாகும். அதற்குரிய அடிப்படையே காம உணர்வு என்பது. அது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. நாகரிகமடைந்த நாம் சற்று கட்டுப்பாட்டுடன் கையாள்கிறோம். கட்டுப்பாட்டுடன் இருப்பதாக பாவனையாவது செய்கிறோம். உண்மை இவ்வாறு இருக்கையில் ஆன்மீக வாதிக்கு காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும்என்பதை Essential Qualification  ஆக கற்பிதம் செய்தது யார்? அதனால் தான் இவ்வளவு சிக்கல்களும். எனவே இந்து மதம் ஆன்மீக வாதியாக தொழில் செய்து சம்பாதிக்க ஆசைப்படுவோர்க்கு விதிக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான தடையாக இருக்கும் சந்நியாசத்தை சற்றே தளர்த்தினால் நமக்கு நல்ல பல ஆன்மீக வாதிகள் கிடைப்பார்கள். அவர்கள் எதிர்கால பேரிடர்களை முன்னறிவிப்பு செய்து புவியை சுபிட்சமாக்குவார்கள் என நம்பலாம்.

     இரண்டாவதாக நாம் கேட்பது ஒரு ஆன்மீகவாதி ஏன் எதிர்காலம் பற்றி ஆரூடம் கூற வேண்டும்? ஒரு வேளை சாமியார் ஆவதற்கான நுழைவுத்தேர்வு அது தானோ? வாழ்க்கை சுவாரஸ்யமாக செல்கிறது என்றால் அதற்கு காரணம் எதிர்காலம் நமக்கு என்ன தரப்போகிறது என்பது சஸ்பென்ஸாக இருப்பது தான். அதனை தெரிந்து கொள்ள நமக்கு ஏன் அத்தனை ஆர்வம்? எதிர் காலம் என்பது எவராலும் காணவியலாது. ஏனெனில் அது நம் ஒருவர் சம்மந்தப்பட்டது அல்ல மாறாக இயற்கை சூழல் மற்றும் சமூகம் சார்ந்து பல லட்சம் காரணிகளால் உருவாக்கப்படும் ஒரு சிலந்தி வலை அதன் அத்தனை சிக்கல்களையும் கணக்கில் கொண்டு சம்மந்தப்பட்ட நபராலேயே கணிக்க முடியாது. அப்படியிருக்க நம்மை ஒருசில மணித்துளிகள் மட்டுமே பார்க்கும் மூன்றாவது நபர் கணிப்பது சாத்தியம் தானா? பிறகெப்படி ஆன்மீக வியாபாரிகள் பல்கிப் பெருகி மக்களின் உள்ளங்களையும் உடைமைகளையும் கொள்ளையடிக்கின்றனர்?
இதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் உண்டு.
1.       சாமியார்கள் தங்களிடம் வரும் நபர்களின் மனநிலை மற்றும் அவாவுநிலைகளை அவர்களின் பேச்சினூடே கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்தும் சாதகமான வார்த்தைகளை கூறுவார்கள். அந்த நபர்களோ வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெற்றது போல் மகிழ்ந்து சாமியார்களுக்கு நிறைவான காணிக்கைகளை வழங்குவார்கள்.

2.       சில பலவீனமான நபர்கள் பல்வேறு பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்பட்டு எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சாமியாரிடம் தஞ்சம் அடைவார்கள். சாமியார் அவர்களின் இன்னல்களுக்கான காரணங்களை ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு ஆராய்ந்து கண்டறிந்து தக்க காரணங்களைக் கூறி அவர்களை சிறிது நேரம் வியப்பில் ஆழ்த்திவிட்டு தெய்வங்களுக்கு எவ்வாறெல்லாம் லஞ்சம் வழங்கி தப்பிக்கலாம் என்றும் முகவராக செயல் படும் தனக்குறிய கட்டணத்தையும் கூறி உடனடியாக செய்ய வலியுறுத்துவார். பலனாக சாமியாரிடம் சென்ற நபரின் கடன் சுமை சற்று கூடவே செய்யும்.

இவ்வாறாக சாமியார்கள் தங்களது திறமைகளின் மூலம் ஊடகங்களின் வாயிலாக விளம்பரம் தேடி மக்களை தங்களின் வலையில் வீழ்த்துகின்றனர்.

     இக்கட்டுரையை முடிக்கும் முன்பாக நான் முன்வைக்க விரும்பும் ஒரு கேள்வி,

     ஆன்மீகமும் தியானமும் அவசியம் தானா? அதனால் என்ன பயன்?

நமக்கு விருப்பமான நற்செயலை முழு ஈடுபாட்டுடன் செய்தாலே அது தியானம் செய்யும் போது கிடைப்பதாக கூறப்படும் மகிழ்ச்சியை காட்டிலும் நல்ல உண்மையான மகிழ்ச்சியை தரும். (எனது ஆசிரியர் நண்பர் ஒருவர் அவர் மனம் விரும்பிய வகையில் ஒரு Excel sheet உருவாக்கிவிட்டாலே மிக மகிழ்ச்சி கிடைக்கிறது எனக்கூறுவார்)

     எனவே ஊடகங்களால் பெரிது படுத்தப்படும் இம்மாதிரியான நிகழ்வுகளுக்காக உணர்ச்சிவசப்படாமல் உங்கள் அன்றாட வேலைகளில் முழுகவனத்துடன் மூழ்குங்கள். இந்நிகழ்வுகளுக்காக உணர்ச்சிவசப்பட்டு பேசுவது ஊடகக் காரர்களை உற்சாக படுத்தி அவர்கள் நீலப்பட இயக்குனர்களாக மாறும் அவலநிலை ஏற்படும்.

Monday, March 1, 2010

Arun

My son and my mom's photos

񬠜வருமான வரி குறித்த சில விளக்கங்கள்

அரசு ஊழியர்களான நமக்கு அரசு 100 ரூபாய் கொடுத்தால் அது 90 ரூபாய் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 10 அல்லது 20 ரூபாய் வருமான வரியாக போய் விடும். அந்த 10 ரூபாய் பிடித்தம் பல ஊழியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி விடுகிறது. விளைவு, அரசையும் நிதிக் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கோபத்தை போக்கிக் கொள்வார்கள். மேலும் யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று பட்டியல் போடுவார்கள். எது எப்படி இருந்தாலும் வரி செலுத்த வேண்டியது நமது கட்டாய கடைமையாகிறது. “கடைமைகளை சரிவர செய்தால் தான் உரிமைகளை உரிமையுடன் கேட்பதில் சற்றேனும் நியாயம் இருக்கும்“ என்பது எனது கருத்து.
சரி வருமான வரி குறித்து நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத தகவல்கள் நிறைய இருக்கும். இங்கு எனக்கு தெரிந்த வரையில் வருமானம்,விலக்கு பெறும் வருமானம், கழிவு, சலுகைகள், வரி போன்றவற்றை விளக்க முற்பட்டுள்ளேன்.
வருமானம்
1. சம்பளம்
2. நிலுவைத் தொகைகள்
3. இதர சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம்
விலக்கு பெறும் வருமானம்
1. ஓய்வு பெறும் போது கிடைக்கும் சரண் விடுப்பு
2. பயணப் படிகள். (விடுமுறை சுற்றுலாவிற்கு வழங்கப்படும் தொகையும் அடங்கும்)
3. ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணிக்கொடை.(gratuity)
4. கம்யுடேஷன்
5. பணிக்குறைப்பின் போது வேலை இழப்பவர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுத்தொகை
6. VRS ன்போது கிடைக்கும் தொகையில் 5 இலட்சம் வரை விலக்கு உண்டு
7. காப்பீட்டு கழகத்தால் வழங்கப்படும் முதிர்வு மற்றும் போனஸ் போன்ற வருமானங்கள்
8. வைப்பு நிதி மூலம் கிடைக்கும் பணம்
9. கல்வி உதவித் தொகை
10. மருத்துவ செலவு ஈட்டுத்தொகை(Re imbursement)
கழிவுகள்
செக்ஷ்ன் 16
1. கேளிக்கைப் படி
2. தொழில் வரி
VI A
1. காப்பீட்டு பிரிமிய தொகை
2. வைப்பு நிதி
3. வருமான வரித் துறையால் பட்டியலிடப் பட்டுள்ள பங்கு சந்தை இணைந்த பாலிசிகள் மற்றும் மியுச்சுவல் நிதி முதலீடுகள்
4. ஓய்வு ஊதிய திட்ட முதலீடுகள்
5. வீட்டுக் கடன் தவணைகள் ( வீடு பதிவின்போது செலவிட்ட முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தையும் கழித்துக்கொள்ளலாம்)
6. டியுஷன் கட்டணம் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்
(இக்கட்டணம் சேரும் போதோ அல்லது பிறகோ கட்டப்பட்டிருக்க வேண்டும்
இது முழு நேர படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்
இது விளையாட்டு பள்ளி,நர்சரி மற்றும் முன் நர்சரி பள்ளி முதல் பல்கலைகழக கல்வி வரை பொருந்தும்
படிப்புக் கட்டணம் என்பது நன்கொடை மற்றும் டெவலப்மண்ட் கட்டணம் நீங்கலாக அனைத்துக் கட்டணங்களும் ஆகும்)
சலுகைகள்
80CCD
பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்திற்கு வழங்கப்படும் தவணைத் தொகை.
(இது அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீத தொகை மட்டுமே இருக்க வேண்டும்)
80D
விண்ணப்பதாரர் மற்றும் அவரைசார்ந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ காப்பீட்டு பிரீமிய தொகை ரூ15000 க்கு மிகாமல் கழித்துக் கொள்ளலாம்
80DD
விண்ணப்பதாரரை சார்ந்து இருக்கும் ஊனமுற்ற குடும்ப உறுப்பினரின் பராமரிப்பு, மருத்துவ மற்றும் அவர் ஊனம் சார்ந்த அனைத்து நியாயமான செலவுகள் அனைத்தும் ரூ50000க்கு மிகாமல் கழித்துக் கொள்ளலாம்.
கடுமையான ஊனம் இருக்கும் பட்சத்தில் ரூ100000 வரை கழித்துக்கொள்ளலாம்.
80E
விண்ணப்பதாரின் குழந்தைகளின் உயர் கல்விக் கடனுக்கான வட்டியை கழித்துக் கொள்ளலாம்.
80G
அரசு நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் கழித்துக்கொள்ளலாம்
80U

ஊனமுற்ற விண்ணப்பதாரர்கள் ரூபாய் 50000 கழித்துக்கொள்ளலாம்
கடும் ஊனம் எனில் ரூபாய் 1 இலட்சம் கழித்துக்கொள்ளலாம்
(ஊனமுற்றோருக்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.)
இவ்வாறாக அரசு நமக்கு வழங்கி இருக்கும் சலுகைகளையும் மற்ற ஏழை மக்களுக்கு வழங்கும் சலுகைகளையும் ஒப்பு நோக்கினோமானால் அரசு வசூலிக்கும் வருமான வரியின் நியாயம் புரியும்.
நீங்கள் வருமான வரியில் ரூபாய் 1000 மிச்சப்படுத்த வேண்டுமானால் ரூபாய் 10000 ஐ 5 ஆண்டுகளுக்கு மீளப் பெற இயலாத அரசு சேமிப்பில் தான் செலுத்தியாக வேண்டும். அதன் முதிர்வு தொகையையும் முதிர்வுகாலத்தில் அத்தொகையின் மதிப்பையும் எண்ணிப்பார்ப்போமானால் அவ்வாறு முதலீடு செய்வது எவ்வளவு சிறுபிள்ளை தனமானது என்பது புரியும்.(Lot of govt employees do such tricks. Govt. asks only Rs10 but we are ready to pay Rs.100.)
எனவே அனைவரும் வருமான வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு நமது கடமையை ஆற்றுவோமாக.

புதிய ஓய்வு ஊதியத் திட்டம் பற்றி அறிவோமா?(Central govt.)

01.01.2004 க்குப் பிறகு வேலைக்கு சேர்ந்த அனைத்து பணியாளர்களும் இத்திட்டத்தில் கட்டாயம் சேர வேண்டும்
இத்திட்டத்தில் ஊழியரின் பங்களிப்பு அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீத தொகையாகும்
திட்டம் 1
இதில் முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை திரும்ப பெற வழியில்லை
60 வயதில் ஓய்வின்போது திட்டத்தின் மூலம் சேரந்த தொகை வழங்கப்படும். அதில் 40 சதவீத தொகையினை அரசு அறிவுறுத்தும் ஓய்வு ஊதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீத தொகையினை விருப்பம் போல் செலவு செய்யலாம்
60 வயதுக்கு முன்னதாக திட்டத்தில் இருந்து விலகினால் முதிர்வு தொகையில் 80 சதவீத தொகையினை பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்
திட்டம் 2
இத்திட்டத்தில் அரசின் பங்களிப்பு எதுவும் கிடையாது
இதில் எப்போது வேண்டுமானாலும் பகுதி தொகையோ மொத்த தொகையோ மீளப்பெறலாம்
இத்திட்டத்திற்கு எந்த வரி சிறப்பு சலுகையும் வழங்கப்படாது

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...