Friday, March 5, 2010

நித்தியானந்தாக்களை கண்டு அதிர்ந்து அழுகிறீர்களா? வேண்டியதில்லை

அவர் செய்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு என்ன?
ஒரு ஆன்மீக வாதியான நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருப்பது வெட்க கேடு என்பது தானே, சற்றே என் கருத்துக்கு செவி சாயுங்கள்.
ஒரு இந்து மத ஆன்மீக வாதியின் தகுதி அல்லது அடையாளமாக நாம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயங்கள்
  1.   காம உணர்வை குழிதோண்டி ஆழப்புதைத்த சந்நியாசியாக இருக்கவேண்டும் (சாத்தியமில்லாத போதும்)
  2. எதிர்காலம் பற்றி ஆரூடம் சொல்லத்தெரிய வேண்டும்

இரண்டாவதில் தவறினாலும் அது பெரும் குற்றமாகாது. ஆனால் முதலாவது பெரிய குற்றம். ஆனால் உண்மை என்ன?
     எந்த ஒரு உயிரினத்திற்கும் (அமீபா முதல் மனிதன் வரை) உள்ள முக்கிய அத்தியாவசிய நோக்கம் சந்ததி உருவாக்குவதே ஆகும். அதற்குரிய ஒரே வழி எதிர் பால் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதனை இனவிருத்தியில் முடிப்பது. அதன் பொருட்டே மலர்கள் கவர்ச்சிகரமான வண்ணத்தை கொண்டிருக்கின்றன என்கிறது விஞ்ஞானம். அதன் பொருட்டு நாகரிகம் அடைந்த நாம் பல்வேறு உபாயங்களை கையாள்கிறோம் என்பது நாமனைவரும் அறிந்த்தே. ஆக சந்ததி உருவாக்க வேண்டிய கடமை என்ற செய்தியே அனைத்து உயிரினங்களும் தங்களது ஜீன்களில் கோடிக்கணக்காண ஆண்டுகள் சுமந்து திரியும் செய்தியாகும். அதற்குரிய அடிப்படையே காம உணர்வு என்பது. அது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. நாகரிகமடைந்த நாம் சற்று கட்டுப்பாட்டுடன் கையாள்கிறோம். கட்டுப்பாட்டுடன் இருப்பதாக பாவனையாவது செய்கிறோம். உண்மை இவ்வாறு இருக்கையில் ஆன்மீக வாதிக்கு காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும்என்பதை Essential Qualification  ஆக கற்பிதம் செய்தது யார்? அதனால் தான் இவ்வளவு சிக்கல்களும். எனவே இந்து மதம் ஆன்மீக வாதியாக தொழில் செய்து சம்பாதிக்க ஆசைப்படுவோர்க்கு விதிக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான தடையாக இருக்கும் சந்நியாசத்தை சற்றே தளர்த்தினால் நமக்கு நல்ல பல ஆன்மீக வாதிகள் கிடைப்பார்கள். அவர்கள் எதிர்கால பேரிடர்களை முன்னறிவிப்பு செய்து புவியை சுபிட்சமாக்குவார்கள் என நம்பலாம்.

     இரண்டாவதாக நாம் கேட்பது ஒரு ஆன்மீகவாதி ஏன் எதிர்காலம் பற்றி ஆரூடம் கூற வேண்டும்? ஒரு வேளை சாமியார் ஆவதற்கான நுழைவுத்தேர்வு அது தானோ? வாழ்க்கை சுவாரஸ்யமாக செல்கிறது என்றால் அதற்கு காரணம் எதிர்காலம் நமக்கு என்ன தரப்போகிறது என்பது சஸ்பென்ஸாக இருப்பது தான். அதனை தெரிந்து கொள்ள நமக்கு ஏன் அத்தனை ஆர்வம்? எதிர் காலம் என்பது எவராலும் காணவியலாது. ஏனெனில் அது நம் ஒருவர் சம்மந்தப்பட்டது அல்ல மாறாக இயற்கை சூழல் மற்றும் சமூகம் சார்ந்து பல லட்சம் காரணிகளால் உருவாக்கப்படும் ஒரு சிலந்தி வலை அதன் அத்தனை சிக்கல்களையும் கணக்கில் கொண்டு சம்மந்தப்பட்ட நபராலேயே கணிக்க முடியாது. அப்படியிருக்க நம்மை ஒருசில மணித்துளிகள் மட்டுமே பார்க்கும் மூன்றாவது நபர் கணிப்பது சாத்தியம் தானா? பிறகெப்படி ஆன்மீக வியாபாரிகள் பல்கிப் பெருகி மக்களின் உள்ளங்களையும் உடைமைகளையும் கொள்ளையடிக்கின்றனர்?
இதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் உண்டு.
1.       சாமியார்கள் தங்களிடம் வரும் நபர்களின் மனநிலை மற்றும் அவாவுநிலைகளை அவர்களின் பேச்சினூடே கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்தும் சாதகமான வார்த்தைகளை கூறுவார்கள். அந்த நபர்களோ வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெற்றது போல் மகிழ்ந்து சாமியார்களுக்கு நிறைவான காணிக்கைகளை வழங்குவார்கள்.

2.       சில பலவீனமான நபர்கள் பல்வேறு பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்பட்டு எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சாமியாரிடம் தஞ்சம் அடைவார்கள். சாமியார் அவர்களின் இன்னல்களுக்கான காரணங்களை ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு ஆராய்ந்து கண்டறிந்து தக்க காரணங்களைக் கூறி அவர்களை சிறிது நேரம் வியப்பில் ஆழ்த்திவிட்டு தெய்வங்களுக்கு எவ்வாறெல்லாம் லஞ்சம் வழங்கி தப்பிக்கலாம் என்றும் முகவராக செயல் படும் தனக்குறிய கட்டணத்தையும் கூறி உடனடியாக செய்ய வலியுறுத்துவார். பலனாக சாமியாரிடம் சென்ற நபரின் கடன் சுமை சற்று கூடவே செய்யும்.

இவ்வாறாக சாமியார்கள் தங்களது திறமைகளின் மூலம் ஊடகங்களின் வாயிலாக விளம்பரம் தேடி மக்களை தங்களின் வலையில் வீழ்த்துகின்றனர்.

     இக்கட்டுரையை முடிக்கும் முன்பாக நான் முன்வைக்க விரும்பும் ஒரு கேள்வி,

     ஆன்மீகமும் தியானமும் அவசியம் தானா? அதனால் என்ன பயன்?

நமக்கு விருப்பமான நற்செயலை முழு ஈடுபாட்டுடன் செய்தாலே அது தியானம் செய்யும் போது கிடைப்பதாக கூறப்படும் மகிழ்ச்சியை காட்டிலும் நல்ல உண்மையான மகிழ்ச்சியை தரும். (எனது ஆசிரியர் நண்பர் ஒருவர் அவர் மனம் விரும்பிய வகையில் ஒரு Excel sheet உருவாக்கிவிட்டாலே மிக மகிழ்ச்சி கிடைக்கிறது எனக்கூறுவார்)

     எனவே ஊடகங்களால் பெரிது படுத்தப்படும் இம்மாதிரியான நிகழ்வுகளுக்காக உணர்ச்சிவசப்படாமல் உங்கள் அன்றாட வேலைகளில் முழுகவனத்துடன் மூழ்குங்கள். இந்நிகழ்வுகளுக்காக உணர்ச்சிவசப்பட்டு பேசுவது ஊடகக் காரர்களை உற்சாக படுத்தி அவர்கள் நீலப்பட இயக்குனர்களாக மாறும் அவலநிலை ஏற்படும்.

3 comments:

  1. சூப்பர் சார்

    அழகாக கூறியுள்ளீர்கள்

    ReplyDelete
  2. சூப்பர் சார்

    அழகாக கூறியுள்ளீர்கள்

    ReplyDelete
  3. சூப்பர் சார்

    அழகாக கூறியுள்ளீர்கள்

    ReplyDelete

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...