அரசு ஊழியர்களான நமக்கு அரசு 100 ரூபாய் கொடுத்தால் அது 90 ரூபாய் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 10 அல்லது 20 ரூபாய் வருமான வரியாக போய் விடும். அந்த 10 ரூபாய் பிடித்தம் பல ஊழியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி விடுகிறது. விளைவு, அரசையும் நிதிக் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கோபத்தை போக்கிக் கொள்வார்கள். மேலும் யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று பட்டியல் போடுவார்கள். எது எப்படி இருந்தாலும் வரி செலுத்த வேண்டியது நமது கட்டாய கடைமையாகிறது. “கடைமைகளை சரிவர செய்தால் தான் உரிமைகளை உரிமையுடன் கேட்பதில் சற்றேனும் நியாயம் இருக்கும்“ என்பது எனது கருத்து.
சரி வருமான வரி குறித்து நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத தகவல்கள் நிறைய இருக்கும். இங்கு எனக்கு தெரிந்த வரையில் வருமானம்,விலக்கு பெறும் வருமானம், கழிவு, சலுகைகள், வரி போன்றவற்றை விளக்க முற்பட்டுள்ளேன்.
வருமானம்
1. சம்பளம்
2. நிலுவைத் தொகைகள்
3. இதர சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம்
விலக்கு பெறும் வருமானம்
1. ஓய்வு பெறும் போது கிடைக்கும் சரண் விடுப்பு
2. பயணப் படிகள். (விடுமுறை சுற்றுலாவிற்கு வழங்கப்படும் தொகையும் அடங்கும்)
3. ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணிக்கொடை.(gratuity)
4. கம்யுடேஷன்
5. பணிக்குறைப்பின் போது வேலை இழப்பவர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுத்தொகை
6. VRS ன்போது கிடைக்கும் தொகையில் 5 இலட்சம் வரை விலக்கு உண்டு
7. காப்பீட்டு கழகத்தால் வழங்கப்படும் முதிர்வு மற்றும் போனஸ் போன்ற வருமானங்கள்
8. வைப்பு நிதி மூலம் கிடைக்கும் பணம்
9. கல்வி உதவித் தொகை
10. மருத்துவ செலவு ஈட்டுத்தொகை(Re imbursement)
கழிவுகள்
செக்ஷ்ன் 16
1. கேளிக்கைப் படி
2. தொழில் வரி
VI A
1. காப்பீட்டு பிரிமிய தொகை
2. வைப்பு நிதி
3. வருமான வரித் துறையால் பட்டியலிடப் பட்டுள்ள பங்கு சந்தை இணைந்த பாலிசிகள் மற்றும் மியுச்சுவல் நிதி முதலீடுகள்
4. ஓய்வு ஊதிய திட்ட முதலீடுகள்
5. வீட்டுக் கடன் தவணைகள் ( வீடு பதிவின்போது செலவிட்ட முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தையும் கழித்துக்கொள்ளலாம்)
6. டியுஷன் கட்டணம் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்
(இக்கட்டணம் சேரும் போதோ அல்லது பிறகோ கட்டப்பட்டிருக்க வேண்டும்
இது முழு நேர படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்
இது விளையாட்டு பள்ளி,நர்சரி மற்றும் முன் நர்சரி பள்ளி முதல் பல்கலைகழக கல்வி வரை பொருந்தும்
படிப்புக் கட்டணம் என்பது நன்கொடை மற்றும் டெவலப்மண்ட் கட்டணம் நீங்கலாக அனைத்துக் கட்டணங்களும் ஆகும்)
சலுகைகள்
80CCD
பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்திற்கு வழங்கப்படும் தவணைத் தொகை.
(இது அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீத தொகை மட்டுமே இருக்க வேண்டும்)
80D
விண்ணப்பதாரர் மற்றும் அவரைசார்ந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ காப்பீட்டு பிரீமிய தொகை ரூ15000 க்கு மிகாமல் கழித்துக் கொள்ளலாம்
80DD
விண்ணப்பதாரரை சார்ந்து இருக்கும் ஊனமுற்ற குடும்ப உறுப்பினரின் பராமரிப்பு, மருத்துவ மற்றும் அவர் ஊனம் சார்ந்த அனைத்து நியாயமான செலவுகள் அனைத்தும் ரூ50000க்கு மிகாமல் கழித்துக் கொள்ளலாம்.
கடுமையான ஊனம் இருக்கும் பட்சத்தில் ரூ100000 வரை கழித்துக்கொள்ளலாம்.
80E
விண்ணப்பதாரின் குழந்தைகளின் உயர் கல்விக் கடனுக்கான வட்டியை கழித்துக் கொள்ளலாம்.
80G
அரசு நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் கழித்துக்கொள்ளலாம்
80U
ஊனமுற்ற விண்ணப்பதாரர்கள் ரூபாய் 50000 கழித்துக்கொள்ளலாம்
கடும் ஊனம் எனில் ரூபாய் 1 இலட்சம் கழித்துக்கொள்ளலாம்
(ஊனமுற்றோருக்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.)
இவ்வாறாக அரசு நமக்கு வழங்கி இருக்கும் சலுகைகளையும் மற்ற ஏழை மக்களுக்கு வழங்கும் சலுகைகளையும் ஒப்பு நோக்கினோமானால் அரசு வசூலிக்கும் வருமான வரியின் நியாயம் புரியும்.
நீங்கள் வருமான வரியில் ரூபாய் 1000 மிச்சப்படுத்த வேண்டுமானால் ரூபாய் 10000 ஐ 5 ஆண்டுகளுக்கு மீளப் பெற இயலாத அரசு சேமிப்பில் தான் செலுத்தியாக வேண்டும். அதன் முதிர்வு தொகையையும் முதிர்வுகாலத்தில் அத்தொகையின் மதிப்பையும் எண்ணிப்பார்ப்போமானால் அவ்வாறு முதலீடு செய்வது எவ்வளவு சிறுபிள்ளை தனமானது என்பது புரியும்.(Lot of govt employees do such tricks. Govt. asks only Rs10 but we are ready to pay Rs.100.)
எனவே அனைவரும் வருமான வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு நமது கடமையை ஆற்றுவோமாக.
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment