Monday, August 30, 2010

ஒரு தந்தையின் இழி செயல் - மகனது முன்னிலையில்

நேற்று பேருந்தில் ஒருவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் அனைவரும் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அப்போது ஒரு 9 வயது உள்ள பையன் கதறி அழுது கொண்டிருந்தான். பார்த்தால் அவன் அந்த நபரின் மகன். அப்பாவை அனைவரும் அடித்து விடுவார்களோ என பயந்து அழுது கொண்டிருந்தான். பிரச்சினை என்னவென்று அவனுக்கு புரியவில்லை. உடனடியாக அனைவரும் அவனை ஒன்று மில்லை அப்பா என தேற்ற ஆரம்பித்து விட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உட்பட. அந்த மனிதாபி மானத்தால் அந்த நபர் தப்பித்தார். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Friday, August 27, 2010

அடடே! -1


ஒரு செயின் பிராக்கெட் ஸ்டூல் ஆக முடியுமா? ஆகியிருக்கிறதே.  மேலே உள்ள படத்தை உற்று பாருங்கள். ஆம் நான் வழக்கமாக செல்லும் மெக்கானிக்கல் செட்டில் இருக்கும் துரை என்பவரின் எண்ணத்தில் உதித்த ஐடியா தான் இது. மூன்று இரும்பு ராட் மற்றும் செயின் பிராக்கெட் வட்டம் இவற்றை வெல்ட் செய்ததன் மூலம் வந்தது தான் இந்த ஸ்டூல். செயின் பிராக்கெட்டில் உள்ள பல் சக்கரத்தை கூட செயின் வைத்து பாதுகாப்பாக மூடியிருக்கிறார். பார்த்த உடனே எனக்கு தோன்றியது “அடடே!“
அடடேக்கள் தொடரும்....

Thursday, August 26, 2010

பால் எவ்வாறு பொங்குகிறது?

பாலில் கொழுப்பு மற்றும் நீர் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். பால் சூடேற்றப்படும் போது கொழுப்பு படலமாக பாலின் மேல் பகுதியில் படர்ந்து விடுகிறது. மேலும் சூடேற்றப்படும் போது பாலில் உள்ள நீர் ஆவியாகிறது. ஆவி மேல் நோக்கி இடம் பெயர முயலுகிறது. ஆனால் கொழுப்பு படலம் ஆவியை உள்ளேயே இருக்கச் செய்கிறது. மேலும் மேலும் பால் சூடேற்றப் படும் போது நீராவி முழு வேகத்துடன் கொழுப்பு படலத்தை மேலே தூக்கிய படி மேல் நோக்கி வருகிறது. எனவே பால் பொங்கி வழிகிறது

Wednesday, August 25, 2010

இடி மற்றும் மின்னல் இவை ஏற்படக்காரணம் அர்ச்சுனனின் தேர்ச்சக்கரம் எழுப்பும் சத்தமா?


கண்டிப்பாக இல்லை. பழங்காலத்தில் அறிவியல் பற்றி விழிப்புணர்வு இல்லாத மக்கள் ஏற்படுத்திய புனை கதை தான் இது.
     மின்னல் என்பது மேக கூட்டத்தின் மேல் அடுக்கில் உள்ள குளிர்ந்த ஆலங்கட்டித் துகல்கள் அதற்கு கீழே உள்ள சிறு நீர்த்திவளைகள் மீது உராய்வதால் ஏற்படுகிறது. எதிர் மின்னூட்டம் பெற்ற இந்த மின் சக்தியானது புவியில் எர்த் செய்யப்பட வேண்டும்.
     எனவே மின்னலானது காற்று மண்டலத்தின் வழியாக புவியை நோக்கி அதி வேகத்தில் பாய்கிறது. அப்போது அது சூரியனை விட ஐந்து மடங்கு அதிகமான வெப்ப ஆற்றலை பெற்றிருக்கும்.
     காற்று மின்சாரத்தை கடத்தாது. ஆனால் அதி வெப்ப மின்னல்கள் காற்றை அயனியாக்கி தனக்குத் தானே பாதை ஏற்படுத்திக் கொள்ளும்.
(காற்று நடுநிலை மின்சக்தியை பெற்றிருக்கும். அதன் அணுக்களில் இருந்து ஒரு எலக்ட்ரானை எடுத்து விட்டால் நேர்மின் சக்தியையும் ஒரு எலக்ட்ரானை வழங்கினால் எதிர் மின் சக்தியையும் பெற்று விடும். இவ்வாறு மின்சக்தி பெற்று இருக்கும் காற்றில் உள்ள அணுக்கள் அயனிகளாகும். எனவே அது மின்சாரத்தை கடத்தும் திறனை பெறுகிறது.)
     அதி வெப்ப மின்னல்கள் காற்றில் படும் போது காற்று வெப்பத்தால் விரிவடைந்து அருகில் உள்ள காற்றில் அழுத்தப்படுகிறது. இதனால் ஏற்படுத்தப் படும் சப்தமே இடி ஓசையாகும்.
     இவ்வாறு மின்னல் கீழ்நோக்கி வரும் போது தனது பயணத்தை இலகு வாக்க மின் கடத்தும் பொருள்கள் கிடைத்தால் அதன் மீது ஊடுருவி எர்த் ஆகிவிடும். மிக அதிக மின்னழுத்தம் உள்ள மின்னலால் தாக்கப் படுவதால் மின்னல் தாக்கும் போது பெருத்த சேதம் ஏற்படுகிறது. இதனையே இடி விழுந்து விட்டது என்கிறோம். மின்னலின் பாதையின் குறுக்காக நாம் இருந்து விட்டால் அந்த அர்ச்சுனன் நினைத்தால் கூட நம்மை காப்பாற்ற இயலாது.

Tuesday, August 24, 2010

Celebrate the anniversaries in style



Today is the date of joining in the job for our colleague Mr. S.Sundaravarathan. Yesterday everyone was teasing him to give treat in grand manner.  He agreed to give a treat. But later we came to know that every year he celebrates the anniversary by giving new uniform sets to two very poor students. We were dumbfounded.
          “A burning Candle can light another one nor grow less” – J.R.Lowell
As per the above words few of our staff decided to follow his style.

Saturday, August 21, 2010

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.
E=mc2 என்ற சமன்பாட்டை கண்டறிந்ததன் மூலம் அணுக்கருவினுள் பொதிந்து இருக்கும் அளவற்ற ஆற்றலை வெளிக்காட்டினார்.
அவரது சார்பியல் தத்துவம் உலகையே வியக்க வைத்தது.
ஒளியிலிருந்து மின்சக்தியை பெற இயலும் என்பதற்கு அடிப்படையான ஒளிமின் விளைவைக் கண்டறிந்து அதற்காக நோபல் பரிசினை வென்றார்.

Thursday, August 19, 2010

நான்காவது பரிமாணம் (Fourth Dimension


நீளம், அகலம், மற்றும் உயரம் உள்ளிட்டவையே முப்பரிமாணங்கள் ஆகும்.
இவற்றுடன் நான்காவது பரிமாணமாக காலத்தை சேர்த்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.
காலமானது பெருவெடிப்பில்(Big Bang)   துவங்கி அதாவது இப்பேரண்டத்தின் துவக்கத்தில் துவங்கி கருந்துளை(Black Hole) எனப்படும் சூரியகுடும்ப முடிவில் முடியும் என்ற கருத்தினை ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கூறியுள்ளார்

எனது மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Monday, August 16, 2010

சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 2010


இன்று எங்கள் பள்ளியில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வழக்கமாக விழா கொண்டாடப்படும் மைதானம் மழையால் சேதமடைந்ததால் விழாவானது ஓட்டுக் கட்டிட முற்றத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கங்கைகொண்டசோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை வங்கி மேலாளர் அவர்கள் வழங்கினார். மாணவர்களின் வழக்கமான எதிர்பார்ப்பிற்கிணங்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்று விழாவிற்கு அணி சேர்க்கும் வண்ணம் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சண்முகம் அவர்கள் சென்ற ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியர்கள் இ.சிலம்பரசி (ஓ 475ஃ500) மற்றும் ப.அகிலா (ஓஐஐ 1034ஃ1200) வுக்கு பரிசு வழங்கினார். விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Wednesday, August 11, 2010

நீர் இடி எனப்படும் cloud burst என்பது பற்றி அறிவோமா?




நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில்  ஆலங்கட்டி மழை என்கின்றனர். அந்த நேரத்தில் இடி, மின்னல் அதிகமாக இருக்கும். சூறை காற்று வீசும். சிறு சிறு கற்கள் அளவுக்கு தண்ணீர் உறைந்து  பனிக்கட்டிகளாக தரையில் விழும். இப்படி கிளவுட் பர்ஸ்ட் ஏற்பட்டால், நீண்ட நேரம் மழை நீடிக்காது. சில நிமிடங்களே கொட்டி தீர்த்துவிடும். ஆனால்,  வெள்ளம் ஏற்படும் அளவுக்கு பாதிப்பு பெரிதாக இருக்கும்.

இந்தியாவை பொறுத்த வரை வங்கக் கடல் அல்லது அரபிக் கடல் பகுதியில் மையம் கொண்டு மேற்கு நோக்கி நகரும் மழை மேகங்களால் கிளவுட் பர்ஸ்ட்  ஏற்படுகின்றன. இந்த மழை மேகங்கள் இமய மலையை கடந்து செல்லும் போது வெடித்து சிதறி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன.
காஷ்மீர் லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 2 மணி நேரம் கிளவுட் பர்ஸ்ட் ஏற்பட்டதால்தான், மழை கொட்டி தீர்த்தது. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள்  15 கிலோ மீட்டர் உயரத்தில் நிகழும்.

 கிளவுட் பர்ஸ்ட் ஏற்படும் போது ஒரு மணி நேரத்துக்குள் 100 மி.மீட்டருக்கு மேல்கூட (3.94 அங்குலம்) மழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மைய  அதிகாரிகள் கூறுகின்றனர். காஷ்மீர் லே பகுதியில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 48.26 மி.மீ. (1.9 அங்குலம்) மழை பதிவாகி உள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2005 ஜூலை 26ம் தேதி மும்பையில் கிளவுட் பர்ஸ்ட் இயற்கை சீற்றம் நிகழ்ந்தது. அப்போது 8 முதல் 10 மணி  நேரத்துக்குள் 950 மி.மீ. மழை பதிவானது. இதனால் வெள்ளத்தில் மும்பை தத்தளித்தது. அதன்பிறகு இப்போதுதான் காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது

Check out Tamil News | Leading Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines

Check out Tamil News | Leading Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...