Wednesday, August 25, 2010

இடி மற்றும் மின்னல் இவை ஏற்படக்காரணம் அர்ச்சுனனின் தேர்ச்சக்கரம் எழுப்பும் சத்தமா?


கண்டிப்பாக இல்லை. பழங்காலத்தில் அறிவியல் பற்றி விழிப்புணர்வு இல்லாத மக்கள் ஏற்படுத்திய புனை கதை தான் இது.
     மின்னல் என்பது மேக கூட்டத்தின் மேல் அடுக்கில் உள்ள குளிர்ந்த ஆலங்கட்டித் துகல்கள் அதற்கு கீழே உள்ள சிறு நீர்த்திவளைகள் மீது உராய்வதால் ஏற்படுகிறது. எதிர் மின்னூட்டம் பெற்ற இந்த மின் சக்தியானது புவியில் எர்த் செய்யப்பட வேண்டும்.
     எனவே மின்னலானது காற்று மண்டலத்தின் வழியாக புவியை நோக்கி அதி வேகத்தில் பாய்கிறது. அப்போது அது சூரியனை விட ஐந்து மடங்கு அதிகமான வெப்ப ஆற்றலை பெற்றிருக்கும்.
     காற்று மின்சாரத்தை கடத்தாது. ஆனால் அதி வெப்ப மின்னல்கள் காற்றை அயனியாக்கி தனக்குத் தானே பாதை ஏற்படுத்திக் கொள்ளும்.
(காற்று நடுநிலை மின்சக்தியை பெற்றிருக்கும். அதன் அணுக்களில் இருந்து ஒரு எலக்ட்ரானை எடுத்து விட்டால் நேர்மின் சக்தியையும் ஒரு எலக்ட்ரானை வழங்கினால் எதிர் மின் சக்தியையும் பெற்று விடும். இவ்வாறு மின்சக்தி பெற்று இருக்கும் காற்றில் உள்ள அணுக்கள் அயனிகளாகும். எனவே அது மின்சாரத்தை கடத்தும் திறனை பெறுகிறது.)
     அதி வெப்ப மின்னல்கள் காற்றில் படும் போது காற்று வெப்பத்தால் விரிவடைந்து அருகில் உள்ள காற்றில் அழுத்தப்படுகிறது. இதனால் ஏற்படுத்தப் படும் சப்தமே இடி ஓசையாகும்.
     இவ்வாறு மின்னல் கீழ்நோக்கி வரும் போது தனது பயணத்தை இலகு வாக்க மின் கடத்தும் பொருள்கள் கிடைத்தால் அதன் மீது ஊடுருவி எர்த் ஆகிவிடும். மிக அதிக மின்னழுத்தம் உள்ள மின்னலால் தாக்கப் படுவதால் மின்னல் தாக்கும் போது பெருத்த சேதம் ஏற்படுகிறது. இதனையே இடி விழுந்து விட்டது என்கிறோம். மின்னலின் பாதையின் குறுக்காக நாம் இருந்து விட்டால் அந்த அர்ச்சுனன் நினைத்தால் கூட நம்மை காப்பாற்ற இயலாது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...