நானே “நானோ“-3
- பெரும்பாய்ச்சல்
ராபர்ட் ஃபெயின்மான்
அவர்களின் பேச்சும் அதில் அவர் கற்பனை செய்திருந்த சாத்தியங்கள் பற்றி சென்ற அத்தியாயத்தில்
பார்த்தோம். அதன் பிறகு அந்த துறையில் பெரும் பாய்ச்சல் எதுவும் நிகழ வில்லை என்பது
தான் உண்மை.
ஒரு படத்தில் “மலையை
தூக்கப் போறேன் மலையைத் தூக்கப் போறேன்” என்று ஊரெல்லாம் சொல்லி கூட்டம் சேர்த்து விட்டு,
“யாராவது வந்து தூக்கி வைங்கப்பு” என்று ஒரு காமெடி வரும் இல்லையா?
அது போலத் தான்
நானோ டெக்னாலஜி சார்ந்த சாத்தியங்களை பட்டியலிட்டு இருந்தார் ஃபெயின்மான். ஆனால் அந்த
சமயத்தில் அதை செய்யவோ அந்த அளவில் அணுகி பார்க்கவோ தக்க சாதனங்கள் இல்லாமல் இருந்தது.
அவருக்குப் பின்
எரிக் ட்ரெக்ஸ்லர் என்பார் நிறைய ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்
”ஹீரோ ரெடி, ஹீரோயின்
ரெடி ஆனா இந்த கத, இந்த கத தான் கிடைக்க மாட்டேங்குது” என்று அங்கலாய்க்கும் நாகேஷ்
போல நானோ டெக்னாலஜியில் கருத்தியலாக என்ன வேணும்னாலும் சிந்திக்கலாம். எந்த லெவலுக்கும்
எறங்கி அலசறதுக்கு தேவையான மெக்கானிசம் இருக்கா? எப்படி நானோ மெஷின்ஸ உருவாக்கறது?
ஒரு ஊசியிலயே நூல கோக்க போராட வேண்டியிருக்கு ஆனா நானோ சைஸ்ல எப்படி கருவிகள உருவாக்குறது?
அதுக்கு என்ன திட்டம் வச்சிருக்காங்க இந்த சைன்டிஸ்ட்ஸ்?!
அதுக்கு இரண்டு
விதமான கருத்தியல(இதுவும் கருத்தியல் தானா?!) முன் வைக்குறாங்க.
ஒன்று மேலிருந்து
கீழ்நோக்கி செல்லுதல் (TOP
DOWN) மற்றொன்று கீழிருந்து மேலாகச் செல்லுதல் (BOTTOM UP)
அது என்ன குறுக்கெழுத்துப்
போட்டி மாதிரி மேலிருந்து கீழ் ன்னு சொல்றீங்க?
இப்போ இந்த கம்ப்யூட்டர
எடுத்துக்கோங்க, நான் முன்னாடி சொன்ன மாதிரி இரண்டு ரூம அடைச்சிக் கிட்டு கிடந்த பயபுள்ள
இப்போ உள்ளங்கையில் தவழும் செல்லப்பிள்ளை ஆகிவிட வில்லையா?
இது போல பெரிதிலிருந்து
சிறிது நோக்கிய நகர்வின் மூலமாக நானோ சைஸை அனுகுதல். இப்போ வருகிற கணினி சிப்ஸ் ல்
பயன்படுத்தப் படும் நுணுக்கங்கள் சில நூறு நானோ மீட்டர் வரை சென்றாகிவிட்டது. சோ ஒரு
நானோ மீட்டர் என்பது தொட்டுவிடும் தூரம் தான்.
”எலக்ட்ரான் கற்றைகளை
பாய்ச்சி எழுதுதல்( ELECTRON BEAM LITHOGRAPHY)”என்கிற நுட்பத்தின் மூலமாக சில நூறு
நானோ சைஸில் கட்டுமானங்களை கொண்ட மிகச் சிறிய மின்னணு சில்லுகளை தயாரிக்கிறார்கள்.
அப்படித் தயாரிக்கும் போது காற்றில் மிதக்கும் துகல்களால் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது
ஆகையால் அதெற்கென அமைக்கப் பட்ட ”க்ளீன் ரூம்” ல் தான் இந்த செயல்பாடுகள் நடக்கிறது.
நானோ ஸ்கேலில்
நடக்கும் இந்த சங்கதிகளை இப்போது பார்க்க இயலமா?
பார்க்க இயலுமாவா?
ஒரு தனிமத்தின் ஒவ்வொரு தனித்த அணுவையும் பார்க்கும் அளவுக்கு மைக்ரோஸ்கோப் வந்து விட்டது.
அதன் பெயர் ”ஸ்கேனிங் அண்ட் டன்னலிங்” மைக்ரோஸ்கோப்.
அதன் துணை கொண்டு ஒரு தனிம அணுவை
மற்றொரு மீடியத்தில் வைத்து லெஃப்ட் ரைட் வாங்க முடியும். ”நேர் நில், இயல் நில், வட்டமாக
நில், சதுரமாக நில்” என்றெல்லாம் பயிற்சி செய்ய வைத்து படம் எடுத்திருக்கிறார்கள்.
அடுத்து இந்த கீழிருந்து
மேல் எப்படி செய்யுறாங்க?
இந்த நுணுக்கம்
நமக்குத் தான் கை வரவில்லை. ஆனா நம்ம உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இந்த நுணுக்கத்தை
கையாலுகின்றன. விலங்கு மற்றும் தாவரங்களின் அடிப்படை அலகு செல் என்று படித்திருப்போம்.
அந்த செல்லில் உட்கரு, குரோமசோம், டி.என்.ஏ, ஜீன் என்றெல்லாம் பல அந்நியமான சொற்களை
கண்டிருப்போம். ஃபெயின்மான் சொன்ன மாதிரி எல்லாம் இல்லாமல் இப்போது உள்ள கண்டுபிடிப்புகள்
ரொம்பவே நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய துணையாக உள்ளதால் டி.என்.ஏ வில் உள்ள ஜீன்களின்
வரிசைதான் ஒரு உயிரின் விலாசம் என்று கண்டிருக்கிறார்கள். கேடு விளைவிக்கும் வைரசுக்கும்
உடலில் உள்ள செல்லுக்கும் நடக்கும் ஜீவ மரணப் போராட்டத்தை படம் பிடித்து டிஸ்கவரில
போடுறான்.
ஆக இந்த பாட்டம்
அப் டெக்னாலஜியை தான் நம்ம எரிக் டிரெக்ஸ்லர் மாலிக்குலர் நானோ டெக்னாலஜி என்று கூறுகிறார்.
இந்த டி4 என்கிற
ஒரு வைரஸ் ஒரு தேர்ந்த டாக்டரைப் போல நம் மீது மெல்ல அமர்ந்து அதன் உடலில் சுருள் சுருளாக
இருக்கும் டி.என்.ஏ வை இன்ஜெக்ட் பண்ணி விட்டு செல்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம்
ஆயிரக்கணக்கான டி4 வைரஸ்களின் உற்பத்திக் கேந்திரங்களாக நமது உடல் மாறிப் போகிறது.
ஏன் இந்த செல்பிரிதலில்
என்ன நடக்கிறது? ஒரு செல்லில் என்னனென்ன பாகங்கள் எல்லாம் உண்டோ அவை அத்தனையையும் கொஞ்சம்
கொஞ்சமாக இரண்டாக பிரித்துக் கொண்டு தங்களைத் தாங்களே ”கிள்ளி” க் கொண்டு தனிக் குடித்தனம்
போவதில்லையா?! இந்த செல் பிரிதலில் ரிபோசோம்கள் மீள் உருவாக்கத்திற்கான வழிபாடுகளை
செய்து தனிக்குடித்தனத்திற்கு ஆவன செய்கிறது. மாலிக்குலார் நானோ டெக்னாலஜியில் இந்த
வேலையை செய்பவைகள் “ஒருங்கிணைப்பாளர்கள்” (ASSEMBLERS) என்கிறார்கள்.
ஆக, இது தான் ஐடியா,
நானோ இயந்திரங்களை தங்களைத் தாங்களே மீள் உருவாக்கம் செய்யும் செல்ஃப் ரெப்ளிக்கேட்டர்ஸ்
ஆக உருவாக்க வழி உள்ளதா? என்று ஆராய்கிறார்கள். இந்த எந்திரன் படத்தில் ரெட் சிப் வைத்த
கெட்ட சிட்டி ஒத்த ஆளா நின்னு ஒரு பெரும் படையையே தன்னைப் போல உருவாக்கம் செய்யும்
இல்லையா? அந்த மாதிரி நானோ சைஸ் மெக்கானிசத்திற்கு சாத்தியம் உள்ளதா?
(மேட்ரிக்ஸ் படத்தில்
செல்ஃப் ரெப்ளிக்கேட்டிங் ரோபாட்ஸ் (ARTIFICIAL INTELLIGENCE) கையில் உலகம் சிக்கி
சின்னா பின்னமாகிறது. எந்திரங்கள் நம்மை ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆவது என்று
நல்ல முன்னேற்றமடைந்த செல்ஃப் ரெப்ளிக்கேட்டிங் ரோபாட்டால் விளைய சாத்தியமுள்ள மோசமான
விளைவுகளை படமாக்கி இருப்பார்கள்.)
எனவே இந்த இரண்டு
வகைகளில் நானோ டெக்னாலஜியில் இயந்திரங்களை தயாரிக்க இயலும் என்கிறார்கள். அப்படித்
தயாரிக்கப் படும் இரண்டு இயந்திரங்கள் 100 விழுக்காடு ஒத்திருக்கும். ஏனென்றால் கணக்காக
அணுக்களை அடுக்கி செய்தது அல்லவா? அங்கே குத்து மதிப்புக்கு வேலை இல்லை.
இயங்கும் போது
உராய்வினால் ஏற்படும் வெப்பமும் இல்லை, ஆகையால் லூப்ரிகேஷனும் தேவையில்லை. இப்போது
இருக்கும் ஃபாசில் எரிபொருட்களான பெட்ரோல், டீசல் போன்றவை வழக்கொழிந்து போகலாம். முற்றிலும்
தூய்மையான எரிபொருளான சோலார் எரிபொருளே எதிர் காலத்தில் கோலேச்சும்.
”ஆமாம் உட்டா ரொம்ப
கத விட்டுகிட்டே போறியே, இதில் ஏதாவது ஒன்றையாவது செய்து இருக்கிறார்களா? ஏதாவது பயன்பாட்டுக்கு
வந்திருக்கிறதா?! “
அது பற்றி அடுத்த
வாரம்.
No comments:
Post a Comment