Wednesday, October 11, 2017

லால்குடி டேஸ் – 10 விழித்திரையும் ஒளித்திரையும்


நாம இப்போ பாக்குறதெல்லாம் மொபைல் ஸ்கிரீன், டி.வி. ஸ்கிரீன், கம்ப்யுட்டர் ஸ்கிரீன்என்று ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபு க்ளைமாக்ஸில் கருத்து சொல்ல ஆரம்பிப்பார்.
மேலே குறிப்பிட்ட மூன்று மின்னணு திரைகளுக்கும் முன்னோடியானது தொலைக்காட்சித் திரை. 1980களில் உள்ளே வந்தாலும் வெகுவாக எல்லோராலும் வாங்கப்பட்டது 90 களில் தான். அப்போது டி.வி வாங்குவோர் எல்லாம் கட்டாயமாக ஆன்டெணாவும் அதற்கான உயரமான இரும்பு பைப்பும் வாங்க வேண்டும். மேலும் காற்றின் போக்கில் திரும்பி விடும் ஆன்டெணாவை டி.வி அலைவரிசையை கேட்ச் செய்யும் அளவிற்கு திருப்பிவிட ஸ்பானர் சகிதமாக ஒரு களப்பணியாளரை வீட்டில் வளர்த்து வர வேண்டும்.
எங்கள் சித்தப்பா வீட்டில் இருந்த சாலிடெர் டி.வி நன்றாக ஓடிக் கொண்டுதான் இருக்கும். ஆனால் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு சமயங்களில் மட்டும் அது பண்ணும் மக்கருக்கு அளவில்லாமல் போய்விடும்.
கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு இருக்கும் நாட்களில் உட்காரும் போதே ஸ்பானருடன் அமர்ந்திருப்போம். கிரிக்கெட்டில் டாஸ் போட்டு கவாஸ்கர் மொக்க போட்டு முதல் பந்து போடப்போகும் போது திடீரென்று கோபித்துக் கொள்ளும். உடனே நானும் சேகரும் களத்தில் இறங்கி விடுவோம். சேகர் மேலே ஏறி நட்டுக்களை தளர்த்தி ஆண்டெனாவை திருப்பி அலைவரிசையை கேட்ச் செய்ய முனைவார். நான் ஜன்னல் வழியே பார்த்து டி.வி சரியாக தெரிகிறதா என்று சொல்வேன். ஒரு வழியாக சரி செய்து மூச்சு வாங்கியபடி கீழே இறங்கி ஒரு இரண்டு மூன்று ஓவர் தான் பார்த்திருப்போம். அப்புறம் அடுத்த சோதனையாகபவர் கட்ஆகிவிடும். இதை ஒன்றும் செய்ய இயலாது என்பதால் ஒரு லைட் சுவிட்சைப் போட்டுக் கொண்டு எப்போ எரியும் என்றபடி ரேடியோப் பெட்டியில் கமென்ட்ரி கேட்டபடி அமர்ந்திருப்போம். ஒரு முக்கால் வாசி மேட்ச் முடிந்த பிறகு கரண்ட் வரும். எல்லா பிரச்சனைகளும் ஓய்ந்து மேட்ச் பார்த்தோம் என்றால் அன்றைக்கு இந்தியா படு தோல்வி அடைந்து விடும். நாங்கள் இப்படியாக மேட்ச் பார்க்க வேகமாக உட்கார்ந்து சோகமாக எழுந்து போன கதைகள்தான் ஏராளம்.
சரி இப்போ லால்குடிக்கு வருவோம். விடுதியில் அப்போதெல்லாம் டி.வி. கிடையாது. அப்போ கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது என்றால் பெரிய போராட்டம் தான்.
கடைத்தெருக்களில் எங்காவது ஒரு கடையில் கூட்டம் நெருக்கியடித்தது என்றால் அது டி.வி மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் இடம் ஆகும். கூட்டம் கூடுவதற்கு காரணம் அங்கே டி.வி யில் மேட்ச் ஓடிக் கொண்டு இருப்பதுதான்.
சில பரந்த மனம் படைத்த வீட்டுக் காரர்கள் டி.வியை சற்று வெளிப்புறமாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் தள்ளி வைத்து விடுவார்கள். சிலர் அங்கே சென்று முழு மேட்சையும் பார்த்து முடித்து விட்டுத்தான் வருவார்கள். “டே நைட்மேட்ச் தொடங்கப்பட்டது 90 களின் ஆரம்பத்தில் தான். “டேநைட்மேட்ச் என்றால் இரண்டாம் பாதியை பஞ்சாயத்து போர்டு தொலைக்காட்சிப் பெட்டியில் எவ்வித இடையூறும் இன்றி பார்த்து ரசிக்கலாம்.
சுயமரியாதைக்குபங்கம் ஏற்பட வாய்ப்பு இருந்த காரணங்களினால் நான் கடைகளின் முன்னோ அல்லது யாராவது வீடுகளின் முன்னோ நின்று டி.வி பார்க்க முனைந்தேன் இல்லை. எனவே பஞ்சாயத்து போர்டு டி.வி மட்டும் தான் பார்ப்பேன். அதிலும் கிரிக்கெட் மற்றும் வெள்ளிக் கிழமைஒளியும் ஒலியும்புதிய திரைப்படப் பாடல்கள் மட்டுமே பார்ப்பேன்.
ஞாயிற்றுக் கிழமை இரவிலும் வெள்ளிக் கிழமை இரவிலும் விடுதியில் சாப்பிடும் நிகழ்வானதுஃபாஸ்ட் ஃபார்வர்ட்மோடில் நடக்கும். சாப்பாட்டை வாங்கி ஒரு நான்கைந்து கவளமாக உள்ளே தள்ளி தண்ணீர் ஊற்றி இரைப்பையை மூடி பஞ்சாயத்து போர்டு தொலைக்காட்சி இருந்த அருகாமை மணக்கால் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்கு விரைந்து விடுவார்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் கூட பெரிய பசங்களை விடுதியில் பார்க்கலாம். ஆனால் வெள்ளிக் கிழமை அன்று ஒருவரையும் பார்க்க இயலாது. புதியப் படப்பாடல்கள் அந்த திரைப்படங்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் எல்லோரும்ஒளியும் ஒலியும்நிகழ்ச்சியை விரும்புவார்கள்.
அங்கும் இங்கும் ஓடி ஓடி டிவி பார்த்த எங்களுக்கு பிரத்தியேகமாக எங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு நாளில் டி.வி, டெக்கு மற்றும் இரண்டு படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தின விழா நாட்களில் வார்டன் அதற்கான தொகையை கொடுத்து விடுவார். பத்து பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய குழு ஒன்று என்ன படம் போடலாம் என்று விவாதித்து முடிவு செய்வார்கள்.

தேசிய விழாக்களான சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களில் சிறப்பு உணவு உண்டு. காலை சாப்பாட்டுக்கு பின்னர் ஒரு படம். மதியம் சாப்பிட்டப் பிறகு ஒரு படம் என்று இரண்டு படங்களை கொண்டாட்டமாக பார்த்து முடிப்போம்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...