Thursday, November 30, 2017

நானே நானோ-1

நானே ”நானோ”!!

என்ன ரொம்ப ஃபிலாசபிக்கலான தலைப்பா இருக்கேன்னு பாக்குறீங்களா?
இது அந்த நானோ அல்ல அறிவியல் தொடர்பான NANO.
அய்யய்யோ எங்க தலை தெறிக்க ஓடுறீங்க? நீங்க நினைக்கிறமாதிரி இது டூமச்சான அறிவியல் தொடர்பானது இல்லைங்க. நானோ டெக்னாலஜி வேகமாக வளர்ந்துவரும் இயற்பியல் புலம். அது சார்ந்த சுஜாதா புத்தகம் மற்றும் இணையத்தில் மேய்ந்த நுனிப் புற்களை சற்று சுவாரசியமாக பகிரலாம் என்று எண்ணுகிறேன்.
நானோ என்பது எந்த ஒரு அறிவியலுக்கும் சொந்தமான ஒரு பிரிவு இல்லைங்க. மீட்டர் சென்டி மீட்டர் மாதிரி அதுவும் ஒரு சைஸ் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய அல்லது சிறிய சைஸ்?
வாங்க, அது தான் மேட்டரே!
ஒரு மீட்டரை நூறு கோடியா பிரிச்சி அதுல ஒரு பகுதிய எடுத்தா அது தாங்க நானோ மீட்டர்.
யப்பா ஒண்ணும் விளங்கலையேப்பா!
குண்டூசி முனையில் 10லட்சத்தில் ஒரு பங்கு.
நீங்க படிக்கிற நியூஸ் பேப்பரோட திக்னஸ் ஒரு இலட்சம் நானோ மீட்டர் தெரியுமா?
நானோ மீட்டர் ஒரு சிறு கூழாங்கள் என்றால் மீட்டர் என்பது இந்த பூமி.
அறிவியல் பாடத்தில் அணுக்கள் பற்றி படிச்சிருப்பீங்க இல்லையா?
அணு மிகவும் நுண்ணியது என்று சொல்லியிருப்பாங்க இல்லையா?
நானோ என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை வரிசையாக நிற்க வைத்தால் எவ்வளவு நீளம் இருக்குமோ அவ்வளவு நீளம் இருக்கும்.
“ஜீ பூம்பா” போட்டு உங்கள நானோ மீட்டர் சைசுக்க சுருக்கி விடுவதாக வைத்துக் கொள்வோம்.
நீங்க அணுக்களை உதைத்து ஃபுட்பால் விளையாடலாம்.
தலைமயிரின் உள்ளே பங்களா கட்டி குடியேறலாம்.
கண்ணுக்கு புலப்படாத நுண் கிருமிகள் எல்லாம் கூட உங்களுக்கு டைனோசராகத் தெரியும்.
எங்கள் கண்ணுக்கு புலப்படாத கரியமில வாயுவும் பிராண வாயுவும் உங்க கண்ணுக்கு அணுக் கூட்டங்களாகவே தெரியும்.
டி.என்.ஏ புரத இரட்டைச் சுழல் சங்கிலியில் தொங்கிக் கொண்டு சர்க்கஸ் ஆடலாம்.
சோ நானோ என்றால் உங்களுக்கான சட்டைத் துணியை சமமாக பிரித்து இந்தியாவில் உள்ள அனைத்துப் பேருக்கும் வெட்டிக் கொடுத்தால்  என்ன சைஸ் கிடைக்குமோ அந்த சைஸ் தான்.
சரி சரி ரொம்ப ஓவரா மொக்க போடல, அடுத்த விஷயத்துக்கு வரேன்.
’ரொம்ப ரொம்ப நுண்ண்ண்ணிய அளவு. அவ்வளவு தானே? அதுக்கு என்ன இப்போ?’ என்று நீங்க நினைப்பது புரிகிறது.
கணினியில் பயன் படுத்தப் படும் சில்லுகள் எல்லாம் ”மூர்” என்பார் கூறிய கூற்றின் படி அளவில் சிறியதாக சுருங்கிய வண்ணமும் செயல் பாட்டுத் திறன் அதிகரித்த வண்ணமும் ஆண்டு தோறும் செல்கின்றன.
இப்போது தயாரிக்கப் படும் சில்லுகள் எல்லாம் கிட்டத் தட்ட 100 நானோ அளவுக்கு சிறியதாக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
நானோ டெக்னாலஜி அறிவியலாளர்களின் அல்டிமேட் நோக்கம் ”அணு அளவில் சென்று பொருட்களை இஷ்டப் படி மாற்றுவது” என்பதாக உள்ளது.
அதனால் என்ன பயன் கிட்டப் போகிறது?!
இப்போது நடைமுறையில் உள்ள “சோலார் பேனல்கள்“ அதன் மீது விழும் சூரிய ஒளியில் சிறிதளவை மட்டுமே மின்சாரமாக மாற்றுகிறதாம். நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி மூலமாக அதன் திறனை பல மடங்கு அதிகரிக்க இயலுமாம்.
கடல் நீரில் இருந்து ”ஹச் டூ ஓ” (நீர் மூலக்கூறு) ஐ மட்டும் அழகாக வடிக்கட்டி மினரல்ஸ் சேர்த்து குடிக்க குளிக்க பயன்படுத்தலாம். வீராணத்தில் இருந்து சென்னைக்கு நீர் போவது மாறி சென்னையில் இருந்து நீர் கொண்டு வந்து வீராணம் ஏரியை நிரப்பும் நாள் கூட வரக்கூடும்.
டி.என்.ஏ சங்கிலியில் ஒளிந்து இருக்கும் மரபு வழி குறை பாட்டை உதைத்து வெளியேற்றி நமது சந்ததிக்கே அந்த மரபு நோய் இல்லா நிலையை உண்டு பண்ணலாம்.
உடலுக்குள் படையெடுத்து நுழைந்து அழிச்சாட்டியம் செய்யும் நோய்க் கிருமிகளை உதைத்து வெளியேற்ற நானோபாட்(NANO ROBOT) படையை அனுப்பலாம். அல்லது சாத்வீகமாக அந்த கிருமிகளில் உள்ள ”ரெட் சிப்(எந்திரன் புகழ்)” ஐ கழட்டி நண்பனாக்கிக் கொள்ளலாம்.
நானோ பாட் படையை ரத்த நாளங்களுக்குள் மாதம் ஒரு முறை அனுப்பி ஒட்டடை அடித்து சுத்தம் செய்யச் சொல்லலாம். அப்புறம் என்ன டெய்லி மூணு வேளையும் பூரியும் பஜ்ஜியும் எண்ணை சொட்டச் சொட்ட சாப்பிட வேண்டியது தான்.
“எவ்வளவோ பண்றோம் இதப் பண்ண மாட்டோமா?” என்று இதையெல்லாம் உடனே செய்யலாம்தான். ஆனால் இந்த இயற்பியலில் சாதாரண நிலையில் உள்ள சட்ட திட்டங்களை குவாண்டம் அளவிலான துகல்கள் மதிப்பது இல்லை. அது அது இஷ்டத்துக்கு நடந்துக்குது. அந்த நிலையற்ற தன்மை சற்று அச்சுறுத்தலாக உள்ளதாக அறிவிலாளர்கள் கூறுகிறார்கள்.
நானோ டெக்னாலஜி பற்றி நான் ஒன்றும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை இது வெறும் ட்ரெய்லர் தான். அடுத்த பாகத்தில் மெயின் பிச்சரை ஸ்டார்ட் பண்றேன்.
(எனது நட்பு வட்டத்தில் உள்ள இயற்பியல் முனைவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் என்மேல் கொலைவெறி கொள்ளாதீர்கள். இது டெக்னிக்கலான பதிவு அல்ல. ஒரு மேம்போக்கான பகிர்வு மட்டுமே. எனவே சித்தாந்த ரீதியிலான தவறுகள் இருந்தால் கண்டிப்பாக கமெண்ட் பண்ணுங்க எல்லோருக்கும் விளங்கும்)



1 comment:

  1. Mano is nothing but Size & it means very very Small - through you article i learned. Thank You Sir.

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...