Wednesday, January 3, 2018

நானே ”நானோ”-5 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு…

நானே ”நானோ”-5 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு…


”மக்களை மரணத்தின வாயிலை நோக்கி நெட்டித் தள்ளும் கேன்சருக்கு ஏதாவது புது வித வைத்தியம் உங்க நானோ டெக்னாலஜி தருமா?”
“கேன்சர் என்றாலே சற்றேறக்குறைய மரணம் தான் என்பதெல்லாம் பழைய கதை தான் இனிமே“
“ஏம்பா அதுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டிங்களா?”
“மருந்தெல்லாம் கண்டுபிடிக்கல ஆனா இருக்கிற மருந்தையே நல்லா எஃபெக்டிவா பயன்படுத்தும் டெக்னிக்க கண்டுபிடிச்சிருக்காங்க”
“குணப் படுத்த முடியுமா முடியாதா எதுவா இருந்தாலும் நேராவே சொல்லு!”
“கேன்சர் பேஷண்டுக்கு கீமோ தெரப்பி என்று ஒரு வைத்தியம் உண்டு. அதாவது கேன்சர் பாதிப்படைந்த இடத்தில் உள்ள கேன்சர் செல்களை கொல்வதற்கு மருந்து கொடுப்பாங்க”
“அதெப்படிப்பா கேன்சர் பாதிச்ச செல்களுக்கு மட்டும் கரெக்டா மருந்து கொடுத்து கொல்ல முடியும்?”
“அதான் மேட்டரே, கேன்சர் பாதித்த செல்களை கொல்வதற்கு கொடுக்கும் மருந்து நல்ல செல்களையும் கொன்று விடும். அதனால் கீமோ கொடுப்பதென்பது நோயாளிகளை மிகவும் பலவீனப் படுத்தி விடும். முடி கொட்டுதல் வாய் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் வெந்து போதல் என்று சொல்லெனா துயரத்தை அனுபவிப்பார்கள்“
“அடடா ஆமாம்பா”
“நானோ டெக்னாலஜி மூலமாக தயாரிக்கப் படும் மருந்து துகல்கள் கேன்சர் செல்களால் கவர்ந்திழுக்கப் பட்டு பின் அந்த செல்களையே அழித்து விடும். மிஷன் துல்லிய வெற்றிதான்“
“கேன்சர் செல்கள் தங்களுக்கான மரணத்திற்கு தாங்களே வழி வகுத்துக் கொள்ளும்”
“ஆமாம், எமனுக்கு வரவேற்பு வாசிக்கும்”
”ஆமாம், இதுவாவது நடைமுறைக்கு வந்துடுச்சா இல்லையா?“
“ஆங்கில மருத்துவத்தில் ஒரு மருந்து வெளியே வரணும்னா அதற்கு பல நிலைகள் உண்டு. இந்த மருந்து ஆராய்ச்சியில் இரண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. இரண்டுமே “கிளினிக்கல் ட்ரயல்“ என்கிற இறுதி நிலையை எட்டியுள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்”
“எப்பா கொஞ்சம் இரு சுகர் எறங்குன மாதிரி இருக்கு, மயக்கமா வருது ஒரு சாக்லேட் பிரிச்சி போட்டுக்குறேன்”
“என்னண்ணே உங்களுக்கும் சுகரா?”
“ஆமாம்பா, இங்கதான் நூத்துக்கு தொண்ணூறு பேருக்கு சுகர் இருக்கே”
“கவலைப் படாதீங்க, சுகருக்கும் வைத்தியம் இருக்கு”
“எப்படிப்பா? இன்சுலின் மாத்திரை போட வேண்டியதில்லையா?”
“இப்போ உங்களுக்கு ஏன் மயக்கம் வந்தது?“
“ரத்தத்தில் சுகர் கொறஞ்சி போச்சி“
“ஆங், அதான் பிரச்சினை, அதாவது சுகர் ஏறிப் போச்சின்னு இன்சுலின அனுப்பி கட்டுப் படுத்தறீங்க, நம்ம உடலில் இருக்கும் இயற்கையான இன்சுலின் சுரப்பு அமைப்பு சுகருக்கான சரியான விகிதத்தை பேணி வருவதால் இயல்பு நிலையில் உள்ள யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனா நீங்க செயற்கையா எடுத்துக் கொள்ளும் இன்சுலினால் ஏற்படும் சுகர் ஏற்றத் தாழ்வினை நீங்கள் தான் பேலன்ஸ் செய்து கொள்ளவேண்டும்”

“ஆமாம்பா, உட்டா ரொம்ப சுகர எறக்கி லோ சுகர்ல உட்றுது”
“அதுக்குத்தான், இன்சுலினும் என்சைம்களும் கொண்ட அணிக்கோவை கட்டமைப்பு நானோ பார்டிக்கிலாக (சுமார் 100 நானோ மீட்டர் அளவு) மருந்தின் மூலம் தரப்படும்”
“அதென்னப்பா அணிக்கோவை கட்டமைப்பு?”
“அதாவது இன்சுலின் என்சைம்களுடன் இறுக்கமாக கைகோர்த்துக் கொண்டு இருக்கும். ரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகமாகும் போது ஒரு ஹைட்ரஜன் அயனி உருவாகி அந்த அமைப்புக்கு ஒத்த மின் தன்மையை அளிக்கும். ஒத்த துருவங்கள் விலக்கும் ஆகையால் அணிக்கோவை கட்டமைப்பு திறந்து கொண்டு இன்சுலின் வெளியேறி வேலையை செய்யும்”
“ஆமாம்பா மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பது இந்த சுகருக்குத்தான் பொருத்தம்“
“என்ன உங்க பையனை காணும் வெளியில விளையாடவே வரதில்ல?”
“அட ஏம்பா கேக்குற அவனுக்கு வைரஸ் காய்ச்சல். அதான் ரெஸ்ட் எடுக்குறான்”
“அடடா, இந்த வைரஸ் சம்மந்தப் பட்ட வியாதிகளையும் நானோ டெக்னாலஜி மெடிசின்கள் குணமாக்க ஒரு அற்புதமான வழியை வைத்துள்ளன”
“ஆனா இந்த வைரஸ்கள் தான் நொடிப்பொழுதில் கோடிக்கணக்கா பெருகி போகுதே”
“ஆமாம், அதனால அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ணி விட்ற வேண்டியது தான்!”
“என்னப்பா சொல்ற?”
“நானோ மெடிசின் மூலமா வைரஸ்களின் இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்தும் என்சைம்களை கொடுத்து கச்சிதமா வேலையை முடிச்சுடலாம்”.

”சரி இப்போ இது போதும் ஆள விடுப்பா அடுத்த வாரம் சந்திப்போம்”

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...